நண்டு கொழுத்தா வளையில் தங்காது

கர் நாடக பிஜேபியின் மூலமாய் அரசியலில் நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள் வெளி வந்திருக்கின்றன. அரசியல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அக்கிரமங்களுக்கு ஒரு உதாரணம் தான் எடியூரப்பா ரெட்டி சகோதரர்கள் பிரச்சினை.

இது பற்றி பலரும் எழுதி இருப்பதால் விட்டு விடலாம்.

ரெட்டி சகோதரர்கள் ஜெயித்து விட்டார்கள் என்று பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசியலில் கோடீஸ்வரர்களின் ஆதிக்கம் பற்றிய விவாதங்களும் நடக்கின்றன. ஆனால் அனைவ்ரும் ஒன்றை மறந்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

எடியூரப்பா தோற்று விட்டார். ரெட்டி சகோதரர்களிடம் பணிந்து விட்டார் என்கிறார்கள். உண்மையில் தோற்றது ரெட்டி சகோதரர்கள் தான். வெளி உலகுக்கு தெரிய வராத உண்மைகளை தெரிய வைத்து ரெட்டிகளின் மறு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் எடியூரப்பா.

விளைவு : ரெட்டிகள் ஆந்திராவில் சந்தித்து இருக்கும் மைன்ஸ் பிரச்சினை. ஆட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டார் எடியூரப்பா. முடிக்கப் போவது யார் ? விடை விரைவில் தெரிந்து விடும்.

நண்டு கொழுத்தா வளையில் தங்காது என்பார்கள். நண்டு வெளியில் வந்து விட்டது. எவன் ஆட்டய போடுகின்றானோ தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: