எந்திரன் – ரஜினி – மார்க்கெட்டிங் டெக்னிக்

ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ரஜினி எந்திரன் படத்தோடு தன் நடிப்புக்கு டாட்டா சொல்லப்போவதாக எழுதி இருந்தார்கள். அது உண்மையாக இருந்தால் இன்செஸ்ட் செக்ஸ் கதைகளில் ஒன்று குறையும் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மேற்படி செய்திகளில் நான் கண்டது : எந்திரனுக்கான மார்க்கெட்டிங்க் டெக்னிக்.

அதீத, அசுர பதவி பலம், மீடியா பலத்தினைக் கொண்ட சன் கம்பெனியாருக்கு எந்திரனை நம்பிப் போட்டிருக்கும் பல கோடி ரூபாய் முதல் தேருமா என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதுவரை வெளியிடப்பட்ட அவர்களது படங்கள் பல மண்ணைக் கவ்வியது. நம்பி வாங்கிய பல விநியோகஸ்தர்கள் கையைச் சுட்டுக் கொண்டனர் என்பது செவி வழிச் செய்தி. டிவியிலும், தனது பத்திரிக்கைகளிலும் விடாது விளம்பரப் படுத்தினால் படம் வெற்றி அடைந்து விடும் என்ற அவர்களது நம்பிக்கைக்கு மக்கள் வேட்டு வைத்திருக்கின்றனர்.

எந்திரனில் அதுபோல ஏதும் நடந்து விட்டால் முதலாளித்துவத்தை வளர்த்து வரும் ஏழைப் பங்காளன் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் இமேஜும் காணாமல் போய் விடும்,
சமீபத்தில் முதல்வரின் பாராட்டு விழாவில் ரஜினி கலைஞரை துதிபாடிய சேவகர்களின் வாழ்த்துப்பாக்களை கடைசி வரை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். எந்திரன் படத்திற்காக செய்த அட்ஜஸ்ட்மெண்ட் என்பதை உங்களுக்கு சொல்லியா தெரியப்போகிறது. இதைத் தான் முதலாளித்துவத்துக்கு துணை போகும் ஏழைப்பங்காளன் என்று விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

போட்ட முதலுக்கே ஆபத்தும் வந்து விடும் என்ற காரணத்தால் ரஜினியின் கடைசிப் படம் என்ற சிம்பதியை உருவாக்க முனைகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சிம்பதியை உருவாக்கினால் ரஜினியின் கடைசிப் படம் என்ற ஆவலில் மக்களிடையே ஆவல் உண்டாகும், அதனால் வசூலை வாரிக் குவித்து விடலாமென்ற திட்டமும் இருக்கலாம்.

மக்கள் சிம்பதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்பது தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஏகப்பட்ட சம்பவங்கள் உதாரணாமாய் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் ஒரு சிறிய கணக்கு ஒன்றையும் இவ்விடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அதாவது சச்சின் டெண்டுல்கரை உங்களுக்கு நன்கு தெரியும். அவரைத் தெரிந்த அளவுக்கு ரஜினியை இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஐம்பது கோடி என்பது தமிழ் சினிமாவிற்கு மிக அதிக பட்ஜெட். நூறு கோடி செலவு செய்தால், போட்ட பணத்தை திரும்ப எடுக்க ஏதாவது மாய மந்திரம் நடக்க வேண்டும். இல்லையென்றால் முதல் ஒரு மாதத்திற்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் விற்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் இவ்வளவு தான் டிக்கெட் விலை இருக்க வேண்டுமென்ற அரசாங்க அறிவிப்பு எந்திரன் படத்தின் வெளியீட்டின் போது தூங்கிக் கொண்டிருக்கும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

போகப்போக எந்திரன் திரைப்படத்தைப் பற்றி வெளிவரக்கூடிய செய்திகளை மொத்தமாக தொகுத்தால் பெரிய புத்தகமே போடலாம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

இப்படிக்கு,
குஞ்சாமணி குலசேகரபாண்டியன்

6 Responses to எந்திரன் – ரஜினி – மார்க்கெட்டிங் டெக்னிக்

 1. mayavee சொல்கிறார்:

  what was the technique used in thalapathi? basha? chadramukhi?
  lave aside annamalai and sivaji…another major hits…

  in last 18yrs… 4 of rajinis films have flopped….so what was the rumour behind all those super hits..

  can you explain please??

  • அனாதி சொல்கிறார்:

   அன்பு மாயாவி, இந்தளவுக்கா சின்னப்பிள்ளை மாதிரி யோசிப்பது?

   தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, சிவாஜி மற்றும் ரஜினியின் மசாலாக் குப்பைகள் வெற்றி பெற என்ன விதமான டெக்னிக்குகள் பயன்படுத்தப்பட்டன என்பதை அந்த நாளைய செய்தித் தாள்களையும், வார, மாத இதழ்களையும் படித்துப் பாருங்கள்.

   ரஜினி என்ற நடிகனை வியாபாரம் என்ற மாயை குழி தோண்டிப் புதைத்து எத்தனையோ நாட்களாகி விட்டன. எனது பதிவின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள்.

   எனது இந்தப் பதிவு முதலாளித்துவக்கு எதிரான ஒரு கருத்து. மீடியாக்கள் மக்களின் மீது செலுத்தும் ஆளுமை பற்றிய சிறிய குறிப்பு.

   உங்களால் ரஜினிக்கு மட்டுமே ஆதாயம். உங்களுக்கு அல்ல என்பதையும், ரஜினியினால் சிறு தூசி போன்ற அளவுக்கு எந்த நன்மையும் உங்களுக்கு கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள முயலுங்கள்.

   இது சம்பந்தமாய் நிறைய எழுதலாம். ஆனால் நேரமில்லை. தொடர்ந்து அனாதி பிளாக்கைப் படித்து வாருங்கள்.

   சமூகத்தில் நிலவும் மாயைகளை ஒவ்வொன்றாய் வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவுகள் ஒவ்வொன்றாய் வெளிவரும்.

   மற்றபடி அன்பு உங்களுக்கு பின்னூட்டமிட்டதற்கு.

 2. naren சொல்கிறார்:

  Super Star Valga.

 3. தேவையில்லை சொல்கிறார்:

  குஞ்சு,

  இதுதான் கடைசிப்படம்னு ரஜினி என்றைக்கு சொல்லியிருக்கார்

  இதுதான் கடைசிப்படம்னு ரஜினி சொல்றதா பத்திரிக்கைங்க சொல்றது இதுதான் முதல் தடவையா

  இதுதான் கடைசி, சீக்கிரம் ஓடியாங்கன்னு சொல்லித்தான் மக்களை வரவழைக்கணுமா.. அப்ப்படியோ கொஞ்சம் மத்தபக்கம் திரும்பிப் பாருங்க… கடைசியா அப்படியே கண்ணாடியை பார்த்துகிடுங்க

  • அனாதி சொல்கிறார்:

   பாலமுருகன், வந்துட்டீங்களா ரஜினிக்கு கொடி பிடிக்க… வாங்க வாங்க. முதலில் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. பாலமுருகன் என்ற பெயரில் பால என்ற வார்த்தைக்கு குழந்தை என்ற அர்த்தம் வேறு வருகிறது. ஆகையால் உங்களை குழந்தை என்று எண்ணிக் கொண்டு விட்டு விடலாம். நீங்கள் தாண்டிப் போக வேண்டியது இன்னும் ரொம்ப தூரம் இருக்கிறது பாலமுருகன்.

   தற்போது உங்களுக்கு புரிகிற மாதிரி ஒரு செய்தி.

   கிசு கிசு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கிசுகிசுதான் சினிமாவின் மிக உச்சமான மார்க்கெட்டிங் டெக்னிக் என்பது தெரியுமா ?
   கிசுகிசுவை அந்தக் கிசுகிசுவில் சம்பந்தப்பட்டவர்களே காசைக் கொடுத்து உருவாக்குவார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா?

   இதற்கு மேல் சொல்ல் என்ன இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: