தொடர்ச்சி :நாம் தமிழர் சீமானின் முகத்திரை கிழிகிறதா?

அய்யா, நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் பார்த்த செய்தி உங்களுக்கு தவறாக தெரியலாம். ஆனால் அதற்குப் பின்னால் என்ன இருக்குதுன்னு தெரியாம கதைக்கின்றீர்கள்.

சீமான் அவர்கள் சூர்யாவிடம் 12 குழந்தைகளை படிப்பதற்கு விட்டுள்ளார். இந்தக் குழந்தைகள் இறுதி யுத்தத்தில் அம்மா, அப்பாவை இழந்த குழந்தைகள். சீமான் சூர்யா படத்தை எதிர்த்தால் அந்த குழந்தைகளின் நிலை என்ன ஆகும் யோசியுங்கள். உங்களுக்கும் குழந்தைகள் இருக்கும் நீங்களும் யோசியுங்கள்.

– : ஈழமாறன்

( பின்னூட்டத்தில் இருந்ததை தமிழில் கொடுத்திருக்கிறேன்)

அன்பு ஈழமாறனுக்கு,

பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. எனது கருத்தை எழுதியிருக்கிறேன். நாளை மாறவும் கூடும். யாருக்குத் தெரியும்? ஏனென்றால் நான் திராவிட பரம்பரையில் வந்தவன். எங்களுக்கு கொள்கைகளை விட சந்தர்ப்பவாதம் தான் முக்கியம் என்பது உங்களுக்கு நன்கு புரியுமென்று நினைக்கிறேன். ஏனென்றால் சந்தர்ப்பவாதிகளைத்தான் தமிழர்கள் தலைவர்களாகக் கொண்டாடுகிறார்கள். அதற்கு அரசியல் சாணக்கியத்தனம் என்ற பெயரும் சூடி மகிழ்கின்றார்கள்.

மற்றபடி நீங்கள் சொல்லிய விஷயம் தற்போது தான் எனக்கு தெரியும்.  இக்குழந்தைகளை தனது அகரம் பவுண்டேஷனில் இணைத்துக் கொண்ட சூர்யாவிற்கு முதலில் நன்றியினைத் தெரிவிக்கிறேன். மேலும் இக்குழந்தைகளின் மீது அன்பு கொண்டு பாதுகாக்க முயலும் சீமானுக்கும் நன்றியினை தெரிவிக்கிறேன். அக்குழந்தைகள் நலனுக்கு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் கவலையே பட வேண்டாம். சீமான் சூர்யாவின் படத்தை எதிர்த்தால் குழந்தைகளுக்கு பிரச்சினை உண்டாகும் என்பதெல்லாம் சற்றே மிகையானது என்பது என் எண்ணம். சூர்யா அந்தளவுக்கு தரம் தாழ்ந்தவர் இல்லை.

அன்புடன் – பஞ்சரு பலராமன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: