காதலிப்போரே கவனியுங்கள்

சொல்லிலே தேன் தோய்த்து, எழுத்திலே உணர்வைக் கூட்டி, பொங்கி வரும் புனலாய்,  தெறித்து விழும் முத்தாய் வார்த்தைகளை சரம் சரமாய் கோர்த்து காதலென்பது என்ன என்று எழுதுகிறார் அறிஞர் அண்ணா.

காதல் என்பது தர்க்கத்துக்கு கட்டுப்படாதது. அதனை அளக்கும் கோல் கிடையாது; நிறுத்திடும் துலாக்கோலும் இல்லை. அரும்பு மலர முகூர்த்தம் குறிப்பாரில்லை. பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தை பட்டத்தரசனுங்கூட சட்டமிட்டுத் தடுத்திட முடியாது. முடி வேந்தனாலும், ஓர் மயிலை ஆடு என்று கட்டளையிட்டுத் தோகையை விரித்தாடச் செய்யவும் முடியாது, தானாக களி கொண்டு ஆடிடும் மயிலை “ நிறுத்து உன் நடனத்தை” என்று கூறிடவும் முடியாது. அது போலவே தர்க்கமும், தடையுத்தரவும், தண்டனையும், நிந்தனையும், வம்பும் வல்லடியும், வாலிப உள்ளத்திலே மலரும் அந்தக் காதல் எனும் உணர்ச்சியைப் பறித்து விட முடியாது.

அன்புடன் அனாதி

பிற்சேர்க்கை : சேர்த்தது குஞ்சு

குஞ்சாமணி : என்னாப்பா இது ?

அனாதி : காதல் என்பது என்னவென்று அறிஞர் அண்ணா எழுதியிருக்காரு

குஞ்சாமணி : அது யாருப்பா பகலோன், பங்கஜம் ?

அனாதி : ????

One Response to காதலிப்போரே கவனியுங்கள்

  1. ananthu சொல்கிறார்:

    pakalon – suriyan, pangajam -Thamari

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: