விலைவாசியும் அறிஞர் அண்ணாவும்

புளி மிளகாய் தனியா! – இதற்கு
ஏழரை நாட்டுச் சனியா?
விலை குறைவது எப்போ? – அதை
விளக்கிச் சொன்னால் தப்போ?

மிளகாய் தனியா கூடி – வெளி
நாட்டுக்குப் போனதோ ஓடி
புளியும் மலடியாச்சோ? – காய்த்து
பழுக்க மறந்து போச்சோ?

குழம்பின் மீது ஆவல் – வைக்கக்
கூடாதென்றே மூவர்
அழும்பு எண்ணம்தானோ? – இந்த
அவல நிலையும் ஏனோ?

மக்களின் மீது வெறுப்பா? – இந்த
மூன்றுக்கும் இப்போ சிரிப்பா?
அக்கறை காட்ட வேண்டும் – விலை
அதிகப் பேயும் அடங்கும்.

சுதேச மித்திரனில் வெளி வந்த பாடல் என்று அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு பத்திரிக்கையில் தலையங்கத்தில் வெளியிட்டது மேற்கண்ட பாடல்.

கத்தரி கிலோ ரூ.36, பெரிய வெங்காயம் ரூ.40, சின்னவெங்காயம் ரூ.32, கேரட் ரூ.28, பீட்ரூட் ரூ.24, அவரை ரூ.40, பச்சை மிளகாய் ரூ.18, பட்டாணி ரூ.130 நாட்டுத்தக்காளி கிலோ ரூ.20, ஆப்பிள் தக்காளி ரூ.25 ஆக உயர்ந்துள்ளது. காய்கறி விலை ஒரே மாதத்தில் 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

காய்கறிகளின் விலை உயர்வால் மக்கள் காய்களின் பயன்பாட்டினைக் குறைக்கின்றனர். அதனால் சத்துக் குறைவு ஏற்படுகிறது. தொற்று நோய்கள், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுகின்றனர். விலைவாசியைக் கட்டுப் படுத்த வேண்டிய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது.

அறிஞர் அண்ணா அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் நடந்து வரும் உங்கள் தம்பியின் ஆட்சியில் விலைவாசி விண்ணுயரப் பறந்து கொண்டிருக்கிறது. தாங்கள் அவரின் கனவில் வந்தாவது மேற்கண்ட பாடலை நினைவு படுத்துவீர்களா?

2 Responses to விலைவாசியும் அறிஞர் அண்ணாவும்

  1. சந்தர் சொல்கிறார்:

    //உங்கள் தம்பியின் ஆட்சியில் விலைவாசி விண்ணுயரப் பறந்து கொண்டிருக்கிறது//
    உலகம் பூராவும் இந்த நிலைமைதான். ஜெ மாதிரி எதற்கெடுத்தாலும் கலைஞரை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு உருப்படியாக யோசிக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: