கார்பொரேட் சாமியார்களும் எழுத்தாளர்களும்

எனக்கு ஒரு அப்பிராணி நண்பன் இருக்கிறான். அவனுக்கு வேலையே சாமியாரை சுற்று வருவதுதான். தோ, அந்தப் பக்கம் இருக்கிறதே ஒரு மலை அதன் அருகில் ஒரு ஆஸ்ரமம் நடத்தி வருகிறாரே ஒரு மாமியார் .. ஓ… சாரி… சாரி.. சாமியார் அவரு ஆஸ்ரமத்தில் நடந்த ஒரு ரகளையச் சொல்கிறேன் கேளுங்கள்.

சமீபத்தில் அந்த ஆஸ்ரமத்தில் ஒரு கோவிலின் பிரதிஸ்டை விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ள பத்தாயிரம் ரூபாய், பதினைந்தாயிரம் ரூபாய், இருபதாயிரம் ரூபாய் என்று கட்டணம் கட்ட வேண்டுமாம். அந்தச் சாமியாரோடு கோவிலுக்குள் அமர பத்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டுமென்று சொன்னான். அசந்து போய் விட்டேன். சாமியாருகளுக்கு எதுக்கு காசு?ன்னு கேட்டா சும்மா கிடைத்தால் அதற்கு மதிப்பிருக்காது என்று சொல்வார்கள்.  கலைஞர் சும்மா டிவி, இரண்டு ஏக்கர் நிலம், கேஸ் கொடுக்கிறேன்னு சொன்னவுடனே தமிழர்கள் ஆட்சியையே தூக்கிக் கொடுத்தார்களே அதை என்ன சொல்வதாம்.

அந்தச் சாமியார் என்ன மோட்சத்தையா காட்டப்போகிறார் பத்து லட்சத்தை வாங்கிக் கொண்டு.  அதற்குப் பதிலாக ஒரு மனம் கவர்ந்த நடிகையிடம் கொடுத்தால் சொர்க்கத்தையே அல்லவா காட்டியிருப்பார் என்று எனக்குள் தோன்றியது.

சரி சாமியார் இப்படி என்றால் அவர்கள் கூட சேர்ந்து கொண்டு எழுத்தாளர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அதை என்னவென்று சொல்வது?

இந்தப் பாருவைப் பாருங்கள். கடவுளையே கண்டேன் என்று எழுதினார். இப்போது பாருங்கள் சரசம் சல்லாபம் என்றெழுதிக் கொண்டிருக்கிறார். டிவி மூலமாய் சாரி கேட்கின்றார். என்ன ஒரு பச்சை அயோக்கியத் தடித்தனம் தெரியுமா இது. நம்பு நம்பு என்று முதலில் சொல்வது. பின்னர் நம்பாதே நம்பாதே என்பது. அவரு எழுதும் கட்டுரையில் ஏக வியாக்கினம் எழுதிக் கொண்டிருக்கிறார் இப்போது. அந்தச் சாமியார் மட்டும் மாட்டாமல் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரான்னு கேளுங்கள். பதிலே பேசமாட்டார். சாமியார் மாட்டினார். உடனே இவர் பல்டி அடித்தார். சாமியார் மாட்டவில்லை என்றால் இவரும் சாமியார் கூட சேர்ந்து மாமிகளையும், குட்டிகளையும் குஜால் செய்து கொண்டிருப்பார் போலும்.

பாருவிற்கும் சாமியாருக்கும் இந்த அளவுக்கு முட்டிக் கொள்ள காரணம் என்னவாக இருக்குமென்று எனது வழக்கப்படி யோசித்தேன். சாமியாராக இருந்து கொண்டு இத்தனை குட்டிகளை போட்டிருகின்றானே, நாமோ வுமனைசர் என்று சொல்லியும் ஒருத்தியும் மாட்ட மாட்டேன் என்கிறார்களே என்ற வயித்தெரிச்சல் கோபமாக இருக்குமோ என்று நினைத்தேன்.

டீக்கடை ஸ்பான்ஸர் மாதிரி எனக்கொரு பெட்டிக்கடை ஸ்பான்சர் இருக்கின்றான். அவன் மூலமாக நான் டீல் செய்திருக்கும் களப்பணிகளையும், அதன் விபரங்களையும் விரைவில் எழுத இருக்கிறேன். அதுதான் குஞ்சாமணியின் குட்டிகளின் கதை.

கார்பொரேட் சாமியார்கள் என்பவர்கள் முழு யானையையே தட்டுச் சோற்றிற்குள் மறைப்பவர்கள். ஹீலர் என்று சொல்லிவிட்டு வீட்டுப் பொம்பளைகளை உங்களிடமிருந்து ஹீல் செய்து விடுவார்கள். அவர்களுக்கு ஜால்ரா போடும் எழுத்தாளர்கள் இருக்கின்றார்களே அவர்களோ சாமியார்களை விடவும் மோசமானவர்கள். எவள்டா மாட்டுவான்னு பேனாவை(ஹீ..ஹீ) திறந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: