கொத்துக்கறியான கோழி – சாட்சிக் கடிதம்

அனாதிக்கு,

நீங்கள் ஆடு மாட்னா பிரியாணி அம்மா மாட்னா குர்பானி கட்டுரையில் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை.

தமிழகத்தில் பிரபலமான எழுத்தாளரைச் சந்திக்க சென்றிருந்த போது அவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா? “என்னுடன் இன்றைய நாளை கழிக்க முடியுமா?”. இந்த சம்பவம் நடக்கும் முன்பு வரை அவரை என் தெய்வமாக, தந்தையாக எண்ணியிருந்தேன். ஆனால் அவருடைய எண்ணமோ எனது உடம்பின் மீதுதான் இருந்தது.

காரித்துப்பி விட்டு வந்தேன். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

என் தோழிக்கு ஏற்பட்டதோ வேறு வகையான அனுபவம்.

எழுத்தாளரின் ஆசைக்கு தோழி இணங்கவில்லை என்பதற்காக தோழியின் உறவினர்களிடம் அவளை நான் வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லி விட்டார். அந்தப் பழியிலிருந்து என் தோழி தப்பிக்க தற்கொலை வரை சென்றாள். இந்த எழுத்தாளரும் பிரபலம்தான்.

ஆண்களைக் கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்கள் இந்த எழுத்தாளர்கள். பெண்கள் என்றால் அவ்வளவுதான். வாராவாரம் கடிதமென்ன?  மெயில் என்ன? sms என்ன?  அவள் மடங்கும் வரை விடமாட்டார்கள்.  அவர்களின் ஆசைக்கு இணங்கி விட்டாலோ அவர்களுடைய நண்பர்கள் அனைவரையும் வரிசையாக வர வைத்துவிடும் கொடூர மனப்பான்மை கொண்டவர்கள். சில எழுத்தாளர்கள் நல்லவர்களாக இருக்கலாம். அவர்களைப் பற்றி நான் எழுதவில்லை.

தமிழத்தில் பிரபலமான சில பல எழுத்தாளர்களின் உண்மை முகம் கொடூரமானது.  இவர்களுக்கு சமூகத்தின் பால் அன்போ, பிடிப்போ இல்லை. மது, மாது, பணம், புகழ் நான்கும் தான் நோக்கம்.

உங்களின் பதிவைப் படித்து ரசித்தேன். உண்மையை வெகு நாசூக்காய் விவரித்திருப்பது  நன்றாக இருக்கிறது.

பிரேமா,

கோவா.

பிரேமா அவர்களுக்கு, வணக்கம்.  கடிதத்தை திருத்துவதற்குள் என்பாடு உன்பாடு ஆகிவிட்டது.  அரச்சான் எழுதியது ஆடு மாட்னா பதிவு. அவன் பத்திரிக்கைத் துறையில் வேலை செய்கிறான். அவனால் எப்போதாவது ஒரு முறைதான் எழுத முடியும். உங்களின் கடிதத்தை அவனுக்கு போனில் படித்துச் சொன்னேன். சிரித்தான்.  ஆக, நீங்க சகதியாகாம தப்பிச்சிட்டீங்க. அதுவரைக்கும் சந்தோஷம் தான்.

குறிப்பு : இந்தக் குஞ்சாமணி மேல் இரக்கப்பட்டு விடாதீர்கள். அவன் படு பயங்கரமான ஆள். அவனை விசாரித்து மெயில் அனுப்பி விடாதீர்கள். இது எனது அன்பு வேண்டுகோள்.  உங்களின் பாராட்டுக்கு நன்றி.

அன்புடன் : குடிகாரன்.

சிறுகுறிப்பு : அனாதி வெளி நாட்டில் இருக்கிறார். அவர் திரும்புவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். இருப்பினும் உங்கள் கடிதத்தைப் பற்றி அவருக்கு தெரிவித்து விடுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: