பழ கருப்பையா தாக்குதல் பின்னனி என்ன?

ஜூன் 29, 2010

கடந்த வாரமென்று நினைக்கிறேன். ஜெயா டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட்டும் பழ கருப்பையாவும் உரையாடிக் கொண்டிருந்தனர்.  எப்போதும் ரபி பெர்னாட் எடுத்துக் கொடுக்க பேட்டி கொடுக்க வருபவர்கள் தலையாட்டியும், ரபி பெர்னாட்டின் புள்ளிகளுக்கு இடையே தங்களது கருத்தையும் இணைத்து ஒரு வழியாக ஒப்பேற்றுவார்கள். ஆனால் ரபி பெர்னாட்டின் வேலை அதிமுகவின் இலக்கிய அணித் தலைவரான பழ கருப்பையாவிடம் எடுபடவில்லை. அவர் பாட்டுக்கு திமுகவை தாளித்துக் கொண்டிருந்தார்.

துக்ளக்கில் எழுதி வரும் பழ கருப்பையா திமுகவை சாடியே தனது கட்டுரைகளை எழுதுவார். அதில் உண்மைகளும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரு ராஜாவை விமர்சிப்பார். திமுகவின் குடும்ப அரசியலை விமர்சிப்பார். இப்படி இன்னும் பல.  கட்டுரைகளில் இலக்கிய மேற்கோள்களும், உவமைகளும் சரளமாய் கையாள்வார். அந்த அளவுக்கு இலக்கிய ஆளுமையும், வார்த்தைப் பிரயோகங்களிலும் தனக்கென்ற ஒரு பாணியைக் கொண்ட நல்ல எழுத்தாளர் பழ.கருப்பையா.

ஆனால் நேருக்கு நேர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக முதலமைச்சரை  மான..கெட்…னே என்று திட்டினார். இவ்வார்த்தையைக் கேட்ட ரபி பெர்னாட் முகத்தில் ஈ ஆடவில்லை. பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திக்கென்றது. அரை நிமிடம் அதிர்ச்சியில் உரைந்த ரபி பெர்னாட் நிகழ்ச்சியை முடிப்பதாக அறிவித்து முடித்து விட்டார்.

படித்தவர், பண்பாளர் என்ற வகையில் பழகவின் இவ்வார்த்தைப் பிரயோகம் சற்றும் உகந்தது அல்ல.  மாநிலத்தின் முதலமைச்சர் என்ற வகையில் கலைஞருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் பழ.க அதை மறந்து விட்டார் என்பது தான் ஆச்சரியம். முதலமைச்சரை ஒருமையில் பேசுவது, தீச்சுடு சொற்களால் விமர்சிப்பது என்பதெல்லாம் படித்தவர்களுக்கு அழகல்ல. சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக மரியாதைக் குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது நன்றாக இருக்காது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அதை மறந்து தமிழ் விழாவா என்ற ஆவேசத்தில் பழகவின் வார்த்தைகள் கோபத்தில் வெளிப்பட்டிருக்கும் என்றாலும் பத்திரிக்கை துறையில் இருக்கும் பழ. கவின் இவ்வார்த்தை மிகவும் அதிகப்படியான தனி மனித தாக்குதல் என்றே நான் நினைக்கிறேன்.

கலைஞரின் தமிழ் பொங்கிய மனோகராவினால் எத்தனையோ இளைஞர்கள் அவரின் பால் கவரப்பட்டார்கள். கலைஞரின் அரசியல் பாதை எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவரின் தமிழ் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞர் தமிழர்களில் மரியாதைக்குரிய தலைவர் என்பது உண்மை.

பழ.கவின் பேச்சால் ஆவேசப்பட்டவர்கள் பழ.கவின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது ஜன நாயக விரோத செயல். இதை கலைஞர் அனுமதிக்க மாட்டார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டம்  நடத்தி இருக்கலாம். அல்லது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருக்கலாம். அதை விடுத்து தாக்குதல் என்பது தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கி விடும் என்பதை தாக்குதல் நடத்தியவர்கள் மறந்து விட்டார்கள் போலும். தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதால் பழ.கவின் மீதான தாக்குதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் இப்பதிவை எழுதினேன். மற்றபடி நான் எந்தக் கட்சிக்கு ஆதரவாளனும் இல்லை. எதிர்ப்பாளனும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பஞ்சரு பலராமன்


தொடர்ச்சியின் தொடர்ச்சி : நாம் தமிழர் சீமானின் முகத்திரை கிழிகிறதா?

ஜூன் 28, 2010

தன் வியர்வை சிந்தி உழைத்த காசில் பென்ஸ் கார் வாங்கித் தரும் தமிழனை மதிக்கத் தெரியாதவராக மாறி விட்டார் சூர்யா என்ற விடுப்பு செய்தி அதிர்ச்சியைத் தரவில்லை. கூலிக்கார தமிழனும், கோடீஸ்வர தமிழனும் கொட்டிக் கொடுக்கும் காசில் கும்மியடிக்கும் கூத்தாடிகளின் கருப்பு முகத்திரை கிழிந்து, அவர்களின் அகோர முகமும், மனசும் வெளித் தெரிகின்றன.  இரண்டு தலைமுறைகளாக தமிழனின் காசில் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகளைத் தண்டிக்க இறைவனால் மட்டுமே முடியும். நாம் என்ன செய்ய இயலும் பதிவு எழுதுவதைத் தவிர.

சூர்யாவின் படத்திற்கு எதிராய் போராட்டக்களத்தில் இறங்கினார் என்றால் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரைப் பற்றி எழுதி கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு ஆதரவாய் இருப்பாரா இல்லை வழமை போல எதிர்க்கருத்து கொள்வாரா நாம் தமிழர் சீமான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பஞ்சரு பலராமன்

செய்தி ஆதாரம் : விடுப்பு.காம்

இணைப்பு :

செய்தியின் முழுமையான இணைப்பு

விலகிய ஆபத்தை வலிய இழுத்த சூரியா!

[ Monday, 28 June 2010, 08:35.13 AM GMT +05:30 ]
கடந்த வியாழக்கிழமை பெங்களூரு மிர்ரர் ஆங்கில நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பி இருப்பதாக நாம் தமிழர் இயக்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.
மிரருக்கு சூரியா அளித்த பேட்டியை சீமானின் கவனத்துக்கு கொண்டு வந்திருகிறார்கள் சக தோழர்கள்.அந்தப் பேட்டியை படித்த சீமான்கொதிக்கும் கோபத்தோடு சூரியாவின் செல்போனுக்கு ரிங் செய்திருகிறார். “ஹாய் ஐ ஹோப் யூ ஆர் ஃபைன். அயம் அட் மும்பை நவ். ப்ளீஸ் லீவ் யுவர் மெசேஜ். ஐ வில் காண்டாக் யூ ஷார்ட்லி” என்று சூரியாவின் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்திருகிறது. சீமானும் பொறுமையுடன் சூரியாவின் வாய்ஸ் மெயிலுக்கு “ உடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று செய்தி போட்டிருகிறார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாகியும் சூரியா இதுவரை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் அவரது மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார் சீமானின் நேரடி உதவியாளர். ஆனால் அவருக்கு கிடைத்த பதில் “ சூரியா அப்படியொரு பேட்டியே கொடுக்க வில்லை. எங்கேயோ தவறு நடந்துள்ளது.

இதை பெரிது படுத்த வேண்டாம். சூரியா சொந்த வேலையாக இருப்பதால் நானே அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எனக்குப் பேசியதும் உடன் சீமானுக்கு பேசச்சொல்கிறேன்” என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

உண்மையைத் தெரிந்து கொள்ள பேட்டி எடுத்த மிரர் நாளிதழின் சம்பந்தப்பட்ட நிருபரை அனுகியிருகிறார்கள் கர்நாடக நாம் தமிழர் இயக்கத்தின் கிளை நிர்வாகிகள். அந்த செய்தியாளர் சூரியா அந்தப் பேட்டியில் பேசியதை தனது டிஜிட்டல் ரெக்கார்டரில் பதிவு செய்திருந்ததால் உடன் அந்தப் பேட்டியின் ஆடியோ ஃபைலின் ஒரு பிரதியையே கொடுத்திருகிறார்.

ஆடியோ பேட்டியைப் கேட்ட சீமான், ஒரு முடிவுக்கு வந்து சூரியாவை தம்பி எனக்குறிப்பிட்டதை வாபஸ் வாங்கிக் கொள்வதோடு, ரத்தசரித்ரம் வெளியாவதை நாம் தமிழர் இயக்கம் அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிக்கையை எழுதி தயார் செய்து விட்டதாகவும், சூரியாவின் பதிலை பொறுத்து இந்த அறிக்கையை ஊடகத்துகு அனுப்புவது என்றும் முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

ரத்த சரித்திரம் படத்துக்கு வந்த ஆபத்து விலகிப் போன சூழ்நிலையில், இப்போது சூரியா தானே வாயைகொடுத்து ஆபத்தை விலக்கி வாங்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள் கோடம்பாகத்தில். முன்பு பத்திரிகையாளர்களை தரகுறைவாக பேசிய விவகாரத்திலும் சூரியா பின் விளைவுகளை யோசிக்காமல் பேசியதால் பிரச்சினைகளை சந்தித்தார். தற்போது சூரியாவின் பேச்சு ஈழப் பிரச்சனையில் போதிய பார்வை இன்மையையே கட்டுகிறது என்பது தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருகிறது. நாம் தமிழர் ஆதரித்தாலும் ஃபெப்ஸி ‘ரத்த சரித்திரம்’ படத்தை தென்னிந்தியாவில் அனுமதிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருகிறார்களாம்.


தொடர்ச்சி : நாம் தமிழர் சீமானின் முகத்திரை கிழிகிறதா?

ஜூன் 28, 2010

சூர்யாவின் ரத்த சரித்திராவிற்கு சப்போர்ட் செய்த நாம் தமிழர் சீமானை விமர்சித்து எழுதப்பட்ட பதிவிற்கு சில எதிர்ப்புகள் வந்தன. தனியாக ஒரு பதிவும் எழுத வேண்டியிருந்தது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் இருக்கும் கட்டுரையினை வாசித்து விட்டு எனது பதிவு பற்றிய ஒரு முடிவிற்கு வாருங்கள்.

அக்கட்டுரை இங்கே

அன்புடன் பஞ்சரு பலராமன்


தமிழக விவிஐப்பிகளுக்கு சமர்ப்பணம்

ஜூன் 27, 2010

குடிகாரனுக்கு மட்டும் தான் பாட்டுப் போட்டுக் காட்ட முடியுமா? இதோ நானும் போடுகிறேன் ஒரு பாட்டு. கேளுங்கள் வாசகர்களே.  கேளுங்கள். கம்ப்யூட்டரில் ஸ்பீக்கர் வசதியில்லாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள். ஸ்பீக்கர் வசதியிருப்பவர்கள் சூழ் நிலை பார்த்து சத்தமாய் கேட்கவும். ஏனென்றால் இப்பாடலைக் கேட்கும் உங்களை பிறர் பைத்தியக்காரனாய் பார்க்கும் அபாயம் வேறு இருக்கிறது.

குஷியுடன்,

குஞ்சாமணி


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : குடிகாரன்

ஜூன் 27, 2010

உலகத் தமிழ் செம்மொழி மா நாடு பற்றிய குடிகாரனின் பதிவு. பிடித்தவர்கள் பின்னூட்டம் போடுங்கள். பிடிக்காதவர்கள் வழக்கம் போல ரகசியமாய் படித்துக் கொள்ளுங்கள்.  உலகத் தமிழ்ச் செம்மொழி மா நாடு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலே இப்பாடல்களை ஒருக்கணமேனும் கேட்டு வையுங்கள்.

தமிழ்னை வளர்த்தால், முன்னேற்றினால் தமிழ் தானாகவே முன்னேறும் என்பதை நினைவில் கொள்க தமிழர்களே.  தமிழர்களே நீங்கள் யார் என்பதை இப்பாடல்களைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

குடிகாரன்.


தமிழக முதலமைச்சர் குஷ்பூ

ஜூன் 25, 2010

எனக்கு அரசியலில் மிகவும் பிடித்தவர் திரு கலைஞர் அவர்கள். இவரின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும், கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரின் ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும்.

தற்போது கோவையில் நடந்து வரும் செம்மொழி மாநாடு கூட தமிழ் மொழியை முன் வைத்து நகர்த்தப்படும் அரசியல் என்றே நம்புகிறேன்.

துணை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து இன்றைக்கு அனைவராலும் விரும்பக்கூடிய அளவுக்கும், தன் செயலாலும் திறமையாலும், அனைவரையும் அரவணைக்கும் அன்பாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்.

ஒரு பக்கம் ஜெயலலிதா மற்றொரு பக்கம் ஸ்டாலின் என்று வைத்து இவர்களில் யார் உங்கள் மனம் கவர்ந்தவர் என்று கேட்டால் மக்கள் யோசிக்காமல் ஸ்டாலினைத் தான் சுட்டுவர். அந்தளவுக்கு இன்றைய அரசியலில் நாகரீகம், அன்பு, பரிவு இவற்றொடு வலம் வரும் அரசியல்வாதியாக திகழ்கிறார்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த வலியினை அதிகம் பெற்றவர் திரு கலைஞர். இவரால் வளர்க்கப்பட்ட எத்தனையோ அரசியல்வாதிகள் இவரின் முதுகில் குத்தியது அரசியல் நிகழ்வுகளாய் பதிவாகியிருக்கின்றன.  நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை பின்னர் அரவணைத்தவரும் இவர்தான். இந்தச் சூழ் நிலையில் திருமதி குஷ்பூவை திமுகவில் சேர்த்திருப்பது வரலாற்று நிகழ்வாய் ஏதும் சம்பவங்கள் நிகழ ஆரம்பமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இதைப் போன்ற சம்பவத்தினால் அதிமுகவின் தலைமையிடத்திற்கு வந்தவர் அம்மா அவர்கள்.  அம்மாவிற்கு ஆளுமை திறமை இருந்தது. ஜானகி அவர்களின் கட்சியை மீறி தன் திறமையினால், தியாகத்தால் அதிமுக தலைவியானார்.

தன்னை வளர்த்த ஜெயா டிவியையே தூக்கி அடித்து விட்டு, அதிரடியாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்ட செம்மொழி மாநாட்டில் தீடீர் முக்கியத்துவம் பெற்ற குஷ்பூ(எந்த வித முன் தகுதியும் இன்றி), நாளை தமிழகத்தின் முதலமைச்சராய் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லாமலிருந்தாலும், விதியின் விளையாட்டால் குஷ்பூ முதலமைச்சர் ஆனாலும் ஆகலாம். திரு ஸ்டாலின் அவர்களுக்கு தீரா தலைவலியாக மாறி விடுவாரோ குஷ்பூ என்ற எண்ணமும் எழுவதை தடுக்க முடியவில்லை.

விதி வலியது.

முடிவு என்னவென்று பார்க்கலாம்.

இது குடிகாரனின் போதைப் பதிவு. எவரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.


தமிழ் மொழி – தமிழ்ச் செம்மொழி ஒரு ஒப்பீடு

ஜூன் 24, 2010

உலகமே(!!!) கொண்டாடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் கோலா கலமாக நடந்து வருகிறது.

அரசு உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து காவல்துறையினர் தமது சேவையினை செம்மையாகச் செய்து வருகின்றனர் என்று நண்பர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் சேவகர்களாம் அரசு உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் குளிர் சாதன அறைகளில் குளு குளுவென குஜாலாக தங்கி இருக்கின்றனர்.  மக்களோ மண் தரைகளில் புரண்டு கொண்டிருக்கிறார்களாம். தமிழ் மக்களின் தியாகத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று கின்னஸ் செய்தி தொடர்பாளர்களுக்கு செய்திகள் தரப்பட்டிருக்கின்றனவாம். உலகளவில் தியாகத்திற்கு பெயர் போனவர்கள் என்று தமிழர்களை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.

தலைவர் கலைஞரின் உறவினர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து இன்புறுவதை மக்கள் கண்ணாரக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். கலைஞரின் மேலும் பல உறவினர்களுக்கு முன் வரிசையில் இடம் கிடைக்காமல் போய் விட்டதே என்று மக்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டு பேசிக் கொள்கின்றனராம். கலைஞரின் குடும்பத்தை தங்களின் குடும்பமாகவே தமிழக மக்கள் கருதுகின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கே தலைவர் கலைஞர் என்று பட்டங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். இலவச ஃப்ளைட் டிக்கெட், இலவச குளு குளு தங்குமிடம், இலவச அறுசுவை உணவு, இலவசமாய் போக்குவரத்து ஏற்பாடு என்று அனைத்தும் இலவசமாய் வழங்கினால் வழங்குபவரை கடவுள் என்றல்லவா சொல்ல வேண்டும். உலகத்துக்கே தலைவர் என்றல்லவா சொல்ல வேண்டும். கொஞ்சம் கூட நன்றியுனர்ச்சி இல்லாமல் உலகத் தமிழர்களுக்கு மட்டும் தலைவர் என்று சொல்வது அயோக்கியதனமானது.

சரி தமிழ் மொழி – தமிழ்ச் செம்மொழி ஆன பிறகு அதன் வளர்ச்சி என்ன என்பதை இனி காணலாம்.

ஆறுமுகம் பரசுராமன் என்பது தமிழ்ச் செம்மொழி ஆன பிறகு ஆர்முகம் பர்சுராமென் என்றானது. இது தான் தமிழ் மொழி செம்மொழி ஆனபிறகு உண்டான வளர்ச்சி.

இப்படிக்கு,

பென்ச்சோர் பல்ராமென்


%d bloggers like this: