ஏஞ்சலினா ஜூலி : வாழ்க்கையின் முரண்பாடுகளில் சிக்கியவர்

ஆனந்த விகடனில் தேவதையின் தனிமை என்ற கட்டுரையினைப் படித்தேன். நான் சந்தித்த பெரும்பாலான பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் இதே பிரச்சினைதான். அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக வந்து முன்னாள் நிற்பது அவர்களின் பணம் மற்றும் புகழ்.

மேற்கண்ட இரண்டும் இல்லாதவர்கள் அதைத் தேடி அலைகின்றார்கள். கிடைத்தவுடன்  விட முடியாமல் தனிமைப் படுத்தப்பட்டு துன்பப்படுகிறார்கள்.

அதற்கு சிறந்த உதாரணம் தான் தேவதையின் தனிமை என்ற கட்டுரை.

தன் கணவர் பிராட் பிட்டுடன் விவாகரத்து விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழ் நிலையில், அதன் காரணமாக சொல்லியது.

தம்பதியின் பிரிவுக்குப் பலப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், ஜோலி சொல்லும் காரணம் ஒன்றே ஒன்றுதான்… ”வி.ஐ.பி. என்ற முத்திரை விழுந்தவுடன் ஒரு மலையின் உச்சிக்கு நான் செலுத் தப்படுகிறேன். உச்சிக்குச் செல்லச் செல்ல, அங்கு மக்கள் நடமாட்டமே இல்லை. நான் தனிமைப்படுத்தப்படுகிறேன். மிக அரிதாகத் தட்டுப்படும் ஒரு சிலரில் என் மனசுக்கு நெருக்கமானவர்களிடம் என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறேன். அந்த நெருக்கத்தை நான் இழக்கும்போது, மீண்டும் அடுத்த உயரம். இன்னும் தனிமை. நான் போகிறேன் மேலே மேலே!”

தனது முதுகில் ஜன்னல் போன்ற ஒரு டாட்டூ குத்தியிருந்தார் ஜோலி. சமீபத்தில் அதை அழித்து விட்டார். காரணம் கேட்டதற்கு, ஜோலி சொன்னது என்ன தெரியுமா?

”அடிக்கடி இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்த ஜன்னலைப் பயன்படுத்தினேன். இப்போது அந்த ஜன்னலின் வழியாக உலகம்தான் என்னை அதிகமாக வேடிக்கை பார்ப்பதாகத் தோன்றியது. அதான் ஜன்னலைச் சாத்திவிட்டேன்!”

ஜூவியில் வெளியான ஒரு கட்டுரையில் அனாதையாய்க் கிடந்து செத்துப் போகும் வயதானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து,  அவர்கள் உயிருடன் இருக்கும் போது தன்னாலான உதவியைச் செய்து வரும் திரு பொன்னுசாமி  பற்றி எழுதி இருந்தார்கள்.

உலகத்தின் ஆகச் சிறந்த மனிதர் பொன்னுசாமி அவர்கள்.

கடவுள் உங்களுக்கு அமைதியான வாழ்வைத் தரட்டும் பொன்னுசாமி.

அன்புடன் : அனாதி.

படம் உதவி விகடனார் / நன்றி விகடனாருக்கு.

2 Responses to ஏஞ்சலினா ஜூலி : வாழ்க்கையின் முரண்பாடுகளில் சிக்கியவர்

  1. அனாதி சொல்கிறார்:

    உப்பு விற்கச் சென்றால் மழை பெய்கிறது. பஞ்சு விற்கச் சென்றால் காற்றடிக்கிறது என்பதாவது புரிகிறதா?

  2. ஆரம்பம் இருப்பவன் சொல்கிறார்:

    ஒண்ணுமே பிரீல சார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: