ஹரியுடன் நான் திமிர்த்தனம்

புகழ் பெற்ற கர்நாடக சங்கீத விற்பன்னரும், மேற்கத்திய இசையில் நுண்ணிய அறிவும் கொண்டவரும், இசையுலகில் அசைக்க முடியாத ஓர் இடத்தில் இருந்து வருபவருமான எனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சியை அவசியம் பாருங்கள் என்று சொன்னார். என்ன விசேஷம் என்று கேட்டேன். நீங்கள் அவசியம் பாருங்கள் பாலா என்றார்.

நிகழ்ச்சியை பார்த்தேன். ரத்தம் கொதித்தது. இவர்களெல்லாம் என்ன மனிதர்களா இல்லை மிருகங்களா என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

ஜேம்ஸ் வசந்தன் என்ற முன்னாள் டிவி காம்பியரர், ஏதோ ஒரு படத்தில் இசையமைத்து விட்டாராம். இசையுலகையே தாம் தான் ஆளுவது போல மண்டைக்கனம் பிடித்தவர் போல பேசுகிறார். மற்றொரு இசைக்கோர்வையாளர் சரத்தும், ஹரிஹரன் என்ற கிழட்டு முக்கல் முனகல் பாடகருக்கு இருக்கும் திமிரும், அகம்பாவமும், தானென்ற மண்டைக்கனமும் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

ஹரிஹரன் முக்கலுக்கு பெயர் பெற்றவர். தான் ஒரு இசைச் சக்கரவர்த்தி என்று நினைத்துக் கொள்ளும் ஜேம்ஸ் வசந்தனுக்கு இருக்கும் திமிரும், அகங்காரமும், மண்டைக்கனமும் அப்பப்பா சொல்ல முடியாது. பாட வருபரையெல்லாம் இவர்கள் வீட்டு மாடு மேய்ப்பவன் போல அவன், இவன் என்ற அழைத்து எக்காளப் பேச்சு பேசுகிறார்கள். அது மட்டுமல்லாமல் கிண்டல் வேறு. ஜேம்ஸ் வசந்தன் பாடினால் கழுதை தூக்குப் போட்டு செத்துப் போகும். அந்தளவுக்கு கொடூரமான குரல் கொண்ட இவர், பாட வரும் இளைஞர்களைக் கிண்டலடிக்கிறார். சுதி சுத்தம் அது இதுவென்ற குறிப்புகள் வேறு.

ஏன்யா நீங்களெல்லாம் சுதியோடுதான் இசையமைக்கின்றீர்களோ? ஒரு பாடலைப் பாடும் முன்னே எத்தனை பிசகுகள் செய்கின்றீர்கள்?

தமிழே ஒழுங்காகப் பேசத்தெரியாத சரத் ஹிக்கீ பிக்கீ என்று சிரித்துக் கொண்டு பாட வருபவர்களை அவர்கள் மனம் புண்படுமாறு விமர்சித்து, வேதனைப்படுத்தி வருகிறார். நக்கல் என்றால் நக்கல் அப்படி ஒரு நக்கல். பாலமுரளி கிருஷ்ணாவின் சீடராம் இவர்.

நாகரீகம் தெரியாதவாறு உட்கார்ந்து கொண்டு கமென்ட் அடிக்கிறார் ஹரிஹரன். சக மனிதனை மதிக்கத் தெரியாதவனெல்லாம் மனிதனே இல்லை என்பது எனது எண்ணம். இவர்கள் மூவரும் செய்யும் காரியங்கள் எத்தனை இளம் உள்ளங்களை கொத்துக்கறியாக்கி வேதனைப்படுத்தி வருகிறது என்பதை டிவி பார்க்கும் அனைவரும் காணலாம். ஜெயா டிவிக்கு இதை போன்ற நிகழ்ச்சியும், மற்றவரை வேதனைப்படுத்தும் ஆட்களின் தயவும் தேவையா? பாடகர்களும், இசைக்கோர்வையாளர்களும் காணாமல் போய் விடுவார்கள்.

ஜேம்ஸ் வசந்தனும், ஹரிஹரனும், சரத்தும் ஒரு நாள் கால வெள்ளத்தில் காணாமல் போய் விடுவார்கள். இதோ இளையராஜாவின் கதி என்ன என்று அனைவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். எம் எஸ் விஸ்வனாதன் எங்கே இருக்கிறார் இப்போது என்று யாருக்காவது தெரியுமா?  இவர்களால் கிண்டல் செய்யப்படும் நபர்கள் நாளைக்கு நிச்சயமாய் இசையுலகில் அடியெடுத்து வைப்பார்கள். அன்றைக்கு மேற்படி மூவரும் நிச்சயமாய் காணாமல் போய் விடுவீர்கள்.

ஜேம்ஸ், ஹரிஹரன், சரத் ஆடாதீர்கள். இறைவன் ஒரு நாள் உங்களை அடக்கி விடுவானென்பதை கவனத்தில் கொள்க.

இப்படிக்கு,
பஞ்சரு பலராமன்

9 Responses to ஹரியுடன் நான் திமிர்த்தனம்

 1. baasakar சொல்கிறார்:

  ஜேசுதாஸ் ,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஜெயச்சந்திரன் ,போன்ற பாடகர்களின் பாடல்கள் இன்னும் கேட்க தூண்டும் ,ஆனால் ஹரிஹரரின் பாடல்கள் சில நாட்கள்தான், முதலில் அவர் தன் தலை முடியை கட்பன்னட்டும். இவனும் ஒரு பாடகனா? இப்போது உள்ள நல்ல பாடகன் ஹரிஸ் ராகவேந்திரா

 2. Gobinath சொல்கிறார்:

  hello sir,
  do you think as this your blog you can comment on anything you want?
  The program is utter nonsense i accept that but you have unnecessarily commented on illaiyaraja and MSV. See all the artists have their own “Mandaikanam” as because they have talents but dont say that they are no where now. Still their songs are here and you dont know how many people still hearing their songs?
  Thanks

 3. […] பதிவு 1 (ஹரியுடன் நான் திமிர்த்தனம்) […]

 4. Ramesh. R சொல்கிறார்:

  “ஹரிஹரன் எவ்ளோ பெரிய பாடகர்… எத்தனை சூப்பர் ஹிட் சாங்க்ஸ் கொடுத்திருக்கார் தெரியுமா?… அவரப் பத்தி விமர்சனம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு?…. ” இப்படியெல்லாம் பல்வேறு கண்டனக் குரல்கள் எனது நண்பர்களிடமிருந்து… உண்மைதான் நண்பர்களே.. ஹரிஹரன் ஒரு சிறந்த பாடகர் என்பதை நான் மறுக்கவில்லை.. எப்படிப்பட்ட மகா மேதையாகவே இருந்தாலும் பணிவும் பண்பும் இல்லையெனில் அவர் மேதையாக மட்டுமல்ல மனிதனாகவே மதிக்கத் தகுதியற்றவர் என்பதுதான் உண்மை!.. முதலில் ஒரு அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் தெரிய வேண்டும்.. மாபெரும் இசைக்கலைஞன், இசை மேதை என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது.. அவர் நடத்துகிற நிகழ்ச்சி ஒரு இசைப் போட்டி .. இசையை மதிப்பவராக இருப்பின் அப்படித்தான் அசால்டாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு காலை ஆட்டிக்கொண்டு அலட்சியமாக போட்டியாளர்களை விமர்சிப்பாரா?.. அந்த ஜேம்ஸ் வசந்தன் போட்டியாளர்களை அநாகரிகமாக விமர்சிக்கிறார்.. அஹ்டைக் கேட்டு ரசிக்கிறார் ஹரிஹரன்.. அதேபோல தமிழ் மொழியறிவே சிறிதும் இல்லாத சரத் நையாண்டியாக “என்ன நீ பாடுற?..” “ஒரே பிளாட்-ஆ இருக்கு?”.. “நல்லால்லே!.. நீ வேணும்னா மலையாளத்துல ட்ரை பண்ணு!..” என்று ஒரு விதமாக மலையாளம் கலந்த தமிழில் போட்டியாளர்களை கேவலமாக விமர்சிக்கிறார்.. அதைக்கேட்டு ஹரிஹரனும் “கெக்கே..பிக்கே..” என்று நையாண்டியாக சிரிக்கிறார்.. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சியைப் போலவே தெரியவில்லை.. “நையாண்டி தர்பார்” போலத் தெரிகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு “3 Idiots !..” என்று பெயர் வைக்கலாம்.. இதே ஜெயா தொலைக்காட்சியில் “என்னோடு பாட்டு பாடுங்கள்” என்றொரு நிகழ்ச்சி வந்தது.. அதைப் பார்த்திருப்பீர்கள்.. அதிலும் திரு.எஸ்.பி.பி. அவர்கள் போட்டியாளர்களை விமர்சனம் செய்வார்..எப்படி?.. “நீங்க நல்லா பாடினீங்கம்மா.. சின்ன சின்னத் தவறுகள்தான்.. பல்லவியில கொஞ்சம் சுருதி மிஸ் பணிடீங்க.. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணீங்கன்னா நல்ல பாடுவீங்க.. நானெல்லாம் ஆரம்பத்துல இதைவிட நெறைய தப்பா பாடியிருக்கேன்.. இன்னும் கொஞ்சம் கேர் எடுத்து நல்லா பாடுங்க”.. இப்படி நாகரிகமாத்தான் தவறுகளை எடுத்துச் சொல்வார்.. இந்த ஜேம்ஸ் வசந்தன் மாதிரியோ, சரத் மாதிரியோ கிண்டலாக, நையாண்டியாக ஒருமையில் பேச மாட்டார்.. அவரும் ஹரிஹரன் போல, சரத் போல வேற்று மொழிக்காரர்தான்.. ஹரிஹரன்,சரத் இருவருக்கும் மலையாளம் தாய்மொழி.. எஸ்.பி.பி. அவர்களுக்கு தெலுங்கு தாய்மொழி.. ஆனால் தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும்.. தமிழ் மொழிக்கே உரித்தான லகர, ளகர, ழகர உச்சரிப்பில் அவ்வளவு கவனமாக இருப்பார்.. இப்போதைய பாடகர்களைப் போல (சரத், ஹரிஹரன் உட்பட..) கேவலமாகத் தமிழ் பேசவோ, பாடவோ மாட்டார்.. இப்போது பாடுகிறார்களே.. வந்தேமாதரம் என்று பாடச் சொன்னால் “வந்த்தேஏஏஏஏஏ மாத்தறோம்!..” என்று கத்துகிறார்கள்.. அதையும் பாட்டு என்று நம்மவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.. அது மட்டுமல்ல இதற்கே தங்களை ஒரு பெரிய மேதை என்று நினைக்கிறார்கள்.. பாடகர் திரு.ஜேசுதாஸ் அவர்கள் ஒரு முறை “பிள்ளை நிலா..” என்று பாடுவதற்குப் பதிலாக “பில்லை நிலா” என்று பாடிவிட்டார்.. காரணம் அவரது தாய்மொழி மலையாளம்.. அதனால் ஏற்பட்ட பிரச்சனை.. அதை பிறர் எடுத்துக் காட்டியவுடன் எல்லோரிடமும் “அடடா.. தவறாகப் பாடிவிட்டேனே…. முன்பே எடுத்துச் சொல்லக் கூடாதா?”.. மன்னித்துவிடுங்கள்!.. என்று மன்னிப்புக் கேட்டார்.. பாடும்போது தவறு நேர்வது சகஜம்.. ஆனால் அதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆனால் இப்போது என்ன நடக்கிறது “ஸ்டைல்” என்ற பெயரில் தமிழைக் கொலை செய்து பாடுவதையே சரி என்கிறார்கள் இப்போதைய பாடகர்கள்.. எந்த மொழிக்காரர்களும் எந்த மொழியிலும் பாடலாம்.. இசைக்கு மொழி கிடையாது.. ஆனால் எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் சிறப்பை உணர்ந்து அந்த மொழியின் பெருமை கெடாத வண்ணம் பாடவேண்டும்.. செய்வார்களா?…”

 5. Ramesh. R சொல்கிறார்:

  ஒரு சிறந்த பாடகர் என்பவர் எல்லாவிதமான பாடல்களையும் அதாவது கர்நாடக சங்கீதம், மெல்லிசை எனக்கூறப்படும் மேலோடி சாங்க்ஸ், மேல்நாட்டு சங்கீதம் எனப்படும் மேற்கத்திய இசை அதாவது வெஸ்டேர்ன் சாங்க்ஸ், நாட்டுப்புற இசை எனக்கூறப்படும் கிராமிய இசை உட்பட அனைத்து தரப்பட்ட இசைமுறைகளையும் தெரிந்திருக்க வேண்டும்.. இதில் ஏதாவது ஒரு இசை வகையில் பாண்டித்தியம் பெற்றிருக்கலாம்.. அதாவது மிகச்சிறப்பாகப் பாடக்கூடிய திறன் பெற்றிருக்கலாம். ஆனால் அனைத்துவகையான இசைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று.. அப்படிப்பட்ட பாடகர்கள்தான் அப்படிப்பட்ட இசைவல்லுனர்கள்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, P.B.ஸ்ரீநிவாஸ், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றவர்கள். உதாரணமாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களிடம் இந்த வாத்தியத்தில் மேல்நாட்டு இசையை வாசித்துக் காட்ட முடியுமா என்று கேட்பார்கள்.. அதை அந்த மேல்நாட்டு இசையை நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டுவார்கள்.. அப்படி எல்லாவிதமான இசைவகைகளையும் தெளிவாக அக்கால இசைஅமைப்பாளர்களும், பாடகர்களும் கற்றிருந்தனர்.. அப்படி அனைத்து இசைகளையும் தெரிந்திருந்ததால் பல மறக்கமுடியாத சிறப்பான பாடல்களையும், பாடல் மெட்டுகளையும் நமக்குத் தந்தனர்.. இருந்தும் அந்த பாடகர்களுக்குத் தலைக்கனமோ, கர்வமோ இருக்கவில்லை.. ஆனால் இப்போது அரைகுறையாகக் கற்றுக்கொண்டு இரண்டொரு நாட்களில் மறந்துவிடுகிற பாடல்களைப் பாடுகிற பாடகர்கள், அப்படிப்பட்ட பாடல்களுக்கு இசைஅமைக்கிற இசையமைப்பாளர்கள், மற்றும் வார்த்தைகளே புரியாத அளவிற்கு ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடன் பாடல்வரிகளை எழுதுகிற நாலாந்தர பாடலாசிரியர்கள்(?!) ஆடுகிற ஆட்டமும்,. அடிக்கிற கூத்தும் தாங்கமுடியவில்லை.. இதுல இசைப்புயல், கவிப்பேரரசு, இசைக்காத்து, வெங்காயம்-னுலாம் பட்டம் வேறு.. அந்தப்பாடல்களை வெச்சி சோடி நெ.1 , சோடி நெ.2 ஜூனியர்-னுலாம் பட்டம் வேறு.. அதுல இப்படிப்பட்ட நடுவருங்க எவனெவனோ வந்து உக்காந்துகிட்டு ஒங்க ரெண்டுபேருக்கும் கெமிஸ்டிரி சரியில்ல, பிசிக்ஸ் சரியில்ல, பாலாஜி சரியில்ல,, இப்புடி கட்டிப்புடிக்கணும்,.. இப்பிடியெல்லாம் கமெண்ட்ஸ் வேறு.. என்ன சார் இதெல்லாம்?.. சினிமாவுக்கூட சென்சார் வேணாம்.. கொஞ்ச பேர்தான் சினிமாவுக்குப் போவாங்க.. கண்டிப்பாக டி.வி.க்கு சென்சார் வேணும்ங்க.. அதேபோல இந்த ஹரிஹரன்,.. இவுரு நல்ல பாடகரா இருக்கலாம்.. ஆனா அவுரு பண்ற பந்தா.. முதல்ல இப்படிப்பட்ட நிகழச்சிகளில எப்படி உட்காரணும்னு யாராவது இவருக்குக் கத்துக் கொடுங்க சார்.. கால் மேல் கால் போட்டுக்கிட்டு கைய வீசிக்கிட்டு இவரு ஒக்காந்துகிட்டிருக்குறது அவருக்கு இசைகிட்டக் கூட மரியாதையா இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.. அடுத்தது ஜேம்ஸ் வசந்தன் ஹரிஹரனாவது பரவாயில்ல.. இந்த ஆளு ஜேம்ஸ் வசந்தன் மரியாதை-நா என்னான்னு கேட்பான் போல இருக்கு.. எல்லாரையும் சகட்டு மேனிக்கு அவன், இவன்-ந்குறதும், கேவலமா பேசுறதும்,, எதோ இவன் ஒருத்தன்தான் இசக்குன்னே பொறந்திருக்குற மாதிரி பேசுறதும், பண்ணுற பந்தா தாங்க முடியலை.. அதனாலதான் இந்த ஆளை அவரு பாணியிலேயே அவன், இவன்-நு எழுதியிருக்கேன்.. இவங்க ரெண்டுபெரையாவது கொஞ்சம் மன்னிக்கலாம்.. அந்த ஆளு சரத் யாருங்க அந்த ஆளு,, அந்த ஆள எங்க இருந்து புடிச்சாங்க?.. இசைக்கு மொழி தேவையில்லைதான்.. ஆனால் பாடல் வரிகளைப் புரிந்துகொள்ள மொழி கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கணும்,, ஆனால் கொஞ்சம் கூட அறிவே இல்லாத.. சாரி..மொழியறிவே இல்லாத சரத்(இந்த ஆளுக்குத் தமிழ் சரியாகத் தெரியாது) இந்த ஆளு சரத் போட்டியாளர்களைக் கிண்டல் செய்வதும், அவர்கள் பாடுகிற பாடல்களின் வரிகளைக் கிண்டல் செய்வதும் ரொம்ப ஓவர்.. இந்த மூணு பேரும் உண்மையான சிறந்த பாடகரான எஸ்.பி.பி. அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.. அதில் எஸ்.பி.பி. அவர்கள் போட்டியாளர்களிடம் எப்படி நாகரிகமாக தவறுகளைத் திருத்துகிறார்.. என்பதைப் பார்த்துப் பாடம் படிக்கவேண்டும்.. முதலில் ஹரிஹரன், ஜேம்ஸ், சரத் இவனுங்க நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்..

 6. Ramesh. R சொல்கிறார்:

  மிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே!.. இவர்கள் மூவரும் பாடகர் எஸ்.பி.பி அவர்களிடமிருந்து நாகரிகமாக விமர்சனம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும்..

 7. Kuppaththu Raja சொல்கிறார்:

  உண்மைதான் நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன். கொலைவெறி ஏற்ப்பட்டது

 8. Ram சொல்கிறார்:

  Mr.பஞ்சரு,
  நீங்கள் ஹரிஹரனை பற்றி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் நிறையவே பாடி இருக்கிறார். அப்படி சரியில்லை என்றால் இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் நின்றிறுப்பது கடினம். ஆனால் ஜேம்ஸ் வசந்தன் பற்றி கூறியது முற்றிலும் உண்மை. MSV, இளையராஜா கூட் இப்படி பேசமாட்டார்கள். வெட்டித்தனமான ஓவர் பில்டப். கிண்டல் வேறு. ஆமா இவேன் எந்த படத்துக்கு மீஜிக் போட்டான்? எனக்கு தெரியாது.

  • அனாதி சொல்கிறார்:

   சுப்ரமணியபுரம் இசை – ஜேம்ஸ். ஹரிஹரன் நல்ல பாடகர் என்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. அவரின் முக்கல் முனகல் தான் பிரச்சினை. ட்யூன் கொடுத்தவுடனே சுதி சுத்தமாக எந்த பாடகராலும் பாட முடியாது என்கிறார் எனது இசையமைப்பாளர் நண்பர். ஹரிஹரன் பாடகர்களை விமர்சிக்கும் பாணியும், தொனியும் அவரின் உள்ளத்தை படம் போடுகிறது. உள்ளே இருப்பது தானே வெளியில் வரும். மனசாட்சி உள்ளவர்கள் ஹரிஹரனுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் சரத்தின் கிண்டல் நையாண்டிக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். நிர்வாகத்தில் இவ்விஷயம் பற்றி சொல்லியிருக்கிறார்கள் என் நண்பர்கள். பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: