வள்ளல் தமிழர்கள் – கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் அதிசயம் !

தமிழர்களின் வரலாற்றில் அவர்களின் வள்ளல் தன்மை பற்றிய பல கதைகள் கிடக்கின்றன. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்தவர் என்றெல்லாம் பல காட்சிகளை விவரிக்கின்றன வரலாறு. தமிழர்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் என்பதற்கு உதாரணம் இது.

வள்ளல் தன்மை கொண்ட தமிழர்களின் தயவால் கோடி ரூபாய் காரில் வலம் வரும் தமிழர் தான் இவர். திரைப்படம் என்றால் என்ன என்று தெரியாமலே நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே கையையும், காலையும் விசுக் விசுக் என்று ஆட்டினால் கூட தன் படத்தை பார்க்க வந்து விடுவார்கள் என்ற இவரின் நம்பிக்கையை கொஞ்சம் கூட குலைத்து விடாமல் அள்ளி அள்ளிக் கொடுத்த தமிழர்களின் வள்ளல் தன்மை கண்டு நெஞ்சு புளகாங்கிதம் அடைகிறது.

p6a

p6

சிம்பு வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ காரின் விலை ஒரு கோடி ரூபாய். இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது? தமிழர்களின் வள்ளல் தன்மைதான் காரணம் என்கிறேன் நான். இதைப் போன்றதொரு காரை நடிகர் விஜயும் வாங்கப் போகிறாராம். இன்னும் சினிமாவில் தலை, கால், முடி காட்டிய குஞ்சு, குலுவான்களெல்லாம் பத்துக் கோடிகளில் கார்கள் வாங்க தமிழர்கள் தங்களின் உழைப்பில் வரும் காசை கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். படம் வெளியான அன்றே பார்த்து விமர்சனம் எழுதும் சக பதிவர்கள் போன்ற வள்ளல்கள் இருக்கையில் மேற்படி மக்கள் கோடி ரூபாய் என்ன, மில்லியன் டாலர்களில் கப்பலே வாங்கி விடுவார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயில் நடிகர் பிரசாந்த் சென்னையில் ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ் கட்டி இருக்கிறார் என்பது உபரித்தகவல்.

வாழ்க தமிழர்கள். வளர்க வள்ளல் தன்மை…

தமிழர்களை கர்ணனனோடு ஒப்புகையில், கர்ணன் கெட்டான் போங்கள்…

புகைப்பட உதவி : விகடன்.

12 Responses to வள்ளல் தமிழர்கள் – கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் அதிசயம் !

 1. padmahari சொல்கிறார்:

  வணக்கம் அனாதி. தமிழ் சினிமா மற்றும் அதை ஆராதிக்கும் தமிழ் ரசிகர்கள் பற்றிய உங்களின் கருத்துக்கள் யாவும் உண்மைதான்.என்னுடைய மலையாள நண்பன் ஒருவன் அடிக்கடி என்னுடன் சண்டையிடுவதுண்டு, நாம் (தமிழர்கள்) ஏன் நடிகைகளுக்கு கோவில்கள் கட்டிக்கொண்டும், நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்துகொண்டும் இன்னும் காலம் கழித்துக்கொண்டு இருக்கிறோம் என்று! ஏன் என்பதை என்னாலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை??!! ஏனென்றால் பாமரனும் செய்கிறான், படித்தவனும் அதைத்தான் செய்கிறான்?! சினிமாவப் பார்த்தோமா அதுக்கப்புறம் அவனவன் பொழப்பப் பார்த்தோமான்னு ஏன் தமிழன் இருக்க மாட்டேங்கிறான்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!
  பதிவு அருமை,
  நன்றி.

  • அனாதி சொல்கிறார்:

   பத்மஹரி தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. கல்வி அறிவு மட்டுமே பிரச்சினை. இது சம்பந்தமாக விரைவில் கட்டுரை ஒன்றும் வரவிருக்கிறது.

 2. ^^^^ சொல்கிறார்:

  Hello anaathi,
  eppudi sir, rajini thaaan kudi, cigarettei muthalithuvamaakinaara? appo athuvarai tamilan kudichathe ille ille government saraaya kaaiya thorakkave ille. Romba puthisaaliyaatam peasaandhagappu.
  Ippo naatila kathalnra perla nadukkara aththani kamakkaliyaathukkm kamalai karanm kaatuveenga pola.
  Hello cigarette rajini mattum ille sivaji puthiyaparavaila pudicha style paath andha maadhiri pogai vuda pudicheennnu sonnavungalai paathurukkom.
  appudi paaththa rajiniyudaiya niraya nalla vishayangalai paaththu apvar fan-aanenenu solradhu ungalukku theriyaatha. Aaaga ohonna podhume orrle ullavungalai ellam kurai solradhu. Naam a ennanga kilichom athai paarunga.

  • அனாதி சொல்கிறார்:

   அன்பு தோழா, உங்களின் பதில் ஸ்பேமில் இருந்தது. இன்று தான் படித்தேன். சிவாஜி என்பவர் தற்போதைய ஐகான் இல்லை. ஆகையால் ரஜினியை எடுத்துக் கொண்டேன். சரி ரஜினி என்ன நல்லது செய்தார் என்பதை சற்றே விளக்கமாய் பதிவிடுகின்றீர்களா? ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதைக்கு உதாரணம் ரஜினி. ரஜினியைப் பற்றிய இன்னொரு பதிவு இன்னும் சிறிது நேரத்தில் எழுதப் போகிறேன். படித்துப் பாருங்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நடிகர்களுக்கு வக்காலத்து வாங்கப் போகின்றீர்கள். கமல் கலாச்சாரத்தை சீரழிவிற்கு உட்படுத்தியவர். இவரின் தங்கை சுகாசினி நடிகையாக நடித்தவர் தானே. ஏன் கமலோடு ஜோடி போடவில்லை. அப்படி ஜோடி போட்டு கிஸ் அடிக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை? மற்ற பெண்கள் எல்லாம் இவருக்கு அல்வா மாதிரி. தன் படம் ஓட வேண்டுமென்பதற்காக எல்லா விதமான செய்கைகளையும் செய்யக்கூடியவர்கள் தான் நடிகர்கள். இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.

 3. barari சொல்கிறார்:

  engo pukaivathu therkirathe//mudiyulla seemaatti alli mudikiraal.

  • அனாதி சொல்கிறார்:

   புகையெல்லாம் ஒன்றுமில்லை பராரி. சமூக பிரக்‌ஞை உடையவர்களை வயித்தெரிச்சல் கொண்டுள்ளார்கள் என்று சொல்வது சிலருக்கு வாடிக்கை. அதைத்தான் தாங்களும் பிரதிபலிக்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

   ஐந்து ரூபாய், பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் மட்டுமே சினிமா டிக்கெட் வசூலிக்க வேண்டுமென்று அரசாங்கம் உத்தரவு போட்டால் கோடிக்கணக்கில் பணம் வாங்கும் நடிகர்கள் லட்சக்கணக்கில் தான் பணம் வாங்க முடியும். அதைச் செய்கிறதா அரசு?

   கருப்புப் பணம் புழங்கும் இடம் சினிமா உலகம். லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் வந்தால் 35 பெர்சண்டேஜ் வருமான வரியாய் கட்ட வேண்டும். ஆனால் எந்த சினிமாக்காரன் ஒழுங்காய் வரிக் கட்டுகிறான்? எவன் ஒழுங்காய் வருமானத்தை காட்டுகிறான். வருமான வரித்துறையினரின் ரெய்டுகள் நடக்க வேண்டிய இடமே சினிமா உலகம் தான். ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது?

   தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருளுக்கு முதலாளிகள் தான் விலை நிர்ணயம் செய்கின்றார்கள்.

   ஆனால் விவசாயின் நிலை என்ன? நெல்லுக்கு விலை நிர்ணாயம் செய்கிறது அரசு. கரும்புக்கு விலை நிர்ணயம் செய்கிறது அரசு. ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்றாவது யோசித்தாவது பார்த்திருக்கின்றீர்களா?

   இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் வயிற்றெரிச்சல் என்கின்றீர்கள்.

   இருக்கட்டுமே. எனக்கு வயித்தெரிச்சல்தான். ஒன்ட குடிசைகூட இல்லாமல் பிளாட்பாரத்தில் தங்கி இருக்கும் ஏழையைப் பார்க்கும் போது வயிற்றெரிச்ச்சல் வருகிறது. அதுவும் சக மனிதன் துன்பப்படுகின்றானே என்ற வயிற்றெரிச்சல் தான். அது நான் சாகும் வரை வந்து கொண்டேதான் இருக்கும். உங்களுக்கு அவர்களைப் பார்க்கும் போது குளு குளுவென்று இருந்தால் இன்னொரு மனிதனின் மகிழ்ச்சிக்கு அவர்கள் காரணமாய் இருக்கின்றார்களே என்றும் மகிழ்ச்சியே அடைகிறேன்.

 4. anbuaran சொல்கிறார்:

  ஆடம்பர கார்கள் குறித்த விஷயத்தில் ரஜினியின் எளிமை வியக்கதகுந்தது.இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

  • அனாதி சொல்கிறார்:

   ரஜினி உழைப்பால் உயர்ந்தவர். அவரை அவமானப்படுத்திய எத்தனையோ நடிகைகளை தன் வளர்ச்சியால் அவர்களை அவமானப்படுத்தியவர். வெற்றி பெற்ற நடிகர் என்ற வகையில் அவர் பாராட்டுக்கு உரியவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

   ஆனால் கார் விஷயத்தில் ரஜினி எளிமையானவர் என்று சொல்வதெல்லாம் சும்மா. நீங்கள் எனது பதிலுரையின் அர்த்ததைப் புரிந்து கொள்ள முயலுங்கள். கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் ஒருவர் கதர் ஆடை உடுத்துவது ஒன்றும் எளிமை இல்லை. நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.

   ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். இன்றைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று ஊடகங்கள் ஆதாரமாய் ஆயிரத்தெட்டு ஆவணங்களை வெளியிடுகின்றன. அந்த ஊழலுக்கு காரணமாய் ஒரு அமைச்சரையும் சுட்டுகின்றன. அந்த அமைச்சர் மக்களிடம் என்ன சொல்லி வாக்கு சேகரித்தார்? அவரின் உடை என்னவாய் இருக்கிறது? என்று சற்றே அவதானியுங்கள். இவரை எளிமையானவர் என்று சொல்லமுடியுமா? மேலும் ஒன்று.

   அமேதி தொகுதியில் குடிசைகளில் தங்கும் ஒருவரின் இரண்டு நாள் போக்குவரத்துச் செலவு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். இவர் எளிமையானவரா ?

   அமைச்சர் ஒருவர் தான் தங்குமிடத்திற்கு நாளொன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் அரசுப் பணத்தில் இருந்து கொடுத்திருக்கிறார். இவரும் எளிமையானவரா?

   எளிமை என்பது பயன்படுத்தும் காரிலோ, உடையிலோ இல்லை. மனத்தில் இருக்கிறது.

   ரஜினியைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்தால் அது ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கான விஷயம். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் குடி, புகை கலாச்சாரத்தை தன் பிம்பத்தால் முதலாளித்துவத்துக்கு சாதகமாக்கியவர் ரஜினி என்பதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து சொல்ல இடமிருக்கிறதா? இதைப் போன்ற அவர் மீதான சர்ச்சைகள் பலவுண்டு. அது நமக்கு தற்போது தேவையில்லை.

   ரஜினி தன் உழைப்பால் உயர்ந்தவர் என்பது மட்டும் தான் இப்போதைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

 5. tamizh saravanan சொல்கிறார்:

  என்னைக்கு நம்ப ம(ா)க்கள் கூட்டம் நம்மை சுரண்டிப்பிழைக்கின்ற அரசியல் வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் கொடிபிடிப்பதையும் பாலாபிஷேகம் பண்ணுவதை நிறுத்துவார்களோ அன்றுதான் தமிழினம் உருப்படும்.. அதுவரைக்கும் எவன் வேண்டுமானலும் ரோல்ஷ் ராய்ஷ் கார் கூட வாங்கலாம்.. ஆனால் நாங்கள் சோத்துக்கு வழியில்லாம்ல் எலிக்றியும், கஞ்சி கூண்டானையும் தின்று கழிந்து அடுத்தவனை வாழவைப்போம்…

  தினம் நூறுரூபாய்கு நால் முழுக்க வயல்காட்டில் கலையெடுக்கும் என் மக்கள் நிறையஉண்டு… என்று திருந்துவோமோ நாம்??????????

  • அனாதி சொல்கிறார்:

   சரவணன் தங்களின் ஆதங்கம் புரிகிறது. தகுதியும், திறமையும் கொண்டுள்ளோர் சாதிப்பதை ஏற்றுக் கொள்ளலாம். திரு ரஜினியையும், திரு அஜித்தையும் ஏற்றுக் கொள்ளலாம்.

   ஆனால் சிம்பு, விஜய், ஜெயம் ரவி மற்றும் இன்னபிற குலுவான்கள் எந்த வித திறமையும் இன்றி இன்றைக்கும் நடிப்பவர்கள்.

   அதை ஏற்ற தமிழக சினிமா ரசிகர்களின் போக்குதான் வெகு வேடிக்கையானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: