இந்தியா பட்ஜெட் 2010-11 : அதிர்ச்சி உண்மை

2010 – 2011 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட வரவு செலவினத்தின் விபரம் இது.

வரவாக கணக்கிடப்பட்டிருக்கும் தொகை ரூ 8,27,000 கோடி
செலவாக கணக்கிடப்பட்டிருக்கும் தொகை ரூ 11,09,000 கோடி


வரவு எட்டு ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். செலவு பதினோறு ரூபாய். பற்றாக்குறை ரூபாய் மூன்று என்று வைத்துக் கொள்வோம். இதை வட்டிக்கு கடனாக வாங்கி செலவுகளைச் சமாளிக்கலாம். இந்த மூன்று ரூபாய்க்கு வட்டியும், அசலும் செலுத்தப்பட வேண்டும் என்கிறது பட்ஜெட். அனைவருக்கும் இந்த விதமாகத்தான் பட்ஜெட் காட்டப்பட்டிருக்கிறது.  இந்த பட்ஜெட் அருமையானதொன்றாகும் என்றே நாம் அனைவரும் கருதுவோம். ஆனால் பாருங்கள் அதே பட்ஜெட் டாக்குமென்டுகளில் காட்டப்பட்டிருக்கும் இன்னொரு உண்மையினை அறிந்து கொண்டால் அதிர்ந்து போய் விடுவோம்.

அது என்ன உண்மை ?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மூன்று ரூபாய் பற்றாக்குறையினை கடன் வாங்கிச் சமாளித்து விடலாம். ஆனால் முந்தைய ஆண்டுகளில் வாங்கிய கடன் என்னாயிற்று? அது எவ்வளவு? வட்டி எவ்வளவு?

சம்மரி ஆஃப் டிமாண்ட்ஸ் ஃபார் கிராண்ட்ஸ் என்ற ஆவணத்தில் கடந்த ஆண்டில் வாங்கி இந்த ஆண்டே திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை, மற்றும் இந்த ஆண்டிற்கு கைமாற்று வாங்கி திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை என்று மொத்தமாய் இதே ஆண்டுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் தொகை என்று 33,80,000 கோடி ரூபாய் காட்டப்பட்டு இருக்கிறது.

அதாவது வரவு ரூபாய் 8,27,000 கோடி.
மொத்த உண்மையான செலவு ரூபாய் 45,09,000 கோடி.
இதில் கடனாக கொடுக்க வேண்டியது மட்டும் 33,80,000 கோடி ரூபாய்.
மொத்த செலவோ 11,09,000 கோடி மட்டும்.
வரவிற்கு மேல் கடன்.
அதுவும் வரவைப் போல பல மடங்கு கடன்.

இது தான் பட்ஜெட்டின் உண்மை நிலவரம் என்று பொருளாதார வல்லுனர் திரு எஸ். குருமூர்த்தி வக்கிரமான அரசுக் கடன் கொள்கை என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

இந்தக் கடனை மத்திய அரசு எவ்வாறு திருப்பிக் கொடுக்க இயலும்? என்ன வரவு இருக்கிறது? ஒரே வழிதான் இருக்கிறது. கடனைக் கட்ட மீண்டும் கடன் வாங்க வேண்டும்.

ஏன் இவ்வளவு கடன் வந்தது ?  யார் விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  பொருளாதாரத்தில் வல்லுனர்களாய் இருக்கும் பிளாக்கர்கள் யோசனை தெரிவிக்கலாம் அல்லவா?

கட்டுரைக்கு ஆதாரம் : துக்ளக்

நன்றி : துக்ளக், திரு எஸ்.குருமூர்த்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: