கீலா நோகீலா – உண்மையில் நடப்பது என்ன?

குஞ்சு காலையில் படபடப்பாக உட்கார்ந்திருந்தான். குஞ்சுவின் மனைவி ஷாப்பிங் சென்றிருந்தாள். இன்னிக்கு கோழிக் குழம்பு கிடைக்காமல் போய் விடுமே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தான். அந்த நேரம் பார்த்து அவன் மொபைலுக்கு குன் டீவியிலிருந்து அழைப்பதாக ஒரு குட்டியின் குரல். உள்ளுக்குள் விசுக்கென்று விளக்கு எரிந்தது. ஒகே.. ஓகே. இன்னிக்கு வறுவல் ரெடி பண்ணிடலாம்னு லேசா ஆரம்பிச்சான்.

அந்தக் குட்டி குஞ்சுவிடம் “ உங்கள் பெயர் தானே குஞ்சாமணி?”

”ஆமாம் ” – குஞ்சு

”உங்கள் நம்பர்தானே 9800XX ?” – குட்டி

” ஆமாம், எனக்கு ஒரு டவுட்டு, கேட்கலாமா?” – குஞ்சு (வழக்கமான பிட்டைப் போட்டான்)

”ம்….கேளுங்க..” – குட்டி

”நீங்க பொண்ணுதானே? ”- குஞ்சு

”ஏன் அப்படிக் கேட்கிறீங்க?” – குட்டி

”சொல்றேன்.. சொல்றேன், நீங்க கேட்க வந்ததைக் கேளுங்க ” – குஞ்சு

”உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? “ – குட்டி

இன்னிக்கு குஞ்சுவோட பிரச்சினை கோழி. அதான் நீ மாட்டிட்டியே, உன்னை வறுக்காம விடமாட்டேன் கோழின்னு நினைச்சுக்கிட்டு வழக்கம்போல

”என் அப்பாவுக்கு கிட்னி பெயிலியர் பணமில்லாமல் கஷ்டப்படுகிறேன்” என்று சொன்னான். சும்மா குட்டிகளுக்கு இரக்கம் வரனும்னு சொல்ற வழக்கமான டயலாக்.

”உங்களையும், உங்கள் மனைவியையும், உங்கள் தகப்பனாரையும் அழைத்துக் கொண்டு எங்கள் ஸ்டியோவிற்கு வந்து விடுங்கள். அத்துடன் உங்கள் தகப்பனாருக்கு இருக்கும் நோய் பற்றிய விபரங்களையும் கொண்டு வந்து விடுங்கள். உங்களை கீலா நோ கீலாவிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறோம்” என்றாள் அந்தக் குட்டி.

தொடர்ந்து,

”நீங்க பொண்ணுதானேன்னு கேட்டீங்களே, எதுக்கு அப்படி கேட்டீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” – குட்டி

”அதுவா, ஏதோ தேவதை பேசுற மாதிரி இருந்துச்சு, அதுக்குத்தான் அப்படிக் கேட்டேன்” என்றான் குஞ்சு.

போன் துண்டிக்கப்பட்டது. சப்பென்று ஆகிவிட்டான் குஞ்சு. பிட்டு புஷ்ஷென்று ஆகிவிட்டது.

அதே நேரத்தில் குஞ்சு மனைவி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

”ஏய், நீயாடி குன் டிவிக்கு மெசேஜ் அனுப்பினாய்?”

”ஆமா, அதுக்கென்ன இப்போ?” என்றாள் குஞ்சுவின் மனைவி

”கீலா நோ கீலாவுக்கு அழைத்திருக்கிறார்கள்” என்றான் உற்சாகத்தை வெளிக்காட்டாமல். 27 குட்டிகளுடன் போனில் அழைத்த ஒரு குட்டியோட சேர்த்து 28 குட்டி. 2 + 8 = 10, 1+ 0 = 1. மை லக்கி நம்பர். நிச்சயம் குட்டி ஒன்னு கிளிக்காயிடும் என்ற குஷியிலும், அத்தோடு 50 லட்சம் பணம் வேறு என்று சரி மூடில் ஜில்லென்று ஆகிவிட்டான்.

ஆனால் அந்த அப்பா டயலாக்குக்கு என்ன செய்வது என்று யோசித்தவுடன் குடிகாரன் நினைவுக்கு வந்தான். சோ அவனை அப்பாவாக்கிடறதுன்னு முடிவு செஞ்சு, சென்னையில் பிரபலமான மருத்துவரிடம் சொல்லி கிட்னி பெயிலியர் என்ற சர்ட்டிபிகேட்டுக்கு குடிகாரன் பேரில் ஏற்பாடு வேறு செய்தான். குடிகாரனிடம் விஷயத்தைச் சொல்லி ஒழுங்கா வந்து சேர்ந்து விடு என்று 28 கால்குலேஷனைச் சொல்ல, உடனே டிக் அடித்தான் குடிகாரன்.

குன் டிவி ஸ்டியோ. ஒரு ஆளு டாக்குமென்ட்ஸ்களை சரி செய்து டாக்டரிடம் விசாரித்து உறுதிப் படுத்திக் கொண்டார். மேலும் ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்து வாங்கினார். ”எதுக்கு இது?” என்று கேட்டான் குஞ்சு.  ”மிஸ்டர் முதல் மூன்று ரவுண்டிலேயே நீங்க டீல் சொல்லி விடனும். அப்படி டீல் சொல்லாமல் கடைசி வரை விளையாண்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம், விளையாட்டின் முடிவில் 50 லட்ச ரூபாய் ஜெயித்தாலும் இந்த அக்ரிமெண்ட் படி உள்ள அமவுண்ட் தான் உங்களுக்கு கொடுப்போம்” என்றார். ”அப்போ 50 லட்சம் அறிவிப்பு?” என்றான். ”அதெல்லாம் அறிவிப்பு மட்டும் தான். இஸ்டம்னா சொல்லுங்க, இல்லேன்னா இப்போவே வெளியே போகலாம்” என்றார்.

என்ன செய்வது என்று யோசித்தான். சரி என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடுவோமே என்று நினைத்தபடி ”ரெடி சார்” என்றான். குடிகாரன் அதற்குள் ஒரு குட்டியோட பேசிக் கொண்டிருந்தான். குஞ்சுவும் ஷூட்டிங்க் ஆரம்பிப்பதற்குள் 29லிருந்து ஏதாவது ஒன்றை டிக் அடிக்கணும் என்று தன் அஜால் குஜால் வேலைகளை ஆரம்பித்தான்.

அதில் ஒரு எக்ஸாம்புல் :

”ஏன் என் முன்னால் கண்ணை மூடிக் கொள்கிறாய்” என்றாள் காதலி
”உனக்குத் தெரியவில்லையா?” என்றான் காதலன்
”தெரியவில்லையே, நீயே சொல்” என்றாள் காதலி
”எங்கே கண் மூடி நிற்போம்?” என்று கேட்டான் காதலன்
”தெரியவில்லையே” என்றாள் காதலி
”கடவுள் முன்!” என்றான் காதலன்
” அய்யோ, கடவுளே, கடவுளே என்னைக் கொல்கிறாயே உன் அன்பால் என்று கதறிய காதலி என்னை எடுத்துக் கொள், இப்போதே என்னை உன்னவளாக்கி விடு” என்றாள் – எங்கோ படித்தது

அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள் குடிகாரனும், குஞ்சாமணியும். அப்போது பார்த்து மழை பெய்தது ஸ்டியோவிற்குள். அடச்சே என்றவன் விழித்துப் பார்க்கையில் குஞ்சின் மனைவி கையில் குடத்தோடு நின்றிருந்தாள்.அடச்சே, கனவா இது என்று சொல்லிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான் குஞ்சு.

குறிப்பு : இது ஒரு சிறுகதை. ஒரு டிவியில் கீலா நோகீலா பார்த்த உடன் படுத்ததால் குஞ்சுவின் கனவில் வந்த சம்பவங்கள்தான் மேலே உள்ளது. யாரையும் எவரையும் புண்படுத்த அல்ல. சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சியை கிண்டல் செய்வதும் அல்ல. எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மெயில் அனுப்பினால் பதிவு நீக்கப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: