கள்ளக்காதலில் மீனா?

காதலில் ஒரு வகை கள்ளக்காதல். செய்திதாள்கள் மற்றும் வாரப் பத்திரிக்கை முதலாளிகளுக்குப் பிடித்த வார்த்தை கள்ளக்காதல். ஒரு பத்திரிக்கையின் முக்கியமான தலைப்புச் செய்தியாக கள்ளக்காதல் செய்திகள் இடம் பெறும். நாம் பெறாத இன்பத்தை வேறு எவனோ பெற்று மாட்டிக் கொண்டானே என்ற பச்சாதாபத்தில் அந்த விஷயத்திற்கு ஆசைப்படும் சில வாசகர்கள் இம்மாதிரிச் செய்திகளைத் தேடிப்பிடித்துப் படிப்பார்கள். சிலர் எப்படி மாட்டிக் கொண்டார்கள் என்ற விபரம் தெரிந்து கொள்ளவும் படிப்பார்கள். இது போல எண்ணற்ற கள்ளக்காதல்கள் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலான கள்ளக்காதல்கள் வெளியில் தெரிவதில்லை.

உங்களிடம் இந்தக் கள்ளக்காதலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். வலுவுள்ள்வன் வாழ்வான் என்பார்கள். அதே போல வலிமையான ஆண் ஒருத்தன் பெண் ஒருத்தியைக் கவர்ந்து அதாவது காதலித்து, மேட்டர் முடித்து விட்டான். ஒரு மாதம் கர்ப்பம். இதற்குள் மற்றொருத்தன், இவன் சற்று வலிமையற்றவன். அப் பெண்ணைப் பார்த்து காதல் அம்பு விட, ஆசை தொற்றிக் கொண்டது. ஆனால் வலிமையுள்ளவனை நெருங்கவே முடியாது. என்ன செய்யலாமென்று உட்கார்ந்து யோசித்தான். பெண் வேடமிட்டு அந்த வலியவனைக் கவர்ந்தான். அவனது வீட்டிற்குள் நுழைந்தான். வலியவன் இருக்கும் போதே, மேட்டர் முடித்து விட்டு எஸ்கேப்பாகி விட்டான். அந்த பெண்ணி வயிற்றில் தற்போது இரண்டு ஆண்களின் வாரிசுகள் வளர்கின்றன. இந்தக் கள்ளக்காதலர்களை நான் நன்கு அறிவேன். அவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிய வேண்டும் என்ற ஆவலில் இவர்களின் படங்களை வெளியிடுகிறேன். பார்த்து விட்டு என்ன நினைக்கின்றீர்களோ அதை பின்னூட்டமாக எழுதுங்கள்.

போதையில்

டாஸ்மாக்கில்

கவுந்து கிடக்கும்

உங்களின்

உள்ளம் கவர்ந்த

குடிகாரன்.

குறிப்பு : டிஸ்கவரி சானலில் கடலுக்குள்ளே மீன்களுக்குள் நடந்த அப்பட்டமான கள்ளக்காதலை போதையில் கண்டு களித்த குடிகாரன், போதையிலேயே எழுதியதால் தலைப்பையும் குழப்பமாக எழுதி விட்டான். அந்த மீன் பேர் கெட்லியோ என்னவோ தெரியவில்லை. தலைப்பைப் பார்த்து விட்டு பரபரப்பாய் படிக்க வந்தவர்களுக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். குடிகாரன் ஒரு பேமானி. சோமாறி. அவன் எழுதுவதையெல்லாம் படிக்காதீர்கள். உங்களையும் குழப்பி விட்டு விடுவான். ஜாக்கிரதை.

உங்களை நேசிக்கும்

உங்களின் குஞ்சு.

One Response to கள்ளக்காதலில் மீனா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: