காசேதான் காமமடா தொடர் – ஒன்று

அவர் தற்போது தமிழக சினிமா உலகில் கொடி கட்டிப் பறக்கும் நாயகன். ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக படமொன்றும் இல்லை. இடையில் ஒரு இயக்குனரின் கையில் சிக்க, இன்றைக்கு செம ரகளை செய்து கொண்டிருக்கிறார்.

படம் சூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து ரொம்ப நல்ல பிள்ளையாகவும், அக்கரை கொண்டவராகவும், அங்குமிங்கும் சென்று பலருக்கும் உதவி செய்பவராகவும் காட்டிக் கொண்டிருந்தாராம். அதுவும் நடிகையின் கண்களில் தென்படும் படிக்குத்தான் உதவி செய்வாராம். நடிகையும் இவரின் உள் நோக்கத்தை அறியாமல் நல்ல பிள்ளை என்றே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். நாட்கள் செல்லச் செல்ல மெதுவாக காம ஆமை ஓட்டுக்குள் இருந்து தலை நீட்டியிருக்கிறது.

போனில் ஹோட்டலுக்கு சாப்பிட போகிறேன் என்று, நீங்க எங்கே இருக்கின்றீர்கள் என்று கொக்கியை மாட்டி இருக்கிறார். நடிகைக்கா தெரியாது இவன் கொக்கியை நீட்டுகிறான் என்று. சூட்டிங்கில் இருக்கிறேன், மீட்டிங்கில் இருக்கிறேன் என்று சமாளித்து விடுவாராம்.

நாட்கள் செல்ல செல்ல, நடிகையுடன் வலிந்து வலிந்து வந்து பேசியிருக்கிறார். நடிகையோ அனாதி இருக்கும் தெம்பில் என்னதான் செய்து விடுவான் என்று நினைத்துக் கொண்டு படு ஸ்மார்ட்டாக எஸ்கேப் ஆகி விட்டாள்.

ஒரு முறை தண்ணீருக்குள் சூட்டிங். குறைந்த அளவே உடையும் கொடுக்கப்பட்டதாம். அதை அணிந்து கொண்டு நடிகரையும், நடிகைக்யும் அலைக்குள் சென்று விளையாடுமாறு இயக்குனர் சொல்ல, உள்ளே சென்றிருக்கின்றனர். இதுதான் சமயமென்று எண்ணிக் கொண்ட நாயகன், நடிகையின் ஜட்டிக்குள் கையை விட்டு ( சென்சார்)….. ஆவ்…ஓவ் என்று கத்தியிருக்கிறார் நடிகை. கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகை தண்ணீருக்குள் வைத்து குஞ்சைப் பார்த்து ஒரு குத்து விட்டிருக்கிறார். நாயகனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டதாம். ராஸ்கல் எங்கே வந்து என்ன செய்யுறே, உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி விட்டு தண்ணீருக்குள் வெளியே வந்து விட்டாராம். இனி நீ எப்படி படத்தில் நடிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேண்டி என்று எதிர் சவால் விட்டிருக்கிறான் நடிகன்.

அந்த சூட்டிங் முடிந்து அதற்கடுத்த நாள் சூட்டிங்கில் இவளை சும்மாவே உட்கார வைத்திருக்கின்றார்கள். இயக்குனருடன் அடிக்கடி ரகசியமாய் இவள் கண்படவே நடிகன் பேசிக் கொண்டிருந்திருக்கிறான். எனக்கு எப்போ சார் சூட்டிங் என்று இயக்குனரிடம் கேட்க இதோ அதோ என்று நான்கு நாட்களாக இவளை வரவைத்து சும்மாவே உட்கார வைத்திருக்கின்றார்கள். அவனுக்கு மடங்கினால் மட்டுமே இனி அடுத்த சூட்டிங் என்று அவளுக்குப் புரியும்படி சில சம்பவங்கள் நடக்க, இவள் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறாள். சூட்டிங்க் ஸ்பாட்டில் இருந்து அனாதிக்கு அழைத்து விபரத்தைச் சொல்லி இருக்கிறாள்.

கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து நடிகன் இவளிடம் வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறான். இயக்குனர் வந்து வலிய சிரித்து உடனே சூட்டிங் ஆரம்பித்து இவளுக்கான காட்சிகளை படம் பிடித்திருக்கின்றார்கள். படு ஸ்மார்ட்டாக நடந்திருக்கிறான் நடிகன். அன்றையிலிந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரைக்கும் நடிகைக்கு ஒருவரும் சிரமமே கொடுக்கவில்லையாம். அபரிதமான மரியாதையும், கவனிப்பும் கொடுத்து, சம்பளப்பணத்தை முழுவதும் செட்டில் செய்திருக்கின்றார்கள்.

மேற்கண்ட சம்பவத்தை சொன்ன அனாதி, ஒரு பேப்பர் கட்டிங்கை தூக்கிப் போட்டான். அதில் அந்த நடிகனும் நடிகையும் திருமணம் செய்துகொள்ள விருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.

”ஏன் அனாதி, இதில் உனக்கு என்ன நஷ்டம்” என்று கேட்டேன்.

”குஞ்சு, நீ எழுதும் தொடரின் தலைப்பு என்ன? காசேதான் காமமடா இல்லையா? இது காசேதான் காதலடா” என்றான் அனாதி.

பின்குறிப்பு: அனாதி என்றைக்குமே பிறதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்பவன் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் அப்படி நடந்திருக்க கூடிய சாத்தியங்கள் இல்லவே இல்லை. பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா. பாருங்க மக்கா, இந்த பாம்பு என்னை விடுவேனா என்கிறது.

மேலும் ஒரு பின் குறிப்பு : இது ஒரு தொடர்கதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை. சம்பவங்கள் கற்பனை. கதை நாயகர்களும் கற்பனை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

%d bloggers like this: