சமாச்சாரம் (18+ மட்டும்)

பெண்கள் என்றால் ஆண்களுக்கு உடனே நினைவில் வருவது முலையும், யோனியும் தான். அதன்பிறகு புற ஈர்ப்புச் சமாச்சாரங்களான உதடுகள், கண்கள், இடுப்பு, பின்புறங்கள் மற்றும் இன்னபிற.

பெண்களைப் பற்றி ஆண்கள் இன்றைக்கும் கவிதைகளாய் எழுதித் தள்ள அவர்களுக்கு உதவிக் கொண்டிருப்பவை மேலே நான் சொல்லிய உறுப்புகள் தான். மனசு என்பதை விட்டு விடலாம். அது ஒரு மயக்க வஸ்து. யோனியைப் பற்றி யாரும் நேரிடையாக எழுதி இருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிப்பிக்குள் முத்து, தயிர்சாதம் என்றெல்லாம் நவீன சினிமாக் கலைஞர்கள் எழுதி இருப்பதை நாம் அறிவோம். தயிர்சாதம் ரகளையான வார்த்தை அல்லவா இது? அது எதற்கு இப்போது?

வாழ்க்கையை ஒரு மரமாக கருதினால் அதன் வேர் பெண். குடும்ப அமைப்பு மட்டும்தான் மனிதனுக்கு முழு அமைதியையும், அன்புச் சூழலையும், வாழ்க்கையின் மீதான பிடிப்பையும், முழுமையையும் தரும் என்பது காலம் காலமாக நமது முன்னோர்கள் மூலம் நாமெல்லாம் அறிந்த ஒன்று. குடும்பத்தை நிர்வகிக்கும் தலைவியானவளைப் பற்றியும், அவளின் பலகீனமான தருணங்களைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொண்ட குடும்பத்தலைவனால் மட்டும் தான் அவனின் குடும்ப வாழ்வை இனிதாக அமைத்துக் கொள்ள இயலும். அத்தகைய சில முக்கியமான விஷயங்களை நீங்கள் தானாக தெரிந்து கொள்ள முடியாது. காரணம் நமது சமூக அமைப்பு அவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தப்பும் தவறுமான செய்திகளை மட்டுமே அறிந்து கொண்டு அது தான் உண்மையாக இருக்கவியலும் என்று கருதி தன் வாழ்வை தொலைத்து விட்டு நிற்கும் எத்தனையோ நபர்களை நம் வாழ்வில் சந்தித்திருக்கலாம்.

இன்றைக்கும் குடும்ப நல கோர்ட்டுகளில் நிற்கும் வழக்குதாரர்களிடம் பேசிப் பார்த்தால் தெரியும். செருப்பு வாங்கியதில் ஆரம்பித்த பிரச்சினைக்கு விவாகரத்தில் வந்து நிற்பார்கள். அந்தளவுக்கு வாழ்க்கையை நுகர்பொருள் கலாச்சாரத்தின் மீது அமைக்க விரும்பி, பெரும்பாலான பெண்கள் அந்த மாய உலகிற்குள் வாழ முற்படுகிறார்கள். அதற்கு தடை என்று வரும்போது அதீத வெறுப்புணர்ச்சியில் தவறாக முடிவெடுத்து வேதனைப் படுகிறார்கள். பெண் புத்தி பின் புத்தி என்பார்களே அதுதான் இது. நுகர்வோர் கலாச்சாரம் எப்படி நம்மீது திணிக்கப்படுகிறது அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி அனாதி விரைவில் எழுதவிருக்கிறார் என்பதை உங்களுக்கு இவ்விடத்தில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்பதிவு கல்யாணமானவர்களுக்கு உதவும் என்று முன்பே சொல்லி இருக்கிறேன். அதை நினைவில் கொள்ளவும். கல்யாணமாகாதவர்கள் படித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உதவும். காதலிப்பவர்களுக்கு மண்டையில் சற்றே மசாலா இருந்தால் இச்சமாச்சாரத்தைப் பயன்படுத்தி காதலியை கட்டிலில் வீழ்த்தி பட்டயக் கிளப்பலாம். மேட்டர் முடிந்ததும் மீட்டர் போடலாம் என்று நினைக்கும் நண்பர்களே பெண்பாவம் பொல்லாதது என்பதை நினைவில் கொள்க. தானா விரும்பி வந்தால் ஏற்றுக் கொள்க. தடியால் அடித்து பழுக்க வைக்க விரும்பினால் நாளை தடிக்கே ஆபத்து உண்டாகிவிடும். அடியேனின் அனுபவத்தில் சொல்கிறேன். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

பெண்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தங்களின் மீது அன்பால் அல்லது காதலால் ஆதிக்கம் செலுத்துவதை விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களின் உருவாக்கம் அப்படித்தான் இருக்கிறது. சில விதிவிலக்குகளை விட்டு விடலாம். பெண்களால் தனித்து இயங்குவது என்பது பேச்சுக்கு வேண்டுமானால் கேட்க நன்றாக இருக்குமே தவிர நடைமுறையில் சரிப்பட்டு வராது.

காணாத ஏதோ ஓர் சொர்க்கத்தை பெண்கள் வைத்திருக்கிறார்கள் என்ற மாய பிம்பத்தால் சூழப்பட்டு மயக்கத்திலே திரிவார்கள் ஆண்கள். இந்த மயக்கத்தை தான் சினிமாக்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. உங்களால் தலைவன், உயிர் என்றெல்லாம் விளிக்கப்படும் ஹீரோக்களும் அந்த மயக்கத்தைப் பயன்படுத்தி உங்களைச் சினிமா தியேட்டருக்கு வர வைக்கிறார்கள். எந்த ஒரு சினிமா ஹீரோவும் ஹீரோயின் இல்லாமல் நடிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும் பெண்ணின் தொடையோ, முலையோ, உப்பிய யோனியையோ, பெருத்த அசையும் பின்புறங்களையோ காட்டாவிட்டால் ஈ கூட தியேட்டருக்கு வராது என்பது. விதி விலக்காய் சில படங்கள் இருக்கும்.

சரி இப்போ அந்த மேட்டருக்கு வருவோம். பெண்களின் மூத்திரம் வரும் பாதை வேறு, உறவு கொள்ளும் பாதை வேறு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?? மனச்சாட்சியை தொட்டு உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

யோனியின் மேலாக சிறு நீர் கழிக்க ஒரு பாதை இருக்கிறது. உடல் உறவுக்கு அதன் கீழே ஒரு பாதை இருக்கிறது. அதன் கீழே மலம் வரும் பாதை இருக்கிறது. இது தான் யோனியின் மூலாதார அமைப்பு. மேலும் உடல் உறவுப்பாதையைச் சுற்றிலும் தசைகள் இருக்கின்றன. அந்தத் தசைகள் யோனியை கிருமிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. மேலும் அந்த தசைகள் தான் ஆணின் குஞ்சுக்கு உராய்வு மூலம் இன்பத்தை வழங்க உதவியாய் இருக்கின்றது.

பெண்களுக்கு வீட்டு விலக்கு எப்படி ஏற்படுகிறது என்பதை சற்றே சுருக்கமாய் காணலாம். பெண்களின் உடலில் இருக்கும் சினைப் பையில் கரு முட்டைகள் உருவாக்கப்படுகின்றன. அது மெதுவாக கருப்பைக்கு அனுப்பப் படுகிறது. கருப்பைக்குள் அனுப்பி வைக்கப்படும் கரு முட்டைகளை பாதுகாக்க ஒரு ஜவ்வு உருவாக்கப்படுகிறது. அந்த ஜவ்வுதான் ஆணின் விந்து கருவைத் துளைத்து கருவாய் மாறிய பிறகு மற்ற விந்துவிலிருந்து வரும் மற்ற உயிர் அணுக்களை அண்ட விடாமல் தடுக்கிறது. அப்பன்கள் தான் எதிரியாய் இருக்கிறனென்றால், உள்ளேயும் ஆணின் விந்துக்கும் எதிரி இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பதினைந்து நாட்களுக்கு விரைப்பாய் இருக்கும் அந்த ஜவ்வு பதிமூன்று நாட்களுக்குப் பிறகு தன் சக்தியை இழந்து விடும். அப்போது அதன் ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசியும். அந்த ரத்தமும், கரைந்த சினை முட்டைகளும் தான் ரத்தப் போக்காய் பெண்ணின் உறவுக் குழாய் மூலம் வெளி வருகிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சியாய் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த நாட்களில் பெண்களின் மனம் அழற்சி அடையும். எரிச்சல், அசதி, தலைவலி, வயிற்றைப் பிசையும் வலி என பல்வேறு உடற் துன்பங்களால் பீடிக்கப்படுவார்கள்.

இயற்கையால் பெண்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட துன்பம்தான் இது. இத்தகைய தருணங்களில் ஆண்கள் அதுவும் திருமணமான ஆண்கள் பெண்டாட்டிகளுக்கு ஆதரவாய், அவள் உடம்பைப் பற்றியதொரு பிரிய விசாரிப்புகளையும், எளிதில் ஜீரணமாகும் உணவுகளை அவளுக்கு உண்ணக் கொடுத்தும் வரவேண்டும். இந்த மாதிரி சமயங்களில் பெண்களிடம் அனுசரனையாய் நடந்துகொள்ளும் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள். ஐந்து நாட்களுக்கு மனைவியைக் கவனித்துக் கொண்டால் ஆயுள் முழுக்க உங்களை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாடுவாள் மனைவி.

அந்த மேட்டரில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வைச் சொல்லி விட்டேன். அதைத் தொடர்ந்து ஆண்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்லி விட்டேன். தாம்பத்ய வாழ்க்கையின் முதல் ரகசியம் இதுதான். அதைத் தொடர்ந்து தாம்பத்ய வாழ்க்கையின் அடுத்த ரகசியம் இருக்கிறது. அது என்ன? தொடர்ந்து ப்ளாக்கை வாசித்து வாருங்கள். விரைவில் எழுதுகிறேன். குடும்பத்தலைவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான சமாச்சாரத்தை எழுதி இருக்கிறேன். வாழ்வியல் தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ முயலும் ஏதாவது ஒரு ஆணுக்காவது இப்பதிவு பயன்பட்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தரும்.

குஞ்சாமணி குலசேகரன்.

One Response to சமாச்சாரம் (18+ மட்டும்)

  1. yathirigan சொல்கிறார்:

    >>எத்தனை பேருக்குத் தெரியும்??<<

    Kaloori mudichittu 4 varudam velai paarthutu irundhapo, kaloori nanban oruvan idhai thappa purinju vachikitu thaan solradhu sarithaanu sandai vera potaan :-))) adhu niyabagam varudhu :-))

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: