யெம்மெல்சி பதவியும் தமிழகத்தின் கலாச்சாரமும்

சமீப காலமாக திமுக அரசாங்கம் மேலவையைக் கொண்டு வர ஏற்பாடு செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மத்திய அரசும் ஒப்புதல் தந்து விட்டது. யெம்மெல்சி பதவிக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறது என்று முதலில் பார்த்து விடுவோம். யெம்மெலேவிற்கு என்னென்ன அதிகாரமோ அத்தனை அதிகாரமும் யெம்மெல்சிக்கும் கிடைக்கும். மாதம் 50 ஆயிரத்துக்கும் மேலே சம்பளம். வருடத்திற்கு ஒரு கோடியே 75 லட்சம் தொகுதி நிதி. இந்தத் தொகுதி நிதியில் 25% கமிஷன் நிச்சயமாய்க் கிடைத்து விடும். அதாவது கிட்டத்தட்ட 40 லட்சம் தொகுதி நிதியில் கமிஷனாக கிடைத்து விடும். மேலும் சிபாரிசுகள், காலேஜ் சீட்டுகள் மற்றும் இன்னபிற விஷயங்களில் எல்லாம் பணம் வந்து கொட்டும். மேலும் அரசு அதிகாரம் வேறு இருப்பதால் அதன் மூலமும் கிடைக்கும் பணம் என்று வருடத்திற்கு சொல்லமுடியாத அளவு கொட்டப்போகும் பணமழை. இவ்வாறு வருடத்திற்கு கோடிகளில் வருமானம் பெறப்போகும் எழுபத்து எட்டு யெம்மெல்சி பதவிக்கு இப்போதே போட்டி ஆரம்பித்து விட்டது என்று அரசியல் நோக்கர்கள் சிலர் சொல்கின்றார்கள்.

ஜீ தமிழ் சானலில் காங்கிரஸில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது அழைத்தால் சேருவேன் என்று பேட்டி கொடுத்தார் குஷ்பூ. மறு நாள் திமுகவில் சேருகிறார். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார்? தமிழகத்தின் மேலவை உறுப்பினராக வர வாய்ப்பிருக்கிறது என்று தினமலரில் கட்டம் கட்டி ஒரு செய்தி வெளியிடப்படுகிறது. குஷ்பூ திமுகவில் சேர்வதற்கும், தினமலர் செய்திக்கும் எங்கோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்க.

மேலவைக்கு தமிழகத்தில் தற்போதைய தேவை என்ன? ஏன் திமுக அரசு மேலவையைக் கொண்டு வர விரும்புகிறது? காரணம் ஒன்று இருக்கக்கூடும். திமுகவிற்கு இந்த மேலவையினால் கிடைக்கப்போகும் லாபங்கள் என்னென்ன என்பதை வரும் வாரத்தில் பார்ப்போம். கிட்டதட்ட 12 யெம்மெல்சி பதவிகள் ஆளுங்கட்சி சிபாரிசு செய்தால் கிடைத்து விடும். ஆக குஷ்பூவிற்கு ஒரு சீட் நிச்சயம் கிடைத்து விடும் வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. கண்ணகிக்கு சிலை அமைத்த கலைஞர் குஷ்பூவை மேலவைக்கு தேர்ந்தெடுப்பதில் தான் அவரின் முரண்பாடு தெரிகிறது. முரண்பாடான கொள்கையினாலும், சர்ச்சைகளினாலும் தன் கட்சியையும், குடும்பத்தையும் வளர்த்து வருபவர் கலைஞர் என்பதை இவ்விடத்தில் அனைவரும் நினைவில் கொள்க. கொஞ்சம் கொஞ்சமாக தமிழக கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறாரோ கலைஞர் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ஏனென்றால் திகவின் பரம்பரையில் வந்தவர் என்பதும் இங்கு நினைவுக்கு வருகிறது. குஷ்பூவின் சினிமா வரலாறு பற்றிப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கும் செய்திகளும், கற்பு பற்றிய குஷ்பூவின் கமெண்டும் அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களும்,ஆர்ப்பாட்டங்களும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று இன்றைக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன என்பதெல்லாம் கடந்தகால நிகழ்ச்சிகள். குஷ்பூ மேலவைக்கு தேர்ந்தெடுக்க அவருக்கு எந்த விதத் தகுதியும் இல்லை.

பொதுமக்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்திருக்கின்றாரா அவர்? இல்லை அவரைப் பற்றிய கிளியர் இமேஜ் ஏதாவது இருக்கிறதா? கேட்டாலே கொமட்டிக் கொண்டு வரும் வரலாற்றைக் கொண்டிருக்கிறார் குஷ்பூ என்று பத்திரிக்கைகள் எழுதுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குஷ்பூ மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டால் அதை விட தமிழர்களைக் கேவலப்படுத்தும் செயல் வேறெதுவும் இல்லை. அரசியல் சாணக்கியத்தனத்திலும், ராஜ தந்திரத்திலும் தேர்ந்த கலைஞர் குஷ்பூவை மேலவைக்குத் தேர்ந்தெடுக்கமாட்டார் என்றே நம்புவோம்.

அவ்வாறு குஷ்பூ மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் சாதாரண கலாச்சாரத்தை நேசிக்கும், தமிழ்ப் பண்பாட்டை உயிராய் மதிக்கும் தமிழர்களுக்கு தோன்றக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அது கற்புக் கலாச்சாரத்தை திமுக அரசு சீரழிக்க விரும்புகிறது என்பதே அது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: