இது தான் சரியான நேரம் !

உச்ச நீதிமன்றம் கேரளா அரசை நோக்கி வீசிய கேள்விக்கணைகளையும், மேலும் அதே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கையில் வைத்துக் கொண்டும் தமிழக அரசுப் பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் சூழல் தற்போது கனிந்து இருக்கிறது.

தமிழக அரசு காலம் கடத்தாமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை செயல்படுத்தி விட்டால் தான் கேரள அரசின் முழுப் பூசணிக்காய் பிரச்சாரத்தை பொய்யாக்கலாம். முல்லைப் பெரியார் அணை பலமாகத்தான் இருக்கிறது என்று உலகோருக்கு காட்டக்கூடிய அருமையான சூழல் தற்போது நிலவுகிறது. தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் ஹேமாவதி அணை கட்டப்பட்டபோது வாளாமல் இருந்ததால் இன்று தமிழர்கள் காவிரியை காண தவம் கிடக்கிறார்கள்.

இவ்விடத்தில் ஒரு இடைச்செருகல்.

கர்நாடக முதலமைச்சர் 1971ல், ‘ஹேமாவதி அணை கட்டப்போகிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்ன போது, ‘ஹேமாவதியைக் கட்டுவதற்கு என்னை ஏன் கேட்கிறாய் ?’ என்று இன்றைய முதல்வர் கேட்டதன் விளைவு, கர்நாடக முதல்வர் ஒன்றுக்கு இரண்டாக ஹேமாவதியையும் கட்டினார். கபினியையும் கட்டினார். காவிரியில் நீர் வரத்து சுருங்கியது

அணையைக் கட்டிய பிறகு என்ன செய்ய முடியும் ? கட்டியது தவறு என்று கருணானிதி வழக்கு தொடர்ந்தார். அதே வேகத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால், சீதையைச் சிறை மீட்டது போல காவிரியையும் சிறை மீட்டிருக்கலாம். ஆனால் அந்த வழக்கையும் டெல்லி சக்கரவர்த்தினி இந்திரா சொல்லி விட்டார் என்று திரும்ப பெற்று விட்டார். டெல்லிக்கு பாத பூஜை செய்வது கருணா நிதிக்கு முக்கியமாக இருந்ததற்கு காரணம், நினைத்தவுடன் அதி நவீன காலப் பெண்கள் சர்வ சாதாரணமாய் கருவைக் கலைப்பது போல, பழைய காலங்களில் மா நில ஆட்சியைக் கலைத்து விடுவது, டெல்லியின் இயல்பாக இருந்தது. சிற்றரசர்களுக்கு அச்சம் இருப்பது நியாயம் தானே ? …..

– துக்ளக் இதழில் ஐயகோ தமிழ் நாடே என்ற தலைப்பில் திரு பழ கருப்பையாவின் கருத்து மேற்கண்டது.

காவிரியைப் போன்று முல்லைப் பெரியாரும் ஆகிவிடாமல் தடுக்க, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தி தமிழக மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். செய்யுமா தமிழக அரசு ?

2 Responses to இது தான் சரியான நேரம் !

  1. raja natarajan சொல்கிறார்:

    பதிவு தொகுப்பு அரசியல்,இசை,கவர்ச்சி,சினிமா இன்னும் பல சொன்னாலும் பொதுப் பிரச்சினைகள் மட்டுமே உங்களுக்கு மகுடம் சூட்டுகிறது.

  2. velji சொல்கிறார்:

    மாநாடு..,அதை சிறப்பாக நடத்தியதற்காய் பாராட்டு விழக்கள்..என்று தமிழக அரசு பிஸி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: