மெளன அழுகையும் பதவிகளும்

துக்ளக்கின் 40 ஆம் ஆண்டு விழாவில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சோவின் பதிலைப் படித்து பார்த்தேன். படு சுவாரசியமாய் இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்கள். உடனே பார்ப்பான் அவன் இவன் என்று ஆரம்பிக்க வேண்டாம். உண்மை இருக்கிறதோ இல்லையோ பிரசண்டேஷன் எப்படி இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். இந்திய அரசியல் மட்டுமல்ல, உலக அரசியலையும் ஓரளவு மேலோட்டமாக புரிந்து கொள்ள துக்ளக் உதவும். ஆனால் துக்ளக்கில் சுட்டிக்காட்டப்படும் விஷயத்திற்கும் நிதர்சனத்துக்கும் 10 பெர்சண்டேஜ் தான் ஒற்றுமை இருக்குமென்பதையும் கவனத்தில் கொள்க. நன்றி துக்ளக். நன்றி திரு சோ.

எல்.டி.டி.ஈ. இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கவிதை வாசித்த கருணாநிதி, பிரபாகரன் அப்பா இறந்ததற்கு இரங்கற்பா வாசிக்கவில்லையே ஏன்? (கைதட்டல்) பெரியார் கொள்கை, அண்ணா கொள்கை, காமராஜ் கொள்கை, நெஞ்சுக்கு நீதி – என்றெல்லாம் பேசும் கருணாநிதி, முதல்வர் பதவியை அன்பழகனுக்குக் கொடுத்தால் என்ன? கலைஞருக்குப் பிறகு அழகிரியால் ஸ்டாலினுக்கு தடை வருமா, வராதா? ‘திருமங்கலத்தில் நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்போம்’ என்று அழகிரி சொன்னார்; ஜெயித்தார். ‘மதுரையில் மூன்று லட்சம் ஓட்டுக்கள் வாங்கி ஜெயிப்போம்’ என்றார்; ஜெயித்தார். அதேபோல் ‘திருச்செந்தூரில் நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசம் வரும்’ என்று அழகிரி சொன்னார்; அதேபோல் நடந்தது. வரும் சட்டசபைத் தேர்தலில் 190 முதல் 200 சீட் வரை ஜெயிப்போம் என்று சவால் விடுகிறார். ஜெயிப்பாரா? உண்மையைச் சொல்லுங்கள் – தற்போது கலைஞருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளதா? ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளதா? (கைதட்டல்). மகாபிரபு, பெங்களூர்

சோ : அன்பழகனை ஏன் முதல்வராக்கக் கூடாது என்று இவர் கேட்டார். அவர்தான் துணை முதல்வர் பதவி கூட வேண்டாம் என்று சொல்லி விட்டாராமே! ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியபோது கலைஞர் சொன்னார். ‘அன்பழகனிடம் இப்பதவியை ஏற்குமாறு கேட்டோம். அவர் ஏற்க மறுத்து விட்டார். அதனால் ஸ்டாலினிடம் கொடுத்தோம்’ என்றார். எப்போதுமே அப்படித்தான். தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்குவதற்கு முன் தி.மு.க. கூட்டத்தைப் போட்டு, ‘யாருக்காவது அமைச்சர் பதவி வேண்டுமா?’ என்று கலைஞர் கேட்டார். யாரும் ‘வேண்டாம்’ என்று சொல்லி விட்டார்கள் (சிரிப்பு, கைதட்டல்). கனிமொழியை எம்.பி.யாக்கும்போதும் அப்படித்தான். ‘யாருக்காவது எம்.பி. பதவி வேண்டுமா?’ என்று கேட்டார். யாரும் ஏற்கவில்லை. ‘சரி, கனிமொழிக்குக் கொடுக்கிறேன்’ என்று கொடுத்து விட்டார். எல்லோரும் நிராகரித்துவிட்ட விஷயங்களைத்தான், இவர் குடும்பத்தினர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் இதற்கு அர்த்தம்.

பிரபாகரன் அப்பாவிற்கு கலைஞர் ஏன் இரங்கற் கவிதை எழுதவில்லை என்று கேட்டார். ஏதோ ஒன்றிரண்டு அவர் மறந்து போய்விட்டால், தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாம் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை விட்டு, ஏன் நினைவு படுத்துகிறீர்கள்? (சிரிப்பு, கைதட்டல்) இதற்கு அவர் ஒரு கவிதை எழுத வேண்டுமா? ஏற்கெனவே அவர் சொல்லி விட்டார். ‘நான் மௌன அழுகை அழுகிறேன். என் மௌன அழுகை யாருக்குத் தெரியப் போகிறது’ – என்று. ஏன் மௌனமாக அழ வேண்டும்? உரக்க அழுவதற்குத் தைரியமில்லை. மத்திய அரசுக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற பயம். அதனால் மௌன அழுகை.

அழகிரி – ஸ்டாலின் தகராறு வருமா என்று கேட்டார். எனக்குத் தெரியாது. சொல்ல முடியாது. சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; அதற்கு ஆட்சி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்தால், தகராறு வராது. அப்படியில்லாமல் அதிகாரப் போட்டியில், நீயா நானா பார்த்து விடலாம் என்று வந்தால், தகராறு வரும். அதை இப்போது சொல்ல முடியாது. ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு மூன்று பேரை அரசியலில் ஈடுபடுத்தினால், பிரச்சனைதான். இப்போது பால்தாக்கரே குடும்பத்தில் தகராறு வரவில்லையா? அதே பிரச்சனைதான் இங்கும். ஒரு குடும்பத்தில் ஒருத்தரை மட்டும்தான் உள்ளே கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்யாமல், இவர் இரண்டு மூன்று பேரை கொண்டு வந்திருப்பதால், தகராறு வரக் கூடும்.

தற்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவு அதிகமா, கருணாநிதிக்கு ஆதரவு அதிகமா என்று கேட்டார்! வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் ஒரு தேர்தலை இங்கே நடத்தட்டும். அதன் பிறகு இந்தக் கேள்விக்கான பதில் நம் எல்லோருக்கும் தெரிந்து விடும் (பலத்த கைதட்டல்). ஒரு தரப்பு பணம் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்றால், யாருக்கு உண்மையான ஆதரவு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. பணம் கொடுக்காமல் ஒரு தேர்தல் நடந்தால், நமக்கே நிச்சயம் தெரிந்து விடும். ஆனால் பொதுவாக, எப்போதுமே தி.மு.க.வை விட, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி கூடுதல்தான் (பலத்த கைதட்டல்). ஆனால், தொடர்ந்து, தி.மு.க.விற்கே கூட்டணி வலுவாக அமைந்து வருகிறது. அந்த வலுவான கூட்டணியை எதிர்த்து, அதையும் மீறி ஓட்டு வாங்கும் சக்தி எதிர்தரப்பில் இல்லை. தி.மு.க.வின் வெற்றிக்கு அது ஒரு காரணம்; பணம் இன்னொரு காரணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: