உனக்குப் பத்து எனக்கு பதினைந்து

சினிமாவில் மிகப் பிரபலமானவர் அவர். அவரால் ஏகப்பட்டவர்கள் இன்றைக்கும் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்த எண்ணற்ற பெண்களும், ஆண்களும் அவராலே வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு இன்றைக்கு பணமும், புகழும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நன்றியுணர்ச்சியை அந்தப் பிரபலமானவர் என்ன கேட்டாலும் செய்து கொடுக்கும் அளவுக்கு அப்பிரபலத்தின் அன்புப்பிடியில் இருப்பார்கள். அந்தப் பிரபலமும் காசுக்கு ஆசைப்படுவதில்லை என்று சொல்வார்கள் இவர்கள். அவரை நம்பியவர்களை அப்பிரபலம் என்றைக்கும் கை விட்டதில்லை.

வெளி நாடு ஒன்றிலிருக்கும் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் பிசினஸ் சம்பந்தமாக ஒருவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அந்த ஹோட்டலில் இரவு நடன விருந்து என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவ்விருந்தில் கலந்து கொள்பவர்களில் முதல் பாராவில் எழுதியிருக்கும் பிரபலமும் அடக்கம். சரி அவரவர் பிழைப்பை பார்க்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டேன்.

என்னுடன் பிசினஸ் தொடர்பில் இருப்பவர் ஒரு முஸ்லிம். மிகப் பெரும் கோடீஸ்வரர். ஆணழகர். அன்பானவர். இரண்டு மனைவிகள் உண்டு. ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார தமிழர்களை விட அதிக சொத்து பத்து உள்ளவர். பிசினஸ் பேசும் போது மட்டும் அவரின் கண்கள் பளபளக்கும். அந்தளவுக்கு பிசினஸில் ஈடுபாடு உடையவர். ஒன்றும் தெரியாமல் பிசினஸில் நுழைந்து சாதிக்க துடிப்பவர்களுக்கு அவர் செய்யும் உதவி சாதரணப்பட்டது அல்ல. என்னை அவருக்கு நிரம்பப் பிடிக்கும். காரணம் என் நேரம் தவறாமை மற்றும் டீசன்ஸி. இவருக்கு அழகிய பெண்கள் என்றால் படு இஸ்டம். நான் சந்தித்த எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கு பெண்களின் மீதான ஈடுபாடு அதிகமிருக்கும். காரணம் அப்பெண்கள் தான் அவர்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறார்கள்.

எனது அமெரிக்க நண்பர் ஒருவர் வாரம்தோறும் பெண்களுடன் நடுக்கடலுக்குள் சென்று விடுவார். படகு ஓட்டுவதிலிருந்து, சமைத்துப் போடுவது வரை அனைவரும் பெண்கள் தான். திங்கள் கிழமை விடிகாலையில் திரும்பி விடுவார். இன்னொரு நண்பர் யூகேவில் இருக்கிறார். மிகப் பெரிய ஃபைனான்ஸ் கம்பெனியின் நிறுவனர். வாரம் தோறும் ஃப்ரான்ஸில் இருக்கும் நியூட் பீச்சுக்குச் சென்று விடுவார். அழகிய பெண்களை அவர் தேர்ந்தெடுக்கும் விதமே அலாதியானது. அது ஒரு கதை. பின்னர் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

அந்த முஸ்லிம் நண்பருடன் இரவு டின்னர் இருந்தது. ஃப்ரஷ்ஷாக மாறி நண்பரின் அறைக்குள் சென்றேன். அங்கிருக்கும் வரவேற்பரையில் மிகச் சொற்பமான உடைகளுடன் அமர்ந்திருந்தது இன்றைக்கு தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியான நடிகை. என்னைப் பார்த்ததும் பதறி எழுந்தார். அக்மார்க் தமிழ் முகம் கொண்டவன் நான். முகம் எட்டு கோணலாகி விட்டது. நான் அவரைக் கவனிக்காதது போல நண்பரின் பெட்ரூமிற்குள் நுழைந்தேன்.

”அனாதி, வரவேற்பரையில் பார்த்தாயா?” என்று கண்ணடித்தார் என் நண்பர்.

“இவர் எப்படி இங்கே” என்றேன்.

“நட்சத்திர இரவு என்றால் என்னவென்று நினைக்கிறாய் அனாதி” என்று சொல்லி சிரி சிரியென்று சிரித்தார்.

“மேடை ஆட்டத்தைப் பார்க்க ஒரு கூட்டம், இப்படி தனிமையில் ஆட்டத்தைப் பார்க்க ஒரு கூட்டம்,உங்களின் பெண்கள் இங்கு தங்களின் பிரபலத்தைக் காசாக்குகிறார்கள் அனாதி”என்றார்.

தொடர்ந்து,

”நட்சத்திர இரவு என்பது எங்களுக்குத்தான் அனாதி” என்றுச் சொல்லிவிட்டு நான் முதல் பாராவில் எழுதியிருக்கும் அப்பிரபலத்தின் பெயரைச் சொல்லி ”அவர் தான் இவ்வளவுக்கும் ஏற்பாடு” என்றார்.

”ஒரு இரவுக்கு இந்தியப் பணத்திற்கு இருபத்து ஐந்து லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

வேதனையுடன் சிரித்து வைத்தேன்.

”அனாதி நம்முடன் அந்த நடிகையும் டின்னரில் கலந்து கொள்வதில் உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே?”

”இல்லை” என்றேன்.

வித விதமான உணவு வகைகள் நிறைந்திருந்த அந்தச் சாப்பாட்டு மேஜையில் இருவர் மட்டும் அமர்ந்திருந்தோம். ஏனென்றால் இரவு என் நண்பருக்கு விருந்தாகப் போகிறார் வெள்ளைத்தோல் பேரழகியான அந்த நடிகை. ஒரு வகையில் அவரும் ஒரு வகை உணவுதானே ?

என்னை அந்த நடிகைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பேசியபடி டின்னர் முடித்தோம். டின்னர் முடிந்து வெளிவரும் போது அந்த நடிகையிடம்”இரவுக்கு எவ்வளவு தருகிறார் அப்பிரபலம்” என்றேன். ”பத்து” என்றார். மீதி பதினைந்து பிரபலத்தின் பாக்கெட்டுக்குள் சென்று விட்டது போலும். ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதை அந்தச் சமயத்தில் எனக்கு நினைவுக்கு வந்தது.

அன்புடன் அனாதி

குறிப்பு : இன்றைக்கு பிளாக்கில் குடிகாரனின் பதிவைப் பார்த்தேன். எங்கே சென்றிருந்தானோ இது நாள் வரை. படுபாவி இனி என்னவெல்லாம் எழுதப் போகின்றானோ? இனிமேல் தினமும் பிளாக்கைப் படிக்க வேண்டும். குடிகாரனின் பதிவுகள் படு ரகளையானது அல்லவா?

3 Responses to உனக்குப் பத்து எனக்கு பதினைந்து

  1. வால்பையன் சொல்கிறார்:

    இது புனைவு தானே!

    • அனாதி சொல்கிறார்:

      அனாதியிடம் கேட்க வேண்டும். அவர் அவ்வளவு சீக்கிரத்தில் உண்மையைச் சொல்ல மாட்டார். இந்தியா வந்ததும் கேட்டுச் சொல்கிறேன் – குஞ்சு

  2. […] This post was mentioned on Twitter by Senthil Nathan, டிபிசிடி. டிபிசிடி said: இது கதையா..? யார் அந்த பிரபலம்..? யார் அந்த நடிகை..? http://bit.ly/bQlN4c […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: