நூற்றாண்டு காலமாய் தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கும் ஆரியப் பட்டர்கள்!

1938ல் வெளியிடப்பட்ட தமிழர் சரித்திரம் என்னும் நூலில் ஆசிரியர் ந.சி. கந்தையாப் பிள்ளை ஆரியர் தமிழர் என்ற பகுதியில் எழுதி இருப்பதை கீழே படியுங்கள்.

சிந்து வெளிப் பள்ளத்தாக்குகளில் காணப்படும் மொகஞ்சதாரோ, அரப்பா, சன்னுதரோ முதலிய தமிழருடைய பழைய நகரங்களின் அழிவுக்கு ஏது வெள்ளப்பெருக்கே அன்றி படையெடுப்பு அன்று என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சிந்து நாகரிகத்தில் ஆரியரின் நாகரிகம் சிறிதும் காணப்படவில்லை. ஆகவே அரப்பா, மொகஞ்சதரோ முதலிய நகர்களின் அழிவுக்குப் பின்னரேயே ஆரியர் இந்தியாவை அடைந்தனர் ஆதல் வேண்டும்.

கி.மு 2000 வரையில் ஆரியர் இந்தியாவை அடைந்தனர் என்று சரித்திரக்காரர் கூறிகின்றனர். ஆரியர் இந்தியாவை அடைந்த போது இங்கு வாழ்ந்தோர் தமிழர்களே. இவர்கள் ஆரியரால் தாசுக்கள் என்று அழைக்கப்பட்டனர். தாசுக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் ஓயாத போர் நடந்ததென இருக்கு வேத பாடங்கள் கூறுகின்றன. தாசுக்கள் கரிய நிற முடையவர்களென்று சொல்லப்படுகின்றனர். தாசுக்களை அழிக்கும்படி இந்திரனை வேண்டி ஆரிய முனிவர்கள் பாடிய பாடல்கள் பல இருக்கு வேதத்தில் காணப்படுகின்றன. தாசுக்கள் ஆடு, மாடு முதலிய மிகுந்த செல்வமுடையவராய், மதில்கள் சூழ்ந்த அழகிய நகரங்களில் வாழ்ந்தார்கள்.

நெடுங்காலப் போராட்டத்திற்குப் பின் தாசுக்கள் எனப்பட்ட தமிழர் தெற்கே சென்று தங்கினர். இருக் வேதகாலம் கிமு 1200 வரையில் என்று சொல்லப்படுகின்றது.

ஆரியர்களால் இந்தியாவின் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட தமிழர்க்ள் தென்னிந்தியாவில் மட்டுமே வாழ்கின்றனர். இலங்கையிலோ தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்று கொண்டிருக்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படக் காரணமாய் இருந்தது இந்தியாவில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் அரசுதான் என்று ஏகப்பட்டவர்கள் ஆதாரங்களோடு எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சிப் பொறுப்பில் இருப்போர்களின் சாதியைக் கவனிக்கும் போது ஆரியர்கள் தமிழர்களின் மீது தொடுத்து வரும் அநீதி வரலாற்று சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

தற்போது தமிழர்களின் தலைவர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் திரு கருணாநிதி அவர்கள் காலத்தின் கட்டாயத்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தினை 2006 ஆம் ஆண்டு கொண்டு வந்தார். ஆண்டாண்டு காலமாய் கோவிலுக்குள் கொலுவிருக்கும் ஆரியப்பட்டர்களை, இனிமேல் வெளியில் விரட்டி விடலாம் என்று கனவு கண்டனர் தமிழர்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களுக்குள்  நுழைந்து நாட்டாமை செய்யும் அயோக்கியத்தனத்திற்கு பெயர் சாஸ்திரம், சம்பிரதாயம் என்பார்கள் இந்தப் பட்டர்கள்.  பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். ஆனால் மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் மேற்படி சட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டனர். தமிழக அரசு அவசர சட்டத்தினை இயற்றி அந்தப் பிரிவையே நீக்கி விட்டது. ( செய்தி உதவி புதிய ஜன நாயகம்).

தற்போதைய நிலை என்ன என்றால் அர்ச்சகர் ஆவதற்கு படித்த பல்வேறு ஜாதி மாணவர்கள் இன்னும் சான்றிதழ் கூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஆரியப்பட்டர்கள் கிமு 2000த்திலிருந்து தமிழர்கள் மீது தொடர் தாக்குதல்களைத்  தொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தமிழர்களின் மொழி, அரசியல், கலை, பண்பாடு, நிர்வாகம், ஆன்மீகம் அனைத்திலும் புகுந்து கொண்டு ஆளுமை செய்து கொண்டிருக்கின்றனர்.

மொகஞ்சதாரோ அழிவிற்குப் பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியப்பட்டர்கள் தமிழர்களின் மீது செய்து கொண்டிருக்கும் வன் செயல்கள் தமிழர்களின் சமுதாய மறுமலர்ச்சியை சீர்குலைக்கும் கொடுமையான ஒன்று. தமிழர்கள் சமுதாயத்திற்கு பட்டர்கள் மிகப் பெரும் அநீதியை செய்து கொண்டு வருகின்றனர். உலகெங்கும் வாழும்  தமிழர்களை காலம் காலமாய் அழித்துக் கொண்டு வருகின்றனர் ஆரியப்பட்டர்கள் என்று சொல்கிறது வரலாறு.

தமிழர்கள் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஆரியர்களின் அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ளப்போகின்றார்களோ தெரியவில்லை. விரைவில் தமிழர்கள் என்ற மனித இனமே ஆரியர்களால் அழிக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுவதில் வியப்பேதும் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

%d bloggers like this: