மொரிஷியஸ் – 38 கம்பெனிகள் – செபியின் மவுனம் – ஆபத்தா?

மொரீஷியசிலிருந்து ஒரே முகவரி கொண்ட 38 கம்பெனிகளிலிருந்து பில்லியன் டாலர் முதலீடுகள் இந்தியாவிற்குள் வந்திருக்கின்றன. பயனியர் பத்திரிக்கை டிசம்பர் மாதம் 23ம் தேதி இந்தியப் பங்குச் சந்தைகளை கவனிக்கும் செபிக்கு இதுபற்றிய சில கேள்விகளை அனுப்பி வைத்து விளக்கம் கேட்டதாம். இதுவரையிலும் செபியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.
செபியின் விதிமுறைகள் படி வெளி நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்யும் கம்பெனிகளை கவனமாக ஆராய்ந்து பல்வேறு கமிட்டிகளின் ஒப்புதல் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் அனுமதிப்பார்கள். ஆனால் மொரிஷீயசிலிருந்து வந்த 38 கம்பெனிகளுக்கு, அதுவும் ஒரே முகவரி, போன் நம்பர், ஃபேக்ஸ் நம்பர் கொண்டவைகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி என்று இதுவரை செபி வாய் திறக்கவில்லை.
கணக்கு வழக்கில்லாத பணம் இந்தியாவிற்குள் பாரின் இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 135 வெளி நாட்டு முதலீட்டு கம்பெனிகளில் அதிகப் பணம் முதலீடு செய்திருப்பவை இரண்டு சிங்கப்பூர் கம்பெனிகள் மற்றும் சைபிரஸ் கம்பெனிகள். அது போக மொரிஷீயசிலிருந்துதான் இந்தியாவிற்குள் பில்லியன் டாலர் பண முதலீடு வந்திருக்கிறது. அதுவும் ஒரே முகவரியிலிருந்து வந்திருக்கிறது. செபி எப்படி அனுமதியளித்தது என்பது தான் ஆச்சரியம். என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில் என்பது தெரியவில்லை. இதுபற்றி எந்த எம்பியும் எந்தக் கேள்வியும் கிளப்பவில்லை போலும். செபியின் மவுனம் பல்வேறு கேள்விகளை உருவாக்குகிறது.
ஒரே முகவரியைக் கொண்ட கம்பெனிகள் இவை
IFS Court, Twenty Eight Cybercity, Ebene, Mauritius. Tel: (230) 467 3000 Fax: (230) 467 4000. In fact, 2i Capital PCC is the first firm which was registered with the SEBI in 2001 on the above-mentioned address.
அந்தக் கம்பெனிகளின் பெயர்களைக் கவனிக்கவும்.
2i Capital PCC, Aditi Investment Holdings Limited, Advantage Fund S3 DIF II, AIF III Sub Pvt. Ltd, AMIF II Ltd, AOF HS Mauritius Ltd, Aquarius Capital (Mauritius) Limited, Ares Investments, Ashoka Investment Holdings Ltd, Battery Venture VII Mauritius, Battery Ventures VIII FVCI (Mauritius), Canaan VII Mauritius, Canaan VIII Mauritius, Citigroup Venture Capital International Mauritius Ltd, CV Global Holdings Inc, CVCIGP II Client Ebene Limited, CVCIGP II Employee Ebene Limited, DFJ Mauritius Inc, Dynamic India Fund V, Greylock (Mauritius) Inc, Hema CGPE Ltd, Hema CiPEF Ltd, IDFC Private Equity (Mauritius) Fund III, Jafco Asia Technology Investments IV (Mauritius) Limited, JAFCO Asia Technology Investments III (Mauritius), LB Ventures (Mauritius) Ltd, Monet Limited, Nea FVCI Ltd, Nea Indo US Venture Capital, Norwest Venture Partners X – Mauritius, NYLIM Jacob Ballas India (FVCI) III LLC, Renoir Limited, Sandstone Private Investments, Sequoia Capital GF IV Mauritius, Sequoia Capital India Growth Investment Holdings II, Tano Mauritius, Walden Investments VI, Zephyr – Peacock India-I.
கட்டுரை ஆதாரம் : பயனியர் டெய்லி. நன்றி திரு கோபிக்கிருஷ்ணன்
இணைப்பு :
http://dailypioneer.com/225652/One-address-38-investors-all-via-Mauritius.html

One Response to மொரிஷியஸ் – 38 கம்பெனிகள் – செபியின் மவுனம் – ஆபத்தா?

  1. Aanand Kanthasamy P சொல்கிறார்:

    இதில் நிறைய ஊழல் நடந்துள்ளது.அரசியல் வாதிகள் தொடர்பு,தொழில் அதிபர்கள் தொடர்பு உள்ளது.ஊழலை வெளிபடுத்தினால் நன்றாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: