ஹைதராபாத் – கோழி குழம்பு (அசைவம்)

tamanna_2
கோழி ஒன்று ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்தது. அதை எப்படியெல்லாம் குழம்பு வைப்பது என்று சமையற்காரர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கோழியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அதன் வாய் பெருசு என்பதுதான். மேலும் நல்ல கலரில் அடக்கமான உடம்போடு பார்க்கவே படு அசத்தலாய் குழம்பு வைக்கவே தயாரானது போல இருந்தது.

சமையற்காரர்களின் வாயில் எச்சில் ஊறியது. உடனடி மீட்டிங்கில் அக்கோழியை குழம்பு வைக்க விரும்புவர்கள் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி விற்பனையாளர்களுக்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டது. ஹைதராபாத் கோழியினை மட்டும் கடைக்கு அனுப்புமாறு குறிப்புகளும், சிபாரிசுகளும் அனுப்பப்பட்டன. கோழிக்கு திடீரென்று அதிக தேவை ஏற்பட்டதால் விலை ஏற்றப்பட்டது. விலை ஏறினால் என்ன, வாங்கத்தான் தமிழன் இருக்கின்றானே ? ஆகையால் விலையேற்றம் ஒன்றும் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணாது என்று பேசிக் கொண்டார்கள்.

இந்தக் கோழியின் இன்னொருமொரு விஷேசம் இக்கோழிப்பண்ணையின் அதிபர் ஹைதராபாத்தில் தங்க வியாபாரம் செய்கின்றவர். இவருக்கு எதுக்கு கோழிப் பிசினஸ் என்கிறீர்களா அது இவரோடு ஆசையல்ல. மகளின் ஆசை. மகளுக்கு கொத்து பரோட்டா என்றால் கொள்ளை பிரியமாம்.

ஏற்கனவே புதிய புதிய கோழிகளை குழம்பு வைத்து அனுபவப்பட்ட சமையற்காரர்களுக்கு இந்தக் கோழியின் வருகை மிக்க சந்தோஷத்தைத் தந்தது. அந்த சமையற்காரக்கூட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் அடக்கம். அவர்களுக்குள் இடது சப்பை எனக்கு வலது சப்பை எனக்கு என்ற ஒரு உடன்பாடு கூட ஏற்பட்டு விட்டது. இதைப் பற்றி மீடியாக்களில் பரபரப்பாய் பேசிக் கொண்டனர்.

கோழி மார்க்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. தற்போதைய விலையில் ரூபாய் 120 கிலோ என்று போர்டும் வைக்கப்பட்டு விட்டது. மழையின் காரணமாய் கோழி தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறது. குளிரில் நடுக்கம் வர வேண்டுமல்லவா? ஆனால் இந்த ஹைதராபாத் கோழிக்கோ இதுவரைக்கும் நடுக்கம் வரவில்லையாம்.

நல்ல சேல்ஸ் – சமையற்காரர்களுக்கு கொண்டாட்டம் – விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம். விலையேறினால் என்ன வாங்கும் வாடிக்கையாளருக்கும் புதுக் கோழியின் குழம்பு ருசியும் கொண்டாட்டமாய் இருக்கின்றதாம்.

இது ஒரு சிறுகதை. கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை. புது முயற்சியாய் எழுதப்பட்ட சிறுகதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: