சிம்பு இழந்த சொர்க்கம்

எல்லோருக்கும் தெரிந்த கதை தான். ஆனால் இழப்பு என்னவோ சிம்புவிற்கு என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். முதல் காதல் என்பது எவராலும் மறக்கமுடியாத ஆயுள் இன்பம். தோல்வியில் முடிந்தால் ஆயுள் துன்பம். சிம்பு நயனதாரா காதல் முதல் காதலாக இருந்திருந்தால் அது இருவருக்கும் ஆயுள் துன்பம் தான்.

சிம்புவிற்காக அவரின் படம் ஜெயிப்பதற்காக தன் உதட்டைக் கடிக்க வைத்து தமிழ் சினிமாவில் பெரிய புரட்சிக்கு வித்திட்டவர் நயனதாரா. இந்தளவுக்கு தன்னையே தன் காதலனின் வெற்றிக்காக, என்ன பெயர் கிடைத்தாலும் பரவாயில்லை என்று அவ்வாறு நடிக்கத் துணிந்த நயனதாராவின் காதலை இழந்த சிம்பு துர் அதிர்ஷ்டம் பிடித்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்தக் காதலைப் பிரித்தவர் என்று ரஜினியைச் சொல்வார்கள் சிலர். சிம்புவிற்கும் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடந்த உரையாடலாய் இணைய தளத்தில் உலாவந்த எம்பிதிரி ஃபைல் காரணமாக ரஜினி சிம்புவின் காதலைச் சிதைத்திருப்பாரோ என்று கூட நம்பத் தோன்றும். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. அப்படி அவர் பிரித்திருந்தால் அது தான் ரஜினி செய்த மாபெரும் தவறாகும்.

நயனதாராவிற்கு தற்போது கிடைத்திருக்கும் காதலும், காதலன் பிரபுதேவாவிற்கு நயனதாரா அளிக்கும் காதல் பரிசுகள் பற்றி மீடியாக்களில் சொல்லும் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிம்புவை நினைத்துப் பரிதாபம் தான் ஏற்படுகிறது. நல்ல காதலியை இழந்த சிம்புவின் வெற்றிகள் இனி அவருக்கு இன்பத்தை தருமா என்பது கேள்விக்குறிதான்.

சிம்புவின் இழந்த சொர்க்கம் – நயனதாரா. விதியின் விளையாட்டில் சிக்கிய இரு காதலர்கள்.

நயனதாராவிற்கு இந்தக் காதலாவது நிலைத்து நிற்க வேண்டுமென்று குஞ்சாமணி பிரார்த்திக்கிறான். ஆனால் இன்னொரு அப்பாவிப் பெண்ணின் புருஷனைக் கவர்ந்து கொண்ட வகையில் நயனதாராவின் காதல் தோல்வி அடைந்து விடுமோ என்று பயம் வேறு கொள்கிறான் உங்கள் குஞ்சாமணி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: