பசுமை விகடனுக்கு ஒரு கண்டனம்

கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற  நிறுவன வளாகத்தில், எரிசாராய ஆலை தொடர்பாக ஏப்ரல்-9 ம் தேதியன்றைக்கு மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில், மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது! அதற்காக விவசாயிகள் திரண்டு வந்திருந்த போது நடந்த சம்பவத்தை பசுமை விகடனில் எழுதி இருக்கின்றார்கள்.  தமிழ் நாடெங்கும் சாராய ஃபாக்டரிகள் பெருகட்டும். குடிமகன்கள் குடித்து குடித்து சந்தோஷமாக இருக்கட்டும் என்ற அரசின் மக்கள் அபிமானத்தை விகடன் கேவலப்படுத்தி இருப்பதை நினைத்தால் வேதனை வருகிறது. தமிழின் தலைவர், தமிழகத்தின் விடிவெள்ளியாம் முதல்வரின் தம்பியாம் டி.ஆர்.பாலுவின் உறவினர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றார்கள் என்பதற்காக மக்கள் ஆவேசப்படுவெதெல்லாம் சட்ட விரோதம். மிகச் சரியாக கடமையைச் செய்த காவல்துறையினரையும், மக்களுக்காகவே காசு பணம் எதிர்பாராமல், இரவு பகல் என்றும் பாராமல் உழைக்கும் அரசு  அலுவலர்களின் மீது குற்றம் சாட்டுவதும் மக்களுக்கு அழகா?  காலம் காலமாக விவசாயத்தைச் செய்து என்ன பலனைக் கண்டார்கள் தஞ்சாவூர் மக்கள். சாராய ஃபாக்டரி மூலம் வரும் மணத்தை எங்காவது இலவசமாய் அனுபவிக்க முடியுமா? உழைப்பை விட போதையும் அதனால் உண்டாகும் இன்பமும் முக்கியம் என்பது கூட தெரியாமல் இருக்கும் ஆட்டு மந்தைக் கூட்டமாக மக்கள் இருப்பது கண்டு வேதனை தான் மிஞ்சுகிறது.

கிங்க்ஸ் ஃபாக்டரிக்கு எதிராக எழுதிய பசுமை விகடனை கண்டிக்கிறேன். இது பத்திரிக்கை சுதந்திரத்தை மீறும் செயல். அரசின் நல்லெண்ணத்தை இவ்வாறு திருத்தி, தவறான தகவலைத் தருவதும் சட்டப்படி குற்றமென்பது இனிமேலும் பசுமை விகடன் உணர வேண்டுமென்பதே எனது நோக்கம்.

இனி கீழே பசுமை விகடனில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியைப் படியுங்கள்.

இப்படியெல்லாம் நடக்குமா!

-அன்றைய தினம் நடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துதான் போனோம்.

அந்த எரிசாராய ஆலையின் வாயில் அருகே… சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில்… ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகள்… ‘இந்த ஆலையை இங்கே செயல்படவிட மாட்டோம். இது எங்கள் வாழ்க்கையையே காவு கேட்கும் ஆலை’ என்று உறுமியபடி நின்றுகொண்டிருக்க… அவர்களுக்கு அணை போட்டபடி நின்றிருந்தனர் நூற்றுக்கணக்கான காவல் துறையினர். சட்டென்று அரிவாளோடு தோன்றிய ரவுடிகள் சிலர், விவசாயிகளின் கூட்டத்தில் புகுந்து இருவரை சரமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு, சட்டென்று அந்த ஆலைக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.

நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்ட இந்தக் கொடூரத் தாக்குதலால் நிலைகுலைந்த விவசாயிகள், ஆவேசம் பொங்க காவல் துறையினரை நோக்கி ஓட… ‘இதுதான் சந்தர்ப்பம்’ என்று காத்திருந்தது போல… விவசாயிகளின் மீதே கண்மூடித்தனமாக தங்களின் லத்தியைப் பாய்ச்ச ஆரம்பித்தது காவல் துறை! ஒட்டுமொத்த விவசாயிகளும் இதனால் சிதறி ஓட… அந்தப் பகுதியே போர்க்களமாக மாறிப்போனது. ஆங்காங்கே தெறித்து விழுந்த ரத்தச் சிதறல்கள்தான் அந்த சம்பவத்துக்கு சாட்சி!

‘கருத்து சொல்ல வாங்கனு கூப்பிட்டவங்க… ஆளை வெச்சு வெட்டுறாங்க. அந்த ரவுடிகளையெல்லாம் வெளியில நடமாட விட்டுட்டு, 25 விவசாயிகள் மேல வழக்குப் போட்டிருக்காங்க. இந்த நாட்டுல மக்கள் ஆட்சி நடக்குதாங்கறதே சந்தேகமா இருக்கு” – விவசாயி திருவள்ளுவன்

சம்பவத்தின்போது அங்கே இருந்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன். அவரிடம் நாம் கேட்டபோது, ”அந்தக் கூட்டம் அரசோட நடைமுறை விதிகளை அனுசரிச்சுதான் நடந்தது. எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் பதில்” என்று மட்டும் சொல்லிவிட்டு வாயை இறுக மூடிக் கொண்டார்.

நன்றி : பசுமை விகடன்.

One Response to பசுமை விகடனுக்கு ஒரு கண்டனம்

  1. Raja சொல்கிறார்:

    Hi,

    In the visaya meellam thanai tholaivarukku theriyathu avarukku mukkiyam tamil manaduthan (manada mail kuda). tholaivaru namma 23 munam pulikesi mathiri varalaru than mukkiyamnu sonnarulla atha pola evaru tamil mandu pudunguraru. Oth…a evan kettan evvlau kodi selavu panni tamil manadu nadatha. athukku pathil makkalukku nalla kariyam panna naraya visayam irukku.

    eppa than intha nadu thurppi adikkumo theriyala

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: