கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் ஆரம்பம் !

தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தைச் செயல்படுத்துவது துபாயைச் சேர்ந்த இ.டி.ஏ கம்பெனி. கம்பெனிக்கு அரசு கொடுக்கவிருக்கும் பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூபாய் 517.307 கோடி. அதாவது ஒரு அடையாள அட்டைக்கு ரூபாய் 469 பிரிமீயத்தை அரசு வழங்குகிறது. மேற்கண்ட அட்டை பெற தகுதியானவர்கள், ஆண்டு வருமானம் 24 ஆயிரத்திலிருந்து 72 ஆயிரம் ரூபாய் உள்ளவர்கள். அரசு மருத்துவ மனைகளில் கிடைக்காத தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில நோய்களுக்கான ட்ரீட்மெண்டுக்காக மேற்படி காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கிட்டத்தட்ட 51 வகை நோய்களுக்காக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சொல்லி இருக்கின்றனர். நான்கு வருடத்தில் ஒரு அட்டையாளருக்கு ஒரு லட்சரூபாய் அளவீட்டுக்குள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது அரசு ஆணை.

ஆணை மற்றும் எந்தெந்த நோய்க்கு இன்ஸூரன்ஸ் கிடைக்கிறது என்பதை கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தெரிந்து கொள்க.
இணைப்பு

திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் ஊழலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்த திட்டம் சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. திட்டத்தில் ஓட்டைகள், உடைசல்கள், ஊழல் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இன்னபிற குழிகளும் இருக்கின்றன. திட்ட வரைவு செய்யும் முன்பு திட்டத்தினை வரைவு செய்தவர்களுக்கு மேற்படி சமாச்சாரங்கள் எல்லாம் தெரியாமல் இருக்குமா? இந்த நிலையில் ஓட்டைத் திட்டத்தை உருவாக்க என்ன காரணம்? தொடர்ந்து சில சம்பவங்களையும், காரணங்களையும் காணலாம்.

சில சம்பவங்கள் :

1) தொடை எலும்பு முறிந்து போன மருத்துவக் காப்பீட்டு அட்டையாளர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவமனை அவரிடம் ரூபாய் 50,000 வசூலித்தும், காப்பீட்டுக் கழகத்திடம் ரூபாய் 17,500 வசூலித்திருக்கின்றனர். நோயாளியிடமிருந்து காசு வாங்க மருத்துவமனை சொன்ன காரணம் ”தங்குமிடம் மட்டும் தான் இலவசம்”. விசாரனை செய்து நோயாளிக்கு ரூபாய் 50,000 திரும்பக் கிடைக்க வைத்திருக்கின்றார்கள்.

2) 540 கிராமப்புற ஏழைகளுக்கு கர்ப்பப்பை அகற்றியிருக்கின்றார்கள்.இவர்களைப் பரிசோதித்ததில் சுமார் 160 பேர் அறுவைச் சிகிச்சை செய்யாமலே செய்ததாக இன்ஸூரன்ஸ் பணத்திற்காக தவறான தகவல்களைக் கொடுத்து பணம் பெற்றிருக்கின்றார்கள் என்று ஒரு பத்திரிக்கையில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே இவ்வளவு கோல்மால் நடக்கின்றன. இனிமேல் என்னென்ன கோல்மால்கள் நடக்குமோ தெரியாது.

திட்டத்திலிருக்கும் ஓட்டைகள் :

1)அறுவை சிகிச்சை செய்யாமலே செய்ததாக எல்லாவித சான்றிதழ்களையும் உருவாக்கி இன்ஸூரன்ஸ் பணம் பெற்றிருக்கின்றார்கள். (திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதத்திலேயே இந்த ஊழல் கண்டு பிடிக்கப்பட்டும் விட்டது)

2)கிராமப்புற ஏழைகளிடம் தவறான சிகிச்சை செய்தாகக் காட்டி மருத்துவமனைகள் கொள்ளை அடிக்க வாய்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் அடிக்கப்படும் கொள்ளைகளை பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு உதாரணமாய் கிட்னி திருட்டைச் சொல்லலாம்.

3)நோயாளிகளின் ஒத்துழைப்புடன் மருத்துவமனைகள் ஒன்று சேர்ந்து ஏகப்பட்ட பணத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பும் இருக்கிறது. இன்ஸூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றும் எத்தனையோ பாலிசிதாரர்களைப் பற்றி செய்திகளில் நாம் படித்திருக்கிறோம்.

மேற்படிச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்னவிதமான தடுப்பு வழிமுறைகளை அரசு கடைபிடிக்கப்படுகிறது என்பது பற்றிய விபரங்கள் இல்லை. அரசு நல்ல சட்டத்தைக் கொண்டு வருகின்றது என்றாலும் திட்டத்தில் ஊழல் செய்யக்கூடிய சாத்தியங்களோடு வெளியிடுவது தான் வருத்தமளிக்கிறது.

கோடிக்கணக்கில் தனியார் கம்பெனிக்கு பிரீமியம் என்ற பெயரில் வழங்கப்படும் பணத்தைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தலாம். அரசு மருத்துவர்களாய் பணி புரியும் மருத்துவர்களை வேறு தனியார் மருத்துவமனைகளில் பணி புரிய தடை விதிக்கலாம். ஊழலுக்கான வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும் திட்டம் நல்ல திட்டமாக இருக்க முடியாது என்றே கருத வேண்டியிருக்கிறது என்பது சோகமான விஷயம்.

2 Responses to கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் ஆரம்பம் !

 1. prabhakaran சொல்கிறார்:

  thiru karunanithi is meaning of corruption so i dont ve any surprise from this life insurance scheme..

  • அனாதி சொல்கிறார்:

   பிரபாகரன் உங்கள் கூற்றினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலில் நான் திரு கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பவன் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க. இந்த திட்டத்தின் நோக்கமே, அரசு மருத்துவமனையில் பெற இயலாத சிகிச்சைகளை ஏழைகளும் பெற வேண்டுமென்பது தான். நோக்கம் மிக நல்ல நோக்கம். வழிமுறைகள் ஊழல் செய்ய ஏதுவாக இருக்கின்றன என்பது தான் பிரச்சினை. மற்றபடி கருணாநிதி அவர்களைப் பற்றி விமர்சிப்பது எல்லாம் நமக்குத் தேவையில்லாத ஒன்று.

   காரணம் சர்வைவலில் எதுவுமே தப்பே இல்லை என்று சொல்கிறார்கள். அரசியல் என்பது காலம், நேரம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத காரணங்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: