தமிழகத்தின் நிரந்தர முதல்வர் கலைஞர்

அனாதி அவர்களுக்கு,

கோவையிலிருந்து விக்னேஷ் எழுதுகிறேன். உங்களின் தளத்தின் அதி தீவிர வாசகன். குஞ்சாமணியின் தீவிர ரசிகன். பல அரசியல் கட்டுரைகளையும், பத்திரிக்கைச் செய்திகளையும் எழுதி வருகின்றீர்கள். கலைஞரை விமர்சிக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். குஞ்சாமணி வேறு காணாமல் போய் விட்டார். அவரை எழுதச் சொல்லுங்கள்.

கலைஞரைப் பற்றிய கடும் விமர்சனங்களை முன் வைத்து எழுதுகின்றீர்கள். ஆனால் கலைஞரின் ராஜ தந்திரம் பற்றி ஒரு வார்த்தை இல்லை. இலவசத்தைக் கொடுத்து ஏழைகளை கவர்ந்தார். ஓட்டுக்கு காசு கொடுத்து நடுத்தர மக்களைக் கவர்ந்தார். கோடீஸ்வரனிலிருந்து லட்சாதிபதி, நடுத்தர, ஏழைகளையும் இன்றக்கு கவர்ந்தே விட்டார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த முதலமைச்சரும் கலைஞர் தான். இது வரையில் தனியார் பள்ளிகள் அடித்து வந்த கொள்ளையினை ஒரே உத்தரவில் காணாமல் அடித்து, தமிழக மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டாரே இதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

உங்களின் கருத்தை அவசியம் எழுதுங்கள்.

விக்னேஷ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அன்பு விக்னேஷுக்கு வணக்கம்.

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த குழு என்றவுடன் இதுவும் ஒரு விஞ்ஞான ஊழலுக்கான விதை என்ற நினைப்பில் இருந்தேன். ஏனென்றால் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு வரி, கட்டணக்குறைப்பு என்ற அறிக்கைதான். உடனே சம்பந்தப்பட்டவர்கள் பெட்டி பெட்டியாய் கொண்டு போய் சம்பந்தப்பட்டவர்களைக் கவனித்து விடுவார்கள். இந்த விஷயத்தில் நானும் நேரடியாக சம்பந்தப்பட்டு இருக்கிறேன். பெட்டி சென்ற பின்னர் அறிக்கை காலாவதியாகிவிடும். மெட்ரிக் பள்ளிகளிலிருந்து பெட்டி வசூலுக்குத்தான் இந்த அறிக்கை என்று எண்ணினேன். ஆனால் நடைமுறைப் படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் இன்னும் போக வேண்டியதூரம் அதிகம். கோர்ட்டுகள் இருக்கின்றன. அரசு உத்தரவிற்கு தடை ஆணை பெற்று விட்டால் முடிந்தது கதை.

தனியார் பள்ளிகளில் இன்னும் ஆசிரியருக்கான சம்பளமே 4000 தாண்டவில்லை. ஆனால் தனியார் பள்ளிக் கூட்டமைப்புகள் கல்வியின் தரம் குறைந்து விடும் ஆய் ஊய் என்று கத்துகிறார்கள். எனக்கு நன்கு தெரியும். வரும் வசூலில் 50 சதவீதம் கருப்பாகவும், 50 சதவீதம் வெள்ளையாகவும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள் தனியார் பள்ளிகளின் முதலாளிகள். பொதுச்சேவையின் கீழ் லைசென்ஸ் வாங்கி விட்டு டொனேஷன் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் பள்ளிகள் அரசின் இந்த உத்தரவை எதிர்த்தால் அரசுடைமையாக்க வேண்டும். அரசின் கட்டண நிர்ணயம் செய்தது எல்லாம் பல ஆசிரியர்களின் கருத்தினையும் ஏற்று உருவாக்கப்பட்டது தான். சம்பந்தப்பட்ட பள்ளிகள் இதே கட்டணத்தைத்தான் வசூலிக்கின்றனவா என்று ஆராய வேண்டும். அதற்கு என்ன வழி என்று அரசு யோசிக்க வேண்டும்.

கலைஞரின் இந்த உத்தரவு மட்டும் செயல்படுத்தி விட்டால் எனக்கு நன்கு தெரியும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் “கலைஞர்” தான் என்பது. அரசின் பள்ளிகள் கட்டண உத்தரவு அமல் செய்யப்பட்டால். தானும் வாழனும் பிறரையும் வாழ வைக்கனும் என்ற பழமொழிக்கு கலைஞரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கலைஞரின் ராஜ தந்திரம் வேலை செய்யுமா என்பது தொடர்ந்து நடக்கும் செயல்களை கண்ட பின்னர் தான் சொல்ல முடியும்.

கலைஞரை நானொன்றும் விமர்சிக்கவில்லை. ஆரோக்கியமான விவாதத்தை கிளப்ப அவரின் ஆட்சிக்கு எதிராய் எழுதப்படும் கட்டுரைகளை பலரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். அம்மா ஆண்டாலும் இதைத்தான் செய்வேன். கலைஞரின் ரசிகன் நான். தேனியைப் போன்ற அவரின் சுறுசுறுப்பு, உழைப்பு இவற்றைப் பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். உழைப்புக்கு உதாரணம் தேனி அல்ல கலைஞர் என்றுதான் சொல்வேன்.

மக்களுக்கான அரசாய் அவரின் அரசு பரிமளிக்க வேண்டுமென்பதுதான் என் ஆவல். மேலும் திரு ஸ்டாலின் அவர்களின் நிரந்தர விசிறி நான். அம்மாவின் தன்னம்பிக்கையின் பரம விசிறி நான். தமிழ் சினிமா உலகில் அசைக்கமுடியாத நடிப்புத் திறமை கொண்டவர் ஜெயலலிதா அவர்கள்.

அன்புடன் அனாதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: