நீங்கள் குருட்டுக் கோழைகள்

நித்யானந்தம் என்ன செய்து கிழித்து விட்டாரென்று இந்தக் குதி குதிக்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவே இல்லை. ஏன் இப்படி கோபப்படுகின்றீர்கள் என்றும் தெரியவில்லை. கையாலாகாதவனுக்கும், கோழைகளுக்கும் தான் இப்படிக் கோபம் வரும். நீங்களும் அப்படித்தானென்று நிரூபிக்கின்றீர்கள்.

நித்யானந்தர் செய்தது தன்னை நம்பி வந்தவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம். அது நம்பியவர்களின் பிரச்சினை. இந்து மதத்திற்கு நித்யானந்தர் ஒன்றும் கடவுள் இல்லை. அவர் ஒரு வியாபாரி. வியாபாரியை நம்பியது நம்பியவர்களின் குற்றம். ஓடிப்போகும் பைனான்ஸ் கம்பெனியை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு நன்கு தெரியும் நாம் என்றைக்காவது ஏமாற்றப்படுவோமென்று. ஆனால் ஆசை அவர்களை விடுவதில்லை. அதன் பலனாய் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை.

திரு ஜெயமோகன் பிளாக்கில் நித்யானந்தர் பிரச்சினையைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை இவ்விடத்தில் நீங்கள் படிப்பது நல்லது.

நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை. ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும்.

ஊடகங்கள் உருவாக்கும் இத்தகைய பிம்பங்களையும் இவர்களின் அமைப்புகளையும் சாராமல் சிந்திப்பதற்கான அகச்சுதந்திரத்தை, கவனத்தை ஒவ்வொரு இந்துவும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதற்கான பதிலாக இருக்க முடியும். ஒரு தனிமனிதன் தன் ஆன்மீகமான பயணத்தை தன்னுடைய சொந்த உள்மனதின் துணைகொண்டு தன் பக்தியாலும் தியானத்தாலும் தானே நிகழ்த்திக் கொள்ளவேண்டும் என்றுதான் இந்து ஞானமரபு அறைகூவுகிறது.

நித்யானந்தரோ அல்லது வேறு எந்த தனிமனிதரோ இந்து மதத்தின் நவீன முகமாக இருக்க முடியாது. இந்து மதத்தின் அடிப்படையான தரிசனங்கள் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப பரிணாமம் கொள்வதே அந்த முகத்தை உருவாக்கும். அதற்கு அமைப்புகளோ அமைப்பு மனிதர்களோ தேவையில்லை.

நம்முடைய தாழ்வுணர்ச்சியால், மூளைச்சோம்பேறித்தனத்தால், அச்சங்களால், சபலங்களால் நாம் தவறான நம்பிக்கைகளை நோக்கிச் செல்கிறோம். தவறான நம்பிக்கையில் முதல்காலடி எடுத்து வைக்கும்பொதே ஒவ்வொருவருக்கும் அந்தரங்கத்தின் ஆழத்தில் அந்த விஷயம் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்.

இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின் சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அது முன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ள முடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும். “

நன்றி : திரு ஜெயமோகன்
இணைப்பு : http://www.jeyamohan.in/?p=6653

ஜெயமோகனைப் பற்றி எழுதிவிட்டு சாருவைப் பற்றி எழுதவில்லை என்றால் சரியாக இருக்காது.

சாரு பேண்டஸி எழுத்தாளர். அவரின் எழுத்து நம்மோடு பேசும் தரமுடையவை. அது சில சமயம் கிளர்ச்சியைத் தரும், சில சமயம் யோசிக்க வைக்கும், சில சமயம் கோபம் கொள்ள வைக்கும், சில சமயம் பரிதாபப்பட வைக்கும், ஒரு வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமா போல. ஆன்மீகம் தழுவிய அவரின் கருத்துக்கள் ஆழமற்றவை, அர்த்தமற்றவைகள். அது அவருக்கும் தெரியும். சாருவைப் படிப்பது என்பது தினசரியைப் புரட்டுவது போல. தினசரியில் உண்மைச் செய்திகளுடன் இட்டுக் கட்டி எழுதப்படும் செய்திகளும் வரும். கடவுளைக் கண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியது எல்லாம் அவரின் உணர்ச்சி வசப்பட்ட எழுத்துக்கள். ஒரு நாத்திகன் ஆத்திகனாக மாறுவதில் இருக்கும் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால், சாரு ஒரு கமர்ஷியல் சினிமாவைப் போன்றவர். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

சரி இப்போது சில கேள்விகளைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் !

அமெரிக்காவின் ஆசையால் அப்பாவி ஈராக் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்களே, அந்த அமெரிக்க அதிபரை நல்லவர், வல்லவர் என்று சொல்கின்றீர்களே அதில் என்ன லாஜிக் இருக்கிறது?

இதோ இலங்கையில் நம் தமிழ் சகோதரர்களை கொலை செய்து, தமிழ்ச் சகோதரிகளை கற்பழித்துக் கொன்றார்களே அவர்களைத் தலைவர்கள் என்று கொண்டாடுகின்றீரே, அந்த தலைவரை விடவா நித்யானந்தர் பெரிய குற்றமிழைத்து விட்டார்?

குஜராத்தில் கர்ப்பிணிப் பெண்ணை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி அவளின் பிறப்புறுப்பு வழியாக கையை விட்டு கருவை வெளியே இழுத்துக் கொன்றார்களே அவர்களை விடவா நித்யானந்தர் தவறு செய்து விட்டார்?

இதோ பக்கத்து மாநிலத்திலிருக்கும் பிரச்சினை ஒன்று. தெலுங்கானாப் பிரச்சினையில் அரசியல் கட்சியினால் கிட்டத்தட்ட 400 மக்களுக்கு மேல் கொல்லப்பட்டார்களே, அந்த அரசியல் கட்சித் தலைவர்களை விடவா நித்யானந்தர் தவறு செய்து விட்டார்?

பட்டப்பகலில் நடு ரோட்டில் ரவுடிகளால் வெட்டப்பட்டவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே அவர்களை விடவா நித்யானந்தர் தவறு செய்து விட்டார்?

நீங்கள் தைரியசாலியாக இருந்தால் படுக்கையறையில் ஒரு சன்னியாசி பெண்ணுடன் இருந்ததை ரகசியமாய் படம் பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியினரை நோக்கி விரல் நீட்டுங்கள். அந்தத் தொலைக்காட்சி செய்தது சமூக விரோதச் செயல். தவறான செயல் நடந்தால் அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் செய்தது என்ன? சமூகத்தில் ஒரு பரபரப்பான, அமைதியற்ற சூழ் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்திருக்கிறார்கள். எங்கே அவர்களை நோக்கி குற்றம் சாட்டுங்கள் பார்ப்போம்? அப்படிச் செய்தால் உங்களையே அழித்து விடுவார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் அதைச் செய்ய மாட்டீர்கள்.

இவ்விடத்தில் ஒரு உதாரணத்தையும் சொல்லி விடுகிறேன். இளம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் போலீஸ் உயரதிகாரிக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கியது இந்திய மக்களை காப்பாற்றி வரும் சட்டம். அதைக் கேள்விப்பட்டு மனமுடைந்த ஒரு வாலிபன் அவரைக் கத்தியால் குத்தினான். இன்றைய அவனது நிலை என்ன தெரியுமா? அவனை மன நிலை பிறழ்ந்தவன் என்கிறார்கள். அதிகாரத்தை எதிர்த்தால் உங்களின் நிலையும் அதே கதையாகும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்தியாவில், செய்தியைக் கேள்விப்பட்டதும் ஆவேசமடைந்து மக்கள் தங்கள் கையில் சட்டத்தினை எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை தாக்குவது, உடைப்பது என்பது இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இது ஒரு தவறான நடவடிக்கை. ஆர்ப்பாட்டம், அடிதடி செய்யும் கட்சிகளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள என்ன அதிகாரமிருக்கிறது? வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சட்டத்தினை அமுல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களால் அத்தகைய அராஜவாதிகளை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போரை என்ன செய்து விடமுடியும்? யாராவது சொல்ல முடியுமா?

தனி மனித சுதந்திரத்தில் தலையிட மீடியாவிற்கு என்ன அதிகாரமிருக்கிறது என்று கேள்வி கேளுங்கள். நாளைக்கே உங்கள் வீட்டின் படுக்கையறைக்குள் கேமராவை வைத்து படம் பிடித்து ஒளிபரப்புவார்கள். அதற்கு ஒரு பதிவெழுதி ஆவேசப்படுவீர்களா?

ஆட்சியின் பெயராலும், அதிகாரத்தின் துணையாலும் நாள்தோறும் உலகமெங்கும் மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அதை எதிர்த்து எழுதுங்கள். உங்களை தைரியசாலிகள் என்று நம்பலாம். அவர்களை நோக்கி கையை நீட்டினால், நீட்டிய கை வெட்டப்படும் என்பது தெரிந்து தானே, எந்த வித எதிர்ப்பும் எழாது என்ற காரணத்தால் இந்தச் சாமியாரை நோக்கி கை நீட்டுகின்றீர்கள்? இளிச்சவாயன் தலையில் ஏழுகுத்து குத்துவார்களாம். அதைப் போலல்லவா இருக்கிறது உங்கள் செயல்.

எல்லோருமே தவறானவர்களாக இருக்கின்றீர்கள், தவறான செயல்களைச் செய்ய முற்படுகின்றீர்கள். மற்றவரை நோக்கி ஒற்றை விரல் நீட்டும் போது மற்ற மூன்று விரல்கள் உங்களை நோக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை  புரிந்துகொள்ள முயலுங்கள்.

அதற்காக நித்யானந்தருக்கு ஆதரவாய் எழுதுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர் செய்தது தன்னை நம்பியவர்களுக்கு துரோகம். அதற்கான பலனை அவர் அனுபவித்துத்தான் தீர வேண்டும். இவர் விஷயத்தில் அத்தனை பேரும் நடந்து கொள்ளும் செயல்பாடுகள் அயோக்கியத்தனமானது, அக்கிரமமானது, சட்டத்திற்குப் புறம்பானது.

இறுதியாக உங்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு சாலையை நம் வாழ்க்கையாக எடுத்துக் கொண்டால், அதில் நடந்து போகும் போது பாதையில் ஒரு சிறிய கல் கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை நாமே காலால் உதைத்துப் பாதையோரம் தள்ளிவிடுவோமல்லவா அதைபோல, பிரச்சினைகள்  வந்தால்  நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை வெகு அழகானது. வாழும் நாட்களை நமக்கென்று நாமே வாழ்வோம். உங்களில் பலபேர் ஆவேசப்பட்டிருப்பீர்கள், கோபப்பட்டிருப்பீர்கள், யாரெல்லாம் என்னென்ன எழுதியிருக்கின்றார்கள் என்று ஓடி ஓடிப் படித்திருப்பீர்கள். ஆனால் என் நண்பன் குஞ்சு என்ன செய்தான் தெரியுமா? அந்த வீடியோவை பார்த்துப் பார்த்து படு சந்தோஷமடைந்தான். அவனுக்கு அறம் என்பது என்ன, நீதி என்பது என்ன, நாமெப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்பது நன்றாகத் தெரியும். உங்கள் வாழ்க்கையையும் அவ்வாறே அமைத்துக் கொள்ளுங்கள்.

10 Responses to நீங்கள் குருட்டுக் கோழைகள்

 1. Chandru சொல்கிறார்:

  enaku neraiya velai iruku nama pesurathunala enna nadaka pothu mothala namakulla ottrumaiya valathukitaathan sari varum. athu vari meadia , arasiyel vaathigalnu yaraium nama thatiketka mudiyathu.

 2. srikanth சொல்கிறார்:

  HI,
  very well written ….you got guts to write very boldly and openly…..for the past seven or more years ….nithaya told many things to follow in our life…..but only his dark portion of life had reached our people very quickly…that means every one now been liked to talk of others personal life rather than their own……

 3. Karthik சொல்கிறார்:

  @anathi
  talaivare nacchunu eluthi irukeenga. hindu matham tani manithargalai nambi illai. athepol mediavirku endru ellai irukirathu. athai avargal meera kudathu. enaku eno diana ninaivu varugirathu

  @அஹமது இர்ஷாத்
  teliva parunga. avar enga samiyaruku atharavaga eluthinar.

 4. Karthi சொல்கிறார்:

  (i posted tis comments in truetamilans blog also.)

  i remember, years back before nithya started the kumutham- kathvu kattu , dinamalar wrote about this nithya’s weakness towards women.but it was written like a kisu kisu..
  The same nitya was alleged of his kumutham articles beacause of ghost writing of Valampuri john…
  do u remember this

 5. அஹமது இர்ஷாத் சொல்கிறார்:

  ஜெயமோகன் ஒரு பொறுக்கி, பெரியாரை திட்டும் இவன் ஏன் சாமியார்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டான்.

 6. Raja சொல்கிறார்:

  Nalla irukkura mathirithan irukku nanba….

 7. Ravi சொல்கிறார்:

  Very well written! Happy to see that all are not getting carried away by the heat of the moment!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: