ஹார்ட்கோர் குடும்பக் கதைகள் – 1

எனக்கு தெரிஞ்ச கிராமம் ஒன்னு இருக்கும். அங்கே இரண்டு ஏக்கர் சொத்து, பத்தாம் வகுப்பு படிப்பு, சொந்தமாய் ஓடு வேய்ந்த வீடு இருந்தால் இரண்டு லட்ச ரூபாய் பணம், பைக்கு, பாத்திரம், இருபது முப்பது பவுன் நகை வரதட்சினையோடு பொண்ணு குடுப்பானுவ பொண்ணைப் பெத்த ஏமாந்த சோனகிரிங்க. கல்யாணத்தை அந்த மாப்பிளையின் பங்காளிக ஏற்பாடு பன்னுவானுக. சிரிக்கச் சிரிக்கப் பொண்ணு வீட்டுல பேசி இருக்கற சொத்தை மொத்தமா கொள்ளை அடிச்சுட்டு வந்துறுவானுங்க. இதுல இவங்களுக்கு என்ன லாபம்ன்னா, சோறும் கறிக்கொழம்பும் கிடைக்கும். அவ்வளவுதான். ஆறுமாதம் வயக்காட்டுல வேலை பாப்பானுவ. அடுத்த ஆறுமாசம் எவ தாலிய அறுக்கலாம்னு கூட்டம் போட்டுப் பேசி காரியத்தை முடிச்சிருவானுவ.

ஊர்ப் பெரிய மனுசனுவ பேசுற பேச்சுக்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்றேன் கேட்டுக்கங்க. எவளாவது ஏப்ப சாப்ப பொம்பளை வந்தா அவளை குஜாலா பேசியே மடக்க நினைப்பானுவ. ”வாம்மா, வா வா என்னா இந்தப் பக்கமா காத்தடிக்குது. உக்காரு உக்காருன்னுவாய்ங்க. மெதுவா உக்காரு. வெடிச்சுக் கிடிச்சுறப்போவுதுன்னு” பேச்சுலே லைட்டா கொக்கிய மாட்டுவானுவ. அவனுக எதை வெடிச்சுறப்போவுதுன்னு சொல்றாங்கன்னு உங்களுக்குப் புரியுதா ???? சரி அதவுடுங்க… ஹி..ஹி….

இரண்டு மாசம் பைக்கில் மாமனார் வீடு, கோயில், குளமென்று புருஷனும் பொண்டாட்டியும் கூத்தடிப்பாங்க. சாங்காலம் ஆறு மணிக்கே வீட்டுக்குள் ஒதுங்கிடும். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். முடிஞ்சது கல்யாண ஜோர்.

அந்தக் கருங்காலிப்பய என்ன பன்னுவான் தெரியுமா ? பொண்டாட்டிக்கிட்டே இருந்து வாங்கிய வரதட்சினையை வட்டிக்கு விடுவான். வசூல்ங்கிற பேருல கண்ட நேரத்துக்குப் போயி, கண்ட நேரத்துக்கு வருவான். பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் லேசா ஒரு மனக்கசப்பு ஆரம்பிக்கும். மருமக மேல மாமியார்காரி மெதுவா குத்தம் சொல்ல ஆரம்பிப்பா. வட்டி வசூல் பண்ணப் போனவனுக்கு அங்கே எவளாவது ஒருத்தி வட்டிக் கொடுக்க முடியாம திணறுவா. அவகிட்டே தினமும் வட்டி வசூல் செய்வாரு இந்த மாப்பிள்ளே. வட்டியும் கழியும் இவம்பொண்டாட்டி கொண்டுக்கிட்டு வந்த பணமும் போகும்.

மேற்கண்ட சம்பவங்கள் அந்த ஊரில் மிகவும் பிரபலம். அப்படித்தான் ஒரு கருங்காலி நாயி கல்யாணம் பண்ணுச்சு. இவன் அப்பன் இருக்கானே ஊருக்கே அடங்காத பய. கடைசிக் காலத்துல கையும் காலும் இழுத்துக்கிட்டு பீயை படுக்கையிலே பேண்டுகிட்டு செத்தான். வயக்காட்டுல பக்கத்து வயலு வரப்பை சன்னமா செதுக்கிடுவான். வரப்புகு அடியில மம்பெட்டிய கொடுத்து வரப்பையே பேத்து கொஞ்சம் கொஞ்சமா வரப்பையே நகர்த்தி வச்சுருவான். உழுவப் போனான்னா சண்டையும் சச்சரவுமாக் கிடக்கும். அப்படி ஒரு கொடுமைக்கார கொலகாரன். அவனுக்கு பெறந்தவன் மட்டும் என்ன புத்தராவ இருப்பான். அவனும் அப்படித்தான்.

கல்யாணம் கட்டி வட்டித் தொழிலுக்கு போன பய பக்கத்து ஊருல ஒரு வேற்று ஜாதிக்காரப் பொண்ணை வளச்சுப்புட்டான். பொண்டாட்டியைக் கட்டி வச்சுட்டு காசு சம்பாதிக்க வெளினாடு போயிட்டான் அந்த பொண்ணு புருஷன். இவன் வலையில விழுந்தவ கஷ்டப்பட்டு உழச்சுப் புருஷன் அனுப்பிய காசு நகையெல்லாம் இவனுகிட்டே கொடுத்துப்புட்டாள். இந்தக் கருங்காலியும் கொடுக்கிறதைக் கொடுத்துட்டு வசமா வசூலைப் போட்டுட்டான். அந்தப் பொண்ணு புருஷன் வெளி நாட்டுல இருந்து வந்து பாத்தா மொத்தமும் காலி. பய சும்மா இருப்பானா ? போடி ஙொப்பன் வீட்டுக்குன்னு விரட்டி விட்டுட்டான்.

ஊரு முழுக்க தெரிஞ்சு, ஊரே சிரியா சிரிச்சு அந்த பொண்ணு மானமும் போச்சு, வாழ்க்கையும் போச்சு. பஞ்சாயத்துல பேசி அந்தப் பொண்ணுக்கிட்டே வாங்கினதையெல்லாம் கொடுக்கனும்னு அந்தக் கருங்காலிப்பயகிட்டே எழுதி வாங்கிக்கிட்டு விட்டுட்டானுவ.

காலிப்பய பொண்டாட்டி சும்மா இருப்பாளா ? என்ன ஏதுன்னு அவன் இவனுக்கிட்டே கேட்க இவன் என்னா பன்னுன்னானா, பொண்டாட்டிய ரத்து வெட்டி விடுன்னு பஞ்சாயத்துல சொல்லி ஒரே ரகளை. இவம்பொண்டாட்டியோட அப்பங்காரன் பாக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிச் சொல்லி அழுவுறான். அந்தக் கருங்காலி நாயி ரூமு எடுத்துக்குட்டு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு திரியுது…

இது தான் அந்தக் கிராமத்துல வசிக்கிற ஒரு இளந்தாரியோட வாழ்க்கை. இது இப்படி இருக்க நாளைக்கோ இல்லை இன்னொரு நாளைக்கோ பொம்பளை கருங்காலியப் பத்திச் சொல்றேன் என்னா ?

மேற்படி கதையும், அந்தக் கருங்காலியும் இப்பவும் அந்தக் கிராமத்துலதான் இருக்காங்க. இது ஒரு உண்மைக் கதை.
கதையும் கருத்தும் – குஞ்சாமணி

One Response to ஹார்ட்கோர் குடும்பக் கதைகள் – 1

  1. kuttysamy சொல்கிறார்:

    அசந்துவிட்டேன் …… உங்கள் எழுத்தின் வாசனை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: