முட்படுக்கையின் மீது நான் – நடிகையின் கண்ணீர்

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இந்த நடிகைக்கு இன்னும் மவுசு குறையவே இல்லை.

என்னைச் சந்திக்க வேண்டுமென்று கேட்ட போது என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எழுதி வைக்க மாட்டீர்களே என்ற கேள்வியுடன் தான் பேசவே ஆரம்பித்தார்.

அசடாக சிரித்து வைத்தேன். உங்க நண்பர் குஞ்சாமணி குலசேகரனைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி கிலியைக் கிளப்பினார் நடிகை. அவனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து வைத்தேன்.

பிளாக்கில் எழுதுவான். அப்போது பார்க்கலாம். பயல் இப்போ நம்மை விட்டு ரொம்ப தூரத்துல இருக்கான்.

பீச்சோரம் இருக்கும் பங்களாவிற்கு மாலை நேரத்தில் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தார். வாட்சமேன் வந்து விபரம் சொல்ல, நான் பங்களாவின் உட்புறமிருக்கும் நீச்சல் குளத்தருகே நடிகையை வர வேற்க நின்று கொண்டிருந்தேன். ஏனென்றால் காரை குளத்தருகே தான் பார்க்கிங்க் செய்ய முடியும்.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின்பு, அங்கேயே இருந்த நாற்காலியில் அமர்ந்தோம்.

சூடாக சுக்கு போட்ட டீயை பரிமாறினேன். அப்போது பார்த்து வீட்டிலிருந்து போன் வர, யாரென்றார். சொன்னேன். போனை வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து நகர்ந்தார். மனைவியும், நடிகையும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தனர். என்ன பேசினார்களோ தெரியவில்லை. பேசி முடித்து திரும்பி வந்தார். வாடிப்போன முகம், சற்றே மலர்ச்சியாய் இருந்தது.

”பிசினெஸ்ஸெல்லாம் எப்படி போவுது? ” என்று ஆரம்பித்தேன்.

”ம்.. போவுது..போவுது” என்றார்.

”என்னாச்சு? ” என்றேன்.

”கோடிக்கணக்கில் பணமிருக்கு அனாதி. இருந்து என்ன பயன்?” கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

இறுகிய முகத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை நேரத்து சூரிய வெளிச்சத்தில் வெகு அழகாய், கண்கள் பளபளக்க தேவதை போல அமர்ந்திருந்தார் என் முன்னே.

பெரிய பிரச்சினை போலிருக்கு என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

”கணவரைப் பற்றி நினைச்சா தூக்கமே வர மாட்டேங்குது அனாதி. முதல் மனைவியை டிவோர்ஸ் செஞ்சா மாதிரி வேற எவளாது கிடைச்சா என்னையும் டிவோர்ஸ் செஞ்சிருவாரோன்னு பயமா இருக்கு. உள்ளுக்குள்ளே குத்துது அனாதி. நான் ஏன் இந்தத் தப்பைச் செய்தேன்னு நினைச்சு நினைச்சு தினமும் அழுதுக் கிட்டே இருக்கேன் அனாதி. அந்தப் பொண்ணு எப்படி அழுதிருக்கும்னு இப்ப தோணுது. என்ன செய்யறதுன்னு ஒன்னுமே புரியவில்லை அனாதி” என்று சொல்லி அழுதார்.

”அடிக்கடி வெளி நாட்டுக்கு வேற போயிடுறாரு. பிசினஸ், பிசினஸ்சுன்னு வாரம் பத்து நாளுக்கு வீட்டுக்கே வருவதில்லை. கோடிக் கணக்கில என் அக்கவுண்டுல பணமா கொட்டுறாரு. அவரைப் பார்த்தாலே அப்படியே மயங்கிப் போகிறேன் அனாதி. அவரு கண்ணைப் பார்த்தாலே என்ன கேட்க நினைச்சனோ அதெல்லாம் மறந்து விடுகிறது. அவரு என்னம்மான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா போதும் எனக்கு அப்படியே உருகிடுது அனாதி. ரொம்ப பயமா இருக்கு அனாதி ” என்று சொல்லி மேலும் தொடர்ந்தார்.

அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரச்சினை இதுவல்ல என்று புரிந்தது. பெரிதாய் என்னவோ இருக்கு.

நடிகையின் கணவர் பெரிய கம்பெனியின் முதலாளி. கோடிக் கணக்கில் டர்னோவர் செய்யும் கம்பெனி. அழகன் என்றால் அழகன் அப்படி ஒரு அழகன். நாற்பத்து இரண்டு வயதில் இருபது வயதுக்காரர் போல இருப்பார். எனது நெருங்கிய நண்பர்.

முதல் மனைவி சொந்த மாமா பெண். என் மீது அண்ணா அண்ணா என்று பாச மழை பொழியும் பெண். நண்பரின் மீது உயிரையே வைத்திருந்தார் அந்தப் பெண். ஏன் டைவர்ஸ் ஆனது என்று இன்றும் எனக்குப் புரியவில்லை.

நடிகையும் அந்தப் பெண்ணும் உயிருக்கு உயிரான தோழிகள்.

(தொடரும் விரைவில்)

4 Responses to முட்படுக்கையின் மீது நான் – நடிகையின் கண்ணீர்

 1. kuppan_yahoo சொல்கிறார்:

  is it story or real incudent, anaathi is male or female

  • அனாதி சொல்கிறார்:

   குப்பன், இது ஒரு சிறுகதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. ஆனால் இக்கதை பலரோடு ஒத்துப் போனால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

 2. தெகா சொல்கிறார்:

  அனாதி, என்னால ஒரு நாலு மணி நேரத்தில எவ்வளவு கட்டுரைகள் படிக்க முடியுமோ அத்தனை கட்டுரைகளை வாசிச்சிட்டு சொல்லுறேன், கேளுங்க. யாருப்பா நீங்க! செம மண்டையா இருப்பீங்க போல, படிக்க படிக்க அடுத்து அடுத்துன்னு ஓடிட்டே இருக்கு கட்டுரைகள். அனைத்தும் நிறைய விசய ஞானங்களோடு இருக்கிறது. பின்னூட்டங்களை கருத்தில் வைத்து எழுத வேண்டாம். நீங்க எழுதிட்டே இருங்க. வாழ்க! வளர்க!! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: