நாம் தமிழர் சீமான் முகத்திரை கிழிகிறதா?

இலங்கைத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்த இலங்கையின் மீதும், இலங்கைக்கு உதவி செய்வதாக இந்தியா மீதும், மாநில திமுக அரசின் மீதும் பேச்சுப் போர் தொடுத்து சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் திரு சீமான்.

அரசியலில் கலைஞரின் சாணக்கியத்தனத்தை விடவும் சிறந்தவராக இவரை நான் கருதினேன்.  கலைஞர் கட்சியின் தலைமையிடத்திற்கு வர தண்டவாளத்தில் தலையைக் கொடுத்தார். ஆனால் சீமான் என்ன செய்து நாம் தமிழர் அமைப்பை உருவாக்கினார் என்று பார்த்தால் இவரின் சாணக்கியத்தனம் கலைஞரை விடச் சிறந்தது என்றுச் சொல்லலாம். அரசை எதிர்த்துப் பேசினார் என்பதற்காக கைது செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக சோடாபாட்டிலில் பொங்கி வரும் நுரை போல தமிழன், தமிழ் என்ற உணர்வலையில் சிக்கிய தமிழர்களை, அவர்களின் உணர்ச்சிகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி நாம் தமிழர் என்ற அமைப்பை உருவாக்கினார்.

இவரின் பேச்சைப் பார்த்த போது நானும் இவரின் பேச்சுக்கு விசிறி ஆனதுண்டு. தமிழனுக்காக தன்னையே அர்ப்பணிக்க துணிந்திருக்கின்றாரே என்று அவர் மீது பேரபிமானம் கொண்டேன். என்னைப் பற்றி அனைவரும் தவறாக நினைத்து விட்டீர்கள் என்று தற்போது தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் திரு சீமான் அவர்கள்.

எங்கிருந்தோ பேசும் நண்பர்கள் கூட இனி தமிழனுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வைகோவைச் சேர்த்து சீமானும் இருப்பார் எனச் சந்தோஷமாகச் சொல்வார்கள். சீமானை தமிழனின் ஐக்கானாக நினைத்தவர்களின் நினைப்பில் சம்மட்டி அடி விழுந்திருக்கிறது.

குமுதத்தில் வெளியான ஒரு கட்டுரையை படித்து விட்டு என் நண்பர்  சீமான் தன் சினிமாக்கார புத்தியைக் காட்டி விட்டாரே  என்று வருத்தப்பட்டார். தமிழனுக்கா தன்னலம் கருதா தமிழன் ஒருத்தனும் கிடையாதே என்று போனிலேயே புலம்பித் தள்ளினார். தொடர்ந்து திரு சீமானுக்கு திரு சூர்யாவின் கால்சீட் நிச்சயம் கிடைத்திருக்கும் என்றார். தமிழர்கள் என்றைக்குத் தான் திருந்தப்போகின்றார்களோ தெரியவில்லை என்றார் தொடர்ந்து.

தமிழனைக் கொன்று குவித்த இலங்கையின் அழைப்பை ஏற்று, தமிழர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் ஏளனமாக நினைத்து, மேடையில் தமிழர்களை படு காட்டமாக விமர்சித்த விவேக் ஓபராய் நடித்த ரத்த சரித்திரா தமிழ் நாட்டில் வெளியிடப்படப் போகுதாம். இப்படத்தில் திரு சூர்யாவும் நடிக்கிறாராம்.

தமிழ் அமைப்புகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.

இது பற்றி சீமான் அவர்கள் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியிடப்பட்டிருப்பதை கீழே படியுங்கள்.

இதுகுறித்து  ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானிடம் கேட்டோம். ‘‘நாம் தமிழர், தமிழருக்கான இயக்கம். ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் தம்பி சூர்யாவின் தமிழுணர்வை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. கொழும்பு விழாவுக்கு முன்பே தொடங்கப்பட்ட படம், ‘ரத்த சரித்திரம்’. விவேக் ஓபராய்க்காக அந்தப் படத்தை எதிர்த்தால், அது என் தம்பி சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடும். சூர்யாவுக்காக விவேக் ஓபராயை இந்தமுறை மன்னித்து அனுமதிக்கிறோம். அதே நேரத்தில் இனிமேல் விவேக் ஓபராய் நடிக்கும் எந்தப் படத்தையும் தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

தான் வைத்திருக்கும் அமைப்பின் பெயருக்கும் மேற்படி பேட்டிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் பேசியிருக்கிறார் திரு சீமான் .  திரு சீமானின் தமிழ் , தமிழன் என்ற முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

அன்புடன்

பஞ்சரு பலராமன்

One Response to நாம் தமிழர் சீமான் முகத்திரை கிழிகிறதா?

  1. eelamaran சொல்கிறார்:

    vanakkam aija
    ningal குமுதம் ரிப்போர்ட்டர் partha seithy ungalukku thavaraga theriyalam anal athaukku pinnal yenna irukkuthunu theriyama kathaikkiringal
    seeman avarkal suriyavidam 12 kulanthaikalai padippatharkka vittullar
    intha kulanthaikal iruthy uththathil amma appa vai elantha kulanthaiakal seeman suriya padaththai ethirththal antha kulanthaikalin nilai yenna akum yosingal ungalukkum kulanthaikal irukkum ningalum yosiungal

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: