செலக்டிவ் அம்னீஷியா தமிழர்கள் !

மருந்துக் கடையில் காலாவதியான மருந்து விற்பனையை தற்போதுதான் கண்டு பிடித்தது போல செய்தி தாள்கள் செய்தி வெளியிடுவது வியாபார தந்திரம். பல காலமாய் நடந்து வரும் அக்கிரம் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது.  காலாவதியான மருந்தினால் பலியானோர் எத்தனை பேரோ யாருக்குத் தெரியும்?  நோய் தீர மருந்து வாங்கியவர்களை தங்கள் குடும்பம் வசதியாக வாழ கொலை செய்த மருந்துக் கடை முதலாளிகளையும், மருந்து விற்ற விற்பனையாளர்களையும் சட்டம் என்ன செய்து விடப்போகிறது.

சாட்சியே இல்லாமல் கொலை செய்த இந்தப் படுபாவிகளும் நாளை ஜாமீனில் வெளி வந்து விடுவார்கள். சாட்சி ஏதும் வராது என்பதால் குற்றவாளிகளும் தப்பி விடுவார்கள். ஏனென்றால் சட்டம் சொல்கிறது ஆயிரம் குற்றவாளி தப்பலாம், ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று. காலாவதியான மருந்தை வாங்கிச் சாப்பிட்டவன் செத்துப்போயிருப்பான். அவனா சாட்சி சொல்ல வரப்போகிறான் ?

இந்தச் சட்டம்தான் மக்களைக் காப்பாற்றுகிறதாம் வேடிக்கையாய் இல்லை.

ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பிச் சாப்பிடும் உயர்ரக உணவுகளில் கலக்கப்படும்  மசாலாவை தயாரித்து ஒருமாதம் ஃப்ரிஜ்ஜில் வைத்திருப்பார்கள். ஆட்டினை தோலுறித்து சில்லிட்ட அறையில் தொங்க விட்டு வைப்பார்கள். மீனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குளிர்பதன அறையில் வைக்கப்படும் உணவு அத்தனை சிறந்ததா என்று எவராவது யோசிப்பது உண்டா?

மீந்து போன மாவு, முதல் நாள் சுட்ட பஜ்ஜி,  கொதிக்கும் பாலில் புது பாக்கெட் பாலை பிய்த்து ஊற்றி, பால் கொதிக்கும் முன்பே டீ போட்டுக் கொடுக்கும் டீக்கடைகள்,  மீந்து போன குருமா, புளித்துப் போன இட்லி மாவு என ஹோட்டல்களில் நடக்கும் அயோக்கியத்தனத்தை அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்ன செய்து விட்டோம்.

பெரிய பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் நடக்கும்  அயோக்கியத்தனமான செயல்களைப் பட்டியலிட்டால் நடுங்கிப் போய் விடுவீர்கள். மனிதனின் அத்தியாவசிய உணவுப் பொருளில் கலப்படம் இல்லாத பொருள் ஏது ?

கிராமப்புறங்களில் விற்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை கலப்படப் பொருட்கள் அல்லது டூப்ளிகேட் பொருள்கள் தான்.

வியாபாரிகளின் கைகளிலும், நீதியின் கைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தராசு எப்போதும் ஒரு பக்கமாய் சாய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு அது நேராகவே இருப்பதாகப் போதிக்கப்படுகிறது. இது தான் அரசியல் என்பது.

பெரும்பான்மையான மக்களுக்கு நீதி என்ற ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டினால் தான் தான் ஆள முடியும் என்பதால் ஆட்சியாளர்கள் நீதி இருப்பது போலவும், சட்டத்தின் ஆட்சி நடப்பது போலவும் பம்மாத்து காட்டுவார்கள்.  இங்கு ஒரு உதாரணம் பார்த்து விடலாம்.

பென்னாகரத்தில் காசு விளையாடுகிறது. ஜன நாயகத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லலுறும் மக்கள் வேறு வழி இன்றி தங்களையே ஆயிரத்திற்கும், ஐநூறுக்கு விற்கிறார்கள். வறுமை தாங்காமல் கிட்னியை விற்றவர்களுக்கும், கோடிக்கணக்கான மக்கள் உயிர் கொடுத்து வாங்கிக் கொடுத்த ஜன நாயகத்தை விற்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

தேர்தலைக் கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் இருக்கிறது என்கிறார்கள். தேர்தல் கமிஷனருக்கு காசு விளையாடுவது தெரிகிறது. அவரால் என்ன செய்து விட முடியும் தற்போது?

இதுதான் இந்தியாவின் சட்டம். இது தான் இந்தியாவின் நீதி….

கேலிக்கூத்து ! கேலிக்கூத்து….. !!!

தமிழர்களுக்கு எப்போதுமே ஒரு நோய் உண்டு அது செலக்டிவ் அம்னீஷியா.  காலாவதியான மருந்துப் பிரச்சினையில் மற்றவற்றை மறந்து விட்டார்கள்.

2 Responses to செலக்டிவ் அம்னீஷியா தமிழர்கள் !

 1. தமிழன் சொல்கிறார்:

  முதலில் மன்னிக்கவும், உங்கள் அளவுக்கு நான் செய்திகளை பின்தொடரவில்லை அதனால் இது புது செய்தியாக நினைத்துவிட்டேன். இதை அறிந்த போது மிக அதிர்ச்சியாக இருந்தது. இது மிக கொடுமையான நிகழ்வு.

  தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  நான் கேட்டதும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி!

  தமிழன்

  • அனாதி சொல்கிறார்:

   தமிழன் மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி. ஆனால் பாருங்கள் எது அதிர்ச்சியாய் இருந்தது என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே அது தான் எனக்குப் பிரச்சினையாகி விட்டது. செலக்டிவ் அம்னிஷியாவா அல்லது …. வேறேதுமா ?

   தமிழன் என்றால் யார் என்று எழுதியிருக்கிறேன் படித்துப் பாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: