செல்லம்மாளின் புருஷனுக்கு கொக்கி

நவம்பர் 28, 2009

ஒரு காட்சி :

செல்லம்மாள் படு கோபத்துடன் வந்து தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணுக்கு படாரென்று ஒரு அறை விடுவாள்.

”ஏண்டி என் வாழ்க்கையிலேயே பங்கு கேட்கிறாயா? உனக்கு கல்யாண ஆசை வந்துட்டா கல்யாணம் பன்னிக்கோ, இல்லேன்னா வெங்காயம் பூண்டு சாப்பிடாதே. எதுக்குடி என் புருஷனுக்கு வலை வீசுறே. சேலையில் மடிப்புக் கலையாமல் கொசுவம் வைத்துக் கட்டுவது மனசு கலையாமல் இருக்கனும்தான்டி, அது ஏண்டி கல்யாணமான ஆம்பளங்களா பார்த்து அலையுறீங்க” என்று கொதிப்பார்.

மேற்கண்ட வசனம் செல்லம் சீரியலில் செல்லம்மாளாக நடிக்கும் நடிகை ராதிகா பேசியது.

பாவம் செல்லம்மா. உண்மையில் சீரியலில் செல்லம்மாவாக நடிக்கும் ராதிகாவின் பாத்திரம் சந்திக்கும் சோதனைகள் சொல்லி மாளாது. சீரியலைப் பார்க்கும் போது செல்லமாளின் மீது இரக்கம் கொட்டுகிறது. செல்லம்மாளின் புருஷனை இன்னொருத்தி கவுக்க நினைத்து அது தோல்வியில் முடிந்து விடுகிறது. அதை அறிந்த செல்லம்மாளுக்கு கோபம் கொப்பளித்து அந்தப் பெண்ணை பேச்சாலே கிழித்து விடுகிறார். அடி வேறு கிடைக்கிறது. பாவமில்லையா செல்லம்மாள்? தன் புருஷனை மற்றொருத்திக்கு எப்படி விட்டுக் கொடுப்பாள்.

இப்போ மேட்டரு :

செல்லம் சீரியலின் வசனகர்த்தாவிற்கு ராதிகா மேல் என்ன கோபமோ தெரியவில்லை. இப்படி பட்டவர்த்தனமாக வசனத்தை எழுதி, ராதிகா மேல் குடும்பஸ்திரீகளின் கோபத்தை கிளப்பி விட்டு விட்டார். தயாரிப்பாளரையே கிண்டலடித்த வசனகர்த்தா, இயக்குனர் இவர்களின் தைரியத்திற்கு ஒரு ஷொட்டு.

இப்போதெல்லாம் தப்பு செய்தவன் தான் தர்மத்தைப் போதிக்கின்றான். ராமாயணத்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறான்கள் திருட்டுப் பயல்கள். வால்மீகி திருடனாக இருந்து பின்னர் திருந்தி ராமாயணத்தை எழுதினாராம். என்ன கன்றாவியோ தெரியவில்லை.


காசேதான் காமமடா தொடர்

நவம்பர் 27, 2009

காசேதான் காமமடா தொடரை எழுதப்போவது குஞ்சாமணி குலசேகர பாண்டியன். அனாதியின் மூலம் எனக்கு கிடைத்த சில தகவல்களை இந்தத் தொடரில் பயன்படுத்த இருக்கிறேன்.

ஒரு வாசகர் என் பெயர் அடல்ஸ் ஒன்லியாக இருப்பதாக பின்னூட்டம் எழுதி இருந்தார். என்ன செய்வது என் அப்பன்காரன் அப்படிப் பேர் வைத்து தொலைத்து விட்டான். பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்று யோசித்த போது, ஏகப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டன. கீழே தொடருங்கள் ( ஹீ.ஹீ.. வந்து விடுகிறது, என்ன செய்ய)

ஏறு !
போடு் !
கடி!
கசக்கு!
வேகமா அடி!

மேற்கண்ட வார்த்தைகளை தனியே படிக்கும் போது உங்களுக்கு அந்த சமாச்சாரம் தானே நினைவுக்கு வருகிறது. மனிதனிடம் இருக்கும் பிரச்சினையே இதுதான். அந்த வாசனை மனிதனோடு பின்னிப் பினைந்தவை(கட்டிலிலும் கூட).

மேலே இருக்கும் வார்த்தைகளோடு சில வார்த்தைகளைச் சேர்த்தால் வரக்கூடிய அர்த்தமே வேறாகிவிடுகிறது.

உதாரணமாய், ஏணியில ஏறு ! சீக்கிரமா உப்பைப் போடு் ! எலும்பைக் கடி! வேப்பிலையைக் கசக்கு! சுத்தியலால் ஆணி மீது வேகமா அடி!

வார்த்தைகளைத் தனியாகப் படிக்கும் போது நமக்கு ஏன் இந்த அர்த்தங்கள் நினைவுக்கு வரவில்லை என்று யோசித்தால், மனித மனத்தினுள் மறைந்து கிடக்கும் காம உணர்ச்சிதான் அவனையும் அவன் வாழ்வையும் ஆள்கிறது என்ற விஷயம் புரிபடும். காமத்திற்கு வைக்கப்பட்ட அழகான பெயர்தான் காதல்.

ஆகவே, வார்த்தைகளில் ஒன்றுமில்லை என்ற காரணத்தால், பெயர் மாற்றாமல் குஞ்சு என்ற பெயரிலேயே தொடர்ந்து எழுதப் போகிறேன்.

இப்போ மேட்டர் :

காதல் என்ற வார்த்தை தான் மனித வாழ்வின் ஆதார அச்சு. காதல் இல்லையென்றால் இந்துக்கள் எல்லோரும் காசிக்குச் சென்று செத்த பிணத்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற மதத்தினர் பற்றி விமர்சனம் செய்ய விருப்பமே இல்லை. ஏனென்றால் கொஞ்சம் கூட சகிப்புத் தன்மை இல்லாத தன்மை கொண்டவை மற்ற மதங்கள். அந்தப் பிரச்சினையை தற்போது விட்டு விடலாம்.

இந்தக் காதல் இருக்கிறதே, அது சும்மா இருக்காது. ஊர்ப்பக்கங்களில் பழமொழி சொல்வார்கள் – சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதைத் தான் இந்த காதல் செய்கிறது.

வயது வந்த பிள்ளைகளிடம் காதல் புகுந்தால் அது காமத்தை முன் வைத்து மட்டுமே வரும். நமக்கு இந்த விடலைக் காதல் தேவையில்லை. ஏனென்றால் இவர்களின் ஜன நேந்திரியங்கள் சரியாக கூட வேலை செய்யாது. வேலை செய்யாத பிரச்சினையைப் பற்றிப் பேசி என்ன ஆகப்போகின்றது.

வயதுக்கு வந்த சில ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் காதலைப் பற்றித்தான் தொடர் வரப்போகின்றது. இப்படிப்பட்டவர்களிடம் காதல் எப்படி வருகிறது என்ற வெகு சுவாரசியமான காதல் கதைகளைப் படிக்க விருக்கின்றோம்.

சமீபத்தில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி, ஏதோ ஒரு நடிகையுடன் கேரளாவில் சொகுசு பங்களாவில் தங்கினான் என்ற செய்தியைப் படித்தேன். வயதான கிழவன் – இளங்குமாரி, உலகெங்கும் நடக்கும் இந்தக் காதல்கள் தான் சில சமயம் பல புரட்சிகளுக்கு காரணமாய் இருந்து விடுகின்றன. புரட்சியைப் பற்றி நமக்கு என்ன கவலை? நமக்கு தேவை புரட்டல்கள். அந்தப் புரட்டல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

என்றும் போல தொடர்ந்து ஆதரவளித்தால் தொடர் சும்மா பின்னி பெடலெடுக்கும்.

உங்களிடம் ஒரு கேள்வி : மேல் லோகம் இன்பமானதா ? இல்லை கீழ்லோகம் இன்பமானதா? அனுபவப்பட்டவர்கள் மட்டுமே பதில் சொல்லலாம். விடலைப் பசங்களுக்கு அனுமதியில்லை.

கீழே இருக்கும் படத்தை சும்மானாச்சும் பார்த்து வையுங்கள். எதுக்காவது உபயோகப்படும்.

(சினேகாவெல்லாம் இந்த இடுப்புக்கு முன்னால் கொசு – குஞ்சு குப்புற அடித்து விழுந்த குஞ்சு இன்னும் இடுப்பு மயக்கத்திலிருந்து எழாமல் கவுந்தே கிடக்கிறான்)

(இடுப்பு மட்டும் முன்னாலே வந்து ஆடுது பாருங்க – குஞ்சு இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சிலிர்த்துக் கொள்கிறான்)

(அந்த அம்மணி பக்கத்தில் இல்லெயென்றால் இந்த ஹீரோவை எவனாவது மதிப்பானா? – குஞ்சுவின் வயித்தெரிச்சல்)

(இதுக்குப் பேரு வேலை…. குஞ்சுக்கு பற்றி எரியுது)


சிநேகாவால் குஞ்சுவிற்கு ஏற்பட்ட வேதனை

நவம்பர் 24, 2009

‘ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க’ என்று கேட்ட அனாதியைப் பார்த்த குஞ்சு ‘அடப்போங்க அனாதி, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு’ என்றார்.

‘ஏன் என்னாச்சு, வீட்டுல ஏதும் பிரச்சினையா?’

‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அனாதி. சினேகாவாலதான் பிரச்சினை’

‘சினேகாவாலா, ஓ.. அப்படி போகுதா சங்கதி!’

‘அட நீங்க வேற, இந்த படங்களைப் பாருங்க அப்பத்தான் உங்களுக்குப் புரியும்’

அனாதி குஞ்சுவின் செல்போனிலிருந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

நீங்களும் ஒரு பார்வை பார்த்துடுங்களேன்..

‘குஞ்சு, ஒன்னும் புரியலியே. சினேகா படமா இருக்கு’

‘நல்லா உத்துப் பாருங்க.. அப்பத்தான் அந்த மேட்டரு உங்களுக்குத் தெரியும்’

அனாதி மீண்டும் படங்களைப் உங்களைப் போலவே பார்த்தான். ஆனாலும் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

‘குஞ்சு, நீங்களே சொல்லுங்க’ என்றான்.

குஞ்சு மேலும் கீழும் பார்த்தான். பெருமூச்சு விட்டான்.

‘சினேகாவின் இடுப்பு சின்னாதாயிடுச்சுப்பா’ என்றான்.

அனாதிக்கு ஏற்பட்ட கொலை வெறியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

‘ஏன்யா, அவனவன் என்னென்னவோ செஞ்சுக்கிட்டு இருக்கிறானுவ. லட்சம் கோடிய கொள்ளை அடிச்சிட்டாங்கன்னு அறிக்கை மேலே அறிக்கையா விட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதைப் பற்றி மூச்சே காட்டாம இருக்காங்க எதிர் கோஷ்டீங்க. கேரளாக்காரனுவ அடிக்கிற கூத்தை எப்படி தடுக்கிறதுன்னு தெரியாம குழம்பிப் போய் கிடக்கறாங்க. நாட்டுல இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது, உனக்கு சினேகா இடுப்பு சின்னதா ஆனது பிரச்சினையா இருக்கா’ என்று வெடித்தான் அனாதி

கொஞ்சம் கூட அலட்டிக்காமல், ‘இதப் பாருங்க அனாதி, அதைப் பத்தியெல்லாம் கவலைப் பட பலபேரு இருக்காங்க. சினேகா இடுப்பைப் பத்திக் கவலைப்பட குஞ்சு மட்டும் தான் இருக்கான்னு புரிஞ்சுக்கங்க’ என்றான்.

வெறுப்பில் இருந்த அனாதியைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் குஞ்சு பாத்ரூமிற்கு ஒன்னுக்கு விடச் சென்றான்.

டீப்பாயில் கிடந்த குஞ்சுவின் செல்போனைப் பார்த்தான் அனாதி. அவனையறியாமலே அவன் கை அந்த செல்போனை நோக்கி நீண்டது.

நீங்களும் மவுசை ஸ்க்ரோல் செய்யுங்கள்.

குறிப்பு : கிக்கு ஏற கீழே இருக்கும் படத்தைப் பார்த்து வையுங்கள். நடிகையின் பெயர் சினேகா உல்லால். ஆமா உல்லால்னா என்னான்னு தெரியலியே.. யாருக்காவது தெரியுமா?


கரும்பு விவசாயிகளின் மீது கருப்புச் சட்டம் பாயுமா ?

நவம்பர் 23, 2009

மத்திய அரசு அத்தியாவசியப் பொருள் அவசரச் சட்டத்திலும், கரும்பு கட்டுப்பாட்டுத் திட்டத்திலும் திருத்தம் செய்து 2009-10-ம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு 9.5 சத சர்க்கரை கட்டுமானம் உள்ள கரும்புக்கு ரூ.1928.40 விலையாக அறிவித்துள்ளது.

கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும் விலையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டாம். மேலும், பரிந்துரை செய்தால் மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து அந்தத் தொகையை வழங்க வேண்டும்.

அரைவை செய்வதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை ஊக்கத் தொகையாக 5ஏ விலையாக வழங்கி வந்ததை இனி வழங்க வேண்டாம் என அந்த அவசரச் சட்டத்தில் வலியுறுத்தியுள்ளது. (செய்தி உதவி 24துனியா.காம்)

மேலும் இச்சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் போடமுடியாது என்கிறது புதிய மசோதா.

அந்த சட்டத்திருத்தினை இந்த இணைப்பில் படித்து பார்க்கவும். http://fcamin.nic.in/sugar/spf0001.pdf

மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் திரு சரத்பவாருக்கு 27 கரும்பு ஆலைகள் இருக்கின்றன என்று ஜெயா டிவி நேர்காணலில் விவசாயி சொன்னார்.சர்க்கரை ஆலைகள் தனது லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கும் கொடுத்து வந்திருக்கின்றன என்றும் இந்த அவசர சட்டத்தின் மூலம் இனிமேல் லாபத்தில் பங்கும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் அந்த விவசாயி பேட்டியில் சொன்னார்.விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லியே ஸ்தம்பித்து விட்டது என்றும் அவசர சட்டத்தினை முற்றிலுமாக வாபஸ் பெற வேண்டுமென்றும் சொன்னார்.

மேற்கண்ட சட்டம் முதலாளித்துவ சார்புடையதாக இருப்பதாகவே கருத வேண்டிருக்கிறது. மத்திய அரசு அந்த அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இருப்பதாகவும் அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் சொல்கின்றன.

கரும்பு விவசாயிகளுக்கு எதிரான சட்டமாகவே மேற்கண்ட சட்டத்தைக் காண வேண்டிய சூழ் நிலைகள் தென்படுகின்றன. ஏனென்றால் விவசாய அமைச்சருக்கு 27 கரும்பு ஆலைகள் இருக்கின்றன என்ற விஷயம் வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசுதான் இப்படி என்றால், மாநில அரசான தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்திருக்கும் வேலையை கீழே படியுங்கள்.

தமிழகத்தில் விவசாய உற்பத்தியைப் பெருக்க தமிழக அரசால் சிலர் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய விவசாய தொழில் நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த லிஸ்ட்டையும், அதன் தொடர்பாக பசுமை விகடனில் வெளியான சிறு பேட்டியின் துணுக்கையும் படித்து பாருங்கள். மத்திய அரசும், மாநில அரசும் விவசாயத்தைப் பெருக்க விவசாயியை எப்படியெல்லாம் ஊக்குவிக்கின்றார்கள் என்பது புரியவரும்.

”இஸ்ரேல் சென்று வந்திருக்கும் விவசாயிகளின் பட்டியலில் இருக்கும் செல்லமுத்து தவிர, மற்ற அனைவருமே தி.மு.கவைச் சேர்ந்தவர்கள். அவரும்கூட தி.மு.க. ஆதரவு நிலையில் இருப்பவர்தான். இவர்கள் அனைவருமே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், முழுக்க முழுக்க தி.மு.க&வைச் சேர்ந்த விவசாயிகளை மட்டுமே அழைத்துச் செல்வது என்பது என்ன நியாயம். பயணத்துக்கான பணத்தைக் கொடுத்தது தமிழக அரசா… இல்லை தி.மு.க. அறக்கட்டளையா?” என்று கொதித்தார் டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ‘ஆறுபாதி’ கல்யாணம்.

இதுபற்றி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கந்தசாமியிடம் கேட்டபோது, ”மேலிடத்துல இருந்து லிஸ்ட் வந்தது போட்டோம். அவ்வளவுதான்” என்று ஒதுங்கிக் கொண்டார். ( நன்றி : பசுமை விகடன் )

நடந்தது எல்லாம் போகட்டும். இனிமேலாவது அரசாங்கம் விழிப்புணர்ச்சி பெற்று விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவும் சவுதி அரேபியா போன்று ஆகிவிடாமலிருக்க விவசாயமும் விவசாயிகளும் அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும். இயற்கைச் சீற்றங்களினால் அரிசி உற்பத்தி வெகுவாக குறைந்திருக்கும் இக்கால கட்டத்தில் அரசு பசுமைப் புரட்சிக்கான ஏற்பாடுகளை செய்து உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறக்கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விடுத்து விவசாயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் ஆபத்து அனைவருக்கும்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாகும்.


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் ஆரம்பம் !

நவம்பர் 21, 2009

தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தைச் செயல்படுத்துவது துபாயைச் சேர்ந்த இ.டி.ஏ கம்பெனி. கம்பெனிக்கு அரசு கொடுக்கவிருக்கும் பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூபாய் 517.307 கோடி. அதாவது ஒரு அடையாள அட்டைக்கு ரூபாய் 469 பிரிமீயத்தை அரசு வழங்குகிறது. மேற்கண்ட அட்டை பெற தகுதியானவர்கள், ஆண்டு வருமானம் 24 ஆயிரத்திலிருந்து 72 ஆயிரம் ரூபாய் உள்ளவர்கள். அரசு மருத்துவ மனைகளில் கிடைக்காத தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில நோய்களுக்கான ட்ரீட்மெண்டுக்காக மேற்படி காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கிட்டத்தட்ட 51 வகை நோய்களுக்காக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சொல்லி இருக்கின்றனர். நான்கு வருடத்தில் ஒரு அட்டையாளருக்கு ஒரு லட்சரூபாய் அளவீட்டுக்குள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது அரசு ஆணை.

ஆணை மற்றும் எந்தெந்த நோய்க்கு இன்ஸூரன்ஸ் கிடைக்கிறது என்பதை கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தெரிந்து கொள்க.
இணைப்பு

திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் ஊழலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்த திட்டம் சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. திட்டத்தில் ஓட்டைகள், உடைசல்கள், ஊழல் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இன்னபிற குழிகளும் இருக்கின்றன. திட்ட வரைவு செய்யும் முன்பு திட்டத்தினை வரைவு செய்தவர்களுக்கு மேற்படி சமாச்சாரங்கள் எல்லாம் தெரியாமல் இருக்குமா? இந்த நிலையில் ஓட்டைத் திட்டத்தை உருவாக்க என்ன காரணம்? தொடர்ந்து சில சம்பவங்களையும், காரணங்களையும் காணலாம்.

சில சம்பவங்கள் :

1) தொடை எலும்பு முறிந்து போன மருத்துவக் காப்பீட்டு அட்டையாளர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவமனை அவரிடம் ரூபாய் 50,000 வசூலித்தும், காப்பீட்டுக் கழகத்திடம் ரூபாய் 17,500 வசூலித்திருக்கின்றனர். நோயாளியிடமிருந்து காசு வாங்க மருத்துவமனை சொன்ன காரணம் ”தங்குமிடம் மட்டும் தான் இலவசம்”. விசாரனை செய்து நோயாளிக்கு ரூபாய் 50,000 திரும்பக் கிடைக்க வைத்திருக்கின்றார்கள்.

2) 540 கிராமப்புற ஏழைகளுக்கு கர்ப்பப்பை அகற்றியிருக்கின்றார்கள்.இவர்களைப் பரிசோதித்ததில் சுமார் 160 பேர் அறுவைச் சிகிச்சை செய்யாமலே செய்ததாக இன்ஸூரன்ஸ் பணத்திற்காக தவறான தகவல்களைக் கொடுத்து பணம் பெற்றிருக்கின்றார்கள் என்று ஒரு பத்திரிக்கையில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே இவ்வளவு கோல்மால் நடக்கின்றன. இனிமேல் என்னென்ன கோல்மால்கள் நடக்குமோ தெரியாது.

திட்டத்திலிருக்கும் ஓட்டைகள் :

1)அறுவை சிகிச்சை செய்யாமலே செய்ததாக எல்லாவித சான்றிதழ்களையும் உருவாக்கி இன்ஸூரன்ஸ் பணம் பெற்றிருக்கின்றார்கள். (திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதத்திலேயே இந்த ஊழல் கண்டு பிடிக்கப்பட்டும் விட்டது)

2)கிராமப்புற ஏழைகளிடம் தவறான சிகிச்சை செய்தாகக் காட்டி மருத்துவமனைகள் கொள்ளை அடிக்க வாய்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் அடிக்கப்படும் கொள்ளைகளை பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு உதாரணமாய் கிட்னி திருட்டைச் சொல்லலாம்.

3)நோயாளிகளின் ஒத்துழைப்புடன் மருத்துவமனைகள் ஒன்று சேர்ந்து ஏகப்பட்ட பணத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பும் இருக்கிறது. இன்ஸூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றும் எத்தனையோ பாலிசிதாரர்களைப் பற்றி செய்திகளில் நாம் படித்திருக்கிறோம்.

மேற்படிச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்னவிதமான தடுப்பு வழிமுறைகளை அரசு கடைபிடிக்கப்படுகிறது என்பது பற்றிய விபரங்கள் இல்லை. அரசு நல்ல சட்டத்தைக் கொண்டு வருகின்றது என்றாலும் திட்டத்தில் ஊழல் செய்யக்கூடிய சாத்தியங்களோடு வெளியிடுவது தான் வருத்தமளிக்கிறது.

கோடிக்கணக்கில் தனியார் கம்பெனிக்கு பிரீமியம் என்ற பெயரில் வழங்கப்படும் பணத்தைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தலாம். அரசு மருத்துவர்களாய் பணி புரியும் மருத்துவர்களை வேறு தனியார் மருத்துவமனைகளில் பணி புரிய தடை விதிக்கலாம். ஊழலுக்கான வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும் திட்டம் நல்ல திட்டமாக இருக்க முடியாது என்றே கருத வேண்டியிருக்கிறது என்பது சோகமான விஷயம்.


காத்தடிக்குது காத்தடிக்குது !(18+)

நவம்பர் 18, 2009

ஒரு பாம்பும் பல பெண்களும் (18+)

நவம்பர் 18, 2009

பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுகிறது. அதைப் பார்த்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.


%d bloggers like this: