குஞ்சாமணி என்பது யார்?

அனாதி உங்களின் பிளாக்கை தினமும் வாசிப்பவரில் நானும் ஒருவன். மிகச் சுவாரசியமாய், கொண்டாட்டமாய், குதூகலமாய், ஆனந்தமாய் எழுதுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது என் எண்ணம். செக்ஸைப் பற்றியும், மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதும் ஒவ்வொரு பதிவும் வெகு சுவாரசியம். இடையிடையே இடை தெரியும் நடிகைகளின் போட்டோவை வேறு போட்டு விடுகின்றீர்கள். உங்களிடம் கேட்க வேண்டுமென்ற சில கேள்விகள் இருக்கின்றன. நேரமிருந்தால் பதில் எழுதவும். இல்லையென்றாலும் பரவாயில்லை.

உங்களின் பிளாக்கை எழுதுவது எத்தனை பேர்?

குஞ்சாமணி என்பது யார்?

கதையில் வரும் உங்களின் நண்பர்கள் எந்த ஊர் ?

தாங்கள் எந்த ஊர் ? எங்கே வசிக்கின்றீர்கள்? என்ன தொழில் செய்கின்றீர்கள்?

ராஜன்
சென்னை

000000000000000000

ராஜன் நானென்ன பிரபல எழுத்தாளரா கேள்விக்கெல்லாம் பதில் எழுத? இருப்பினும் உங்களின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

அனாதி பிளாக்கை எழுதுவது நான்கு நண்பர்கள். ஒருத்தர் டெல்லியில் வசிக்கிறார். மற்ற மூவரும் சென்னையில் வசிக்கிறார்கள். அத்தோடு நானும். பெரும்பாலும் நான் பிளாக்கில் எழுதுவதில்லை. சம்பவங்களை பகிர்ந்து கொள்வேன். அது பிளாக்கில் வரும். நான்கு நண்பர்களில் யாராவது ஒருவர் எழுதி விடுவார்.

குஞ்சாமணி எனது நண்பர். சென்னையில் வசிக்கிறார். அவர் அரசு அலுவலகத்தில் பெரிய பதவியில் இருப்பவர்.

கதையில் வரும் நண்பர்கள் பெரும்பாலும் சென்னையில் தான் வசிக்கின்றார்கள்.

நான் சென்னையில் மகாபலிபுரம் செல்லும் சாலையில் இருக்கும்  ஒரு ஊரில் வசிக்கிறேன். ஹோட்டல் தொழில் செய்கிறேன். சினிமாக்காரர்களுடன் சற்றே நெருங்கிய நட்பு உண்டு.

போதுமா?

அன்புடன் அனாதி

3 Responses to குஞ்சாமணி என்பது யார்?

 1. Devanathan சொல்கிறார்:

  ippadi oru peraa?? Fits well for Nithyananthaa..

  • அனாதி சொல்கிறார்:

   தேவ நாதன் என்பது சாதாரண பெயரா என்ன? கோவில் கருவறைக்குள்ளேயே கும்மாங்குத்து நடத்தி, அதை வீடியோவாகவும் பிடித்து ரசிச்ச பெயர் அல்லவா அது?

   குஞ்சாமணியில் என்ன இருக்கிறது தேவ நாதன்?

 2. srikanth சொல்கிறார்:

  பட்டும் படாமலும்….என்பார்களே…..இதானா அது….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: