தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு ஒரு எதிர்வினை

கட்டுரையைத் தொடரும் முன்பு பதிவர் என்வழியின் வீடியோ தொகுப்பினை முழுவதும் பார்த்து விட்டு படிக்க வேண்டுகிறேன். நன்றி என்வழி பிளாக்.

வீடியோவைப் பார்க்கவும் கேட்கவும் இவ்விடத்தில் கிளிக் செய்யவும்

குறிப்பு : இந்தக் கட்டுரை வெகு ஹாட்டாக இருக்கிறது. இதை ஒரு சிறுகதை என்று எடுத்துக் கொள்ளவும். கொந்தளித்துப் பேசிய உதவி இயக்குனர் ஒருவரின் கருத்தை அப்படியே மேலே பதிவு செய்கிறேன். மேற்படி கருத்துகள் அனைத்தும் உண்மையா அல்லது பொய்யா என்பது எனக்குத் தெரியாது. மேலும் இக்கட்டுரை யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், பதிலுரை மூலம் தெரிவித்தால் உடனடியாக நீக்கி விடுகிறேன்.

வணக்கம் ஹீரோக்களே !

ஒரு நாளிதழின் செய்திக்கு எதிரான உங்களின் கோபாவேச பேச்சையும் கேட்டேன். வெகு நன்றாய் இருந்தது. நடிகைகளின் கண்ணீரைத் துடைக்கும் முயற்சிக்காக, உங்கள் பேச்சு நடிகைகளுக்கு மிக்க சந்தோஷம் தரும். அதனால் உங்களுக்குப் பயனும் கிடைக்கும். ஆனால் உங்களின் பேச்சைக் கேட்ட எங்களுக்குத்தான் கோபம் வந்தது. ஏன் என்று சொல்கிறேன்.

namitha-sathyaraj

பத்திரிக்கைக்காரர்களை ஈனப்பயல்கள் என்று சொன்னீர்கள். நடிகைகள் உட்காரும் நாற்காலியின் அடியில் புகைப்படமெடுக்காதீர்கள் என்றெல்லாம் கருத்துகளை அவிழ்த்தீர்கள். ஆம் அவிழ்த்தீர்கள். உங்களுக்கு வேலையே நடிகைகளின் டிரஸ்களை அவிழ்ப்பது தானே? செய்வது எல்லாம் நீங்கள். ஆனால் குற்றம் சொல்வது பேப்பர்காரனை. இது என்ன அய்யா நியாயம் ?

பிள்ளைக்கறி விற்பனைக்கு எனக் கூவுவது நீங்கள். பிள்ளைக்கறியை விற்கிறார்கள் என்று படம் போட்டு காட்டுகிறது நாளிதழ்கள். எப்படி இருக்குமென்று டேஸ்ட் பார்க்கலாமென்று உங்கள் ரசிகர்கள் (பாவம்) வாங்குகிறார்கள். உங்களுக்கு தேவையான பணம் பணப்பெட்டிக்குள் குவிந்து விடுகிறது.

veedokkade0063
நடிகைகளின் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றச் செய்வதே உங்களைப் போன்ற ஹீரோக்கள் தானே. உங்களின் படங்களில் குத்துப் பாட்டு, காம ரசம் சொட்டும் வார்த்தைகள் இல்லாமல் உங்களால் படமெடுக்க முடியுமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தைப் பார்க்கவா ரசிகன் தியேட்டருக்கு வருகிறான்? இல்லவே இல்லை. அவனுக்குத் தேவை தொடை, முலை, கிளிவேஜ், சூடான முத்தம், குலுக்கல், மினுக்கல், கற்பழிப்புக் காட்சிகள். இவையெல்லாம் ரசிகனுக்கு கிளர்ச்சியை உண்டு பன்னும். அதற்காகத்தான் தியேட்டருக்கு வருகிறான். ரசிகனின் உள்ளார்ந்த ஆர்வத்தை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டுதானே குத்தாட்டம், கிளர்ச்சியூட்டம் அசைவுகள், வசனங்களைப் படத்தில் வைக்கின்றீர்கள்? இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா? பெண்களை விற்பனை செய்வது நீங்கள். பெண்கள் செய்யும் விபச்சாரத்தைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். அது இரு வேளை சோற்றுக்கு என்று கூட சொல்லலாம். ஆனால் நீங்கள் செய்யும் வேலைக்கு என்ன பெயர்?

ஒரு ஹீரோ அண்ணன் முன்னாலேயே தங்கையை கிஸ் பண்ணுகிற படத்தில் நடித்தவர். உம்மா, உம்மம்மா என்று பதினெட்டு வயதுக் குமரியுடன் குத்தாட்டம் போட்ட ஹீரோ இன்ஸெஸ்ட் செக்ஸ் படத்தை அல்லவா தமிழர்களுக்கு தந்தார். அது என்ன இன்ஸெஸ்ட் படமென்கிறீர்களா? வயதான கிழவர்கள் இளம் பெண்களைப் புணருவது. வயதான அப்பாக்கள் தன் இளம் மகள்களைப் புணருவது என்று அர்த்தம். செக்ஸ் படங்களில் அது இன்ன படம் தான் என்று ஆரம்பத்தில் சொல்லி விடுவார்கள். ஆனால் நீங்கள் கமர்சியல் என்ற பெயரில் இன்ஸெஸ்ட், பப்ளிசிட்டி, பப்ளிக், டார்ச்சர் மற்றும் ரேப் போன்ற காட்சிகளையெல்லாம் அல்லவா காட்டுகிறீர்கள். போதாத குறைக்கு செக்ஸ் உரையாடல் வேறு.

ஹீரோக்களின் கூடவே வந்து ஹீரோ ஹீரோயினை ரூட்டுப்போட உதவி செய்யும் சில துணை நடிகர்கள் படத்தில் என்ன ஆன்மீக வேலையினையா செய்கிறார்கள். ஒருத்தனுக்கு ஒருத்தியை செட்டப் செய்ய உதவுபவரை சமூகத்தில் மாமாப்பயல் என்றல்லவா அழைக்கின்றார்கள். நடிப்புதானே என்ற பட்சத்தில் உங்கள் அம்மாவையோ, அக்காவையோ நடிக்க வைத்து ஹீரோக்கள் லவ்வடிக்க உதவலாமே? அதையேன் நீங்கள் செய்யவில்லை?

tamil-movie-banner

ஷகீலா என்றாலே செக்ஸ்படம் நினைவுக்கு வந்து விடும். ஆனால் உங்களின் படங்கள் அதை விட ஹார்ட்கோராக அல்லவா இருக்கிறது. வெளி நாட்டில் ரகசிய சில செக்ஸ் நடவடிக்கைகள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அதற்குப் பெயர் ஸ்னஃப் மூவி என்பார்கள். அதாவது அந்த செக்ஸ் படத்தில் நடிக்கும் நடிகையை உண்மையிலேயே செக்ஸுவல் டார்ச்சர் செய்து, கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்வார்கள். அதை விடவும் மோசமான படத்தை அல்லவா தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எடுக்கிறார்கள்.

பத்து வருடத்திற்கு முன்பு நடித்த நடிகைகள் இன்று ஹீரோயினாகவா நடிக்கின்றீர்கள்? அப்படி நீங்கள் நடிக்கத்தான் விட்டு விடுவீர்களா? இல்லையே. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடிக்க வந்த ஹீரோக்களுக்கு இன்றைக்கு இளம் வாளிப்பான நடிகைகள் அல்லவா கூட நடிக்கத் தேவைப்படுகிறார்கள். நடிகையின் உடம்பை வைத்து அவர்களின் வயதை வைத்து பிசினஸ் செய்பவர்கள் நீங்கள். பத்திரிக்கைக்காரன் அல்ல. அவன் நீங்கள் நடிக்கும் படத்தில் வரும் காட்சிகளை படம் போட்டுக் காட்டுகிறான். பத்திரிக்கை இல்லையென்றால் நீங்கள் எல்லாம் குப்பைக் கூடைக்குச் சமானம். இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா ? கிசு கிசுவில் தான் உங்களைப் பற்றிய பிம்பங்கள் மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. அதற்கு பெரும் உதவியாய் இருப்பவை பத்திரிக்கைகள். மைக் கிடைத்து விட்டது என்பதற்காக குதிப்பது எல்லாம் படத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

பெண்களை தன் படங்களில் வியாபார உத்திக்காய், ரசிகனை கவர்ந்திழுக்க கவர்ச்சியாய் காட்டுவீர்கள், கற்பழிப்பீர்கள், குத்தாட்டம் போட வைப்பீர்கள் இன்னும் என்னென்ன விதங்களில் நடிகைகளின் அங்கங்களைக் காட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் காட்டுவீர்கள். பொது மேடையில் பேசும்போது பெண்களுக்கு ஆதரவாய் பேசுவீர்கள். கேட்பதற்கு நாங்கள் என்ன கேனயர்களா ?

உங்களில் பலபேர் தனது அப்பாவாலோ அல்லது அம்மாவாலோ திரைக்கு வந்திருக்கின்றீர்கள். திறமைகள் ஏதுமின்றி இன்றி திரையுலகில் மகா கேவலமாய் வந்தவர்கள் நீங்கள். எத்தனையோ இளம் உள்ளங்களின் கனவுகளை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக் கொண்டு அந்த உள்ளங்களை மண்ணுக்குள் புதைத்தவர்கள் நீங்கள். எத்தனையோ கதா நாயகிகளின் சதையினால் முன்னுக்கு வந்தவர்களில் உங்களில் பல பேர் இருக்கின்றீர்கள். ஆகையால் திரைத் துறையில் பெண்களை அவமானப்படுத்துவதும், அவர்களை கருவேப்பிலை போன்று பயன்படுத்தி தூக்கி எறிவதும், அழகுப் பெண்களை சிண்டிகேட் வைத்துக் கொண்டு கசக்கி எறிந்தும் வருகிறீர்கள்.

நடிகைகளை வைத்துக் கோடிக்கணக்கில் பிசினஸ் செய்வது நீங்கள். அதன் அத்தனை பிரதிபலனையும் காசு போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளரை விட, உங்களுக்காக கதை எழுதி இயக்கிய இயக்குனர்களை விட, நீங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை அனுபவிக்கின்றீர்கள். உங்களின் படம் தோல்வியுற்றால் பலிகடா இயக்குனர். உங்களுக்கு வேறு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கிடைத்து விடுவார்கள்.

மழையில் நனைந்த ஆட்டுக்கு ஓநாய் இருக்க இடம் கொடுத்த கதைதான் உங்கள் கதை. ஆடு என்பது நடிகைகள் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? ஆட்டு சதையை மனிதர்கள் தின்கிறார்கள். நடிகையின் சதையை நீங்கள் தின்கிறீர்கள். தேவையின்றி மற்றவர்களை குற்றம் சொல்லாதீர்கள். போதும் உங்களின் நடிப்பு. இனிமேலும் ஏமாற நாங்கள் என்ன கோமாளிகளா?

மேற்படி வேலைகளை செய்யும் உங்களை எப்படி அழைப்பது ? உங்களின் தொழில் எப்படிப்பட்டது என்பதை நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள்.

நன்றி : உதவி இயக்குனர்.

10 Responses to தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு ஒரு எதிர்வினை

 1. Anandh சொல்கிறார்:

  they take the films (even most glamorous) with permission of those women. but if you are right why do not you do the same.

  • அனாதி சொல்கிறார்:

   ஆனந்த்… சினிமாவில் நடிக்கும் பெண்களைப் பற்றிய சில கூர்ந்த அவதானிப்புகளைச் செய்து வருகிறேன். எனக்கு சினிமா நடிகைகளின் நட்பு வட்டம் அதிகம். அவர்களின் சிலரின் பொதுப்படையான குணமும், சிலரின் பழக்க வழக்கங்களும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன. தொடர்ந்து சில நடிகைகளோடு எனது நட்பின் விபரங்களை எழுதவிருக்கிறேன். அப்போது படித்து நீங்களும் ஏதேனும் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

 2. M ABDUL KHADER சொல்கிறார்:

  Dear Sir,
  Muthalil neengal anathayum illai Kudikaranum illai. Enenral Kudikaran evvalavu thelivaga ezhutha mattan,nangalellam ungalodu irukkum pothu neengal eppadi anathai.
  Appuram seithikku varuvom.. Intha parathesikkum pannadaikkum porantha nadikangalai patri yen neengal varuthi kolgreergal. Inraikku nam avangalai yesivittu nalaikku yean avangal naditha padangalai parkkirom. Thappu yar peril sir. Seivathellam nam seithu vittu avangalai valarthu vittu naam yean ippa feel pannanum. Inraikku oru medai kidaithal oru mathiriyum nalaikku ennoru medaiyil veroru mathiriyum pesum pachonthigal.
  Ungal pathivugal anaithaiyum padithu varugiren. good & nice. thodarungal
  Deepavai vazhukkal.
  M.ABDUL KHADER, DAMMAM, SAUDI ARABIA

 3. M ABDUL KHADER சொல்கிறார்:

  Dear Sir,
  Muthalil neengal anathayum illai Kudikaranum illai. Enenral Kudikaran evvalavu thelivaga ezhutha mattan,nangalellam ungalodu irukkum pothu neengal eppadi anathai.
  Appuram seithikku varuvom.. Intha parathesikkum pannadaikkum porantha nadikangalai patri yen neengal varuthi kolgreergal. Inraikku nam avangalai yesivittu nalaikku yean avangal naditha padangalai parkkirom. Thappu yar peril sir. Seivathellam nam seithu vittu avangalai valarthu vittu naam yean ippa feel pannanum. Inrakku oru medai kidaithal oru mathiriyum nalaikku ennoru medaiyil veroru mathiriyum pesum pachonthigal.
  Ungal pathivugal anaithaiyum padithu varugiren. good & nice. thodarungal
  Deepavai vazhukkal.
  M.ABDUL KHADER, DAMMAM, SAUDI ARABIA

  • அனாதி சொல்கிறார்:

   அன்பு அப்துல்,
   தங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி. அனாதி என்றால் என்றும் இருப்பவன். ஆரம்பம் இல்லாதவன் என்ற அர்த்தம் வரும். அனாதை என்பது வேறு. அனாதி என்பது வேறு என்றே நம்புகிறேன். அப்படியே அனாதையாக இருக்கும் பட்சத்தில் உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கும் போது எனக்கு அந்த மாதிரி உணர்வெல்லாம் தோன்றுவதில்லை. செத்த பிறகு சுடுகாட்டுக்கு தனியாய்த்தான் செல்லபோகிறேன் என்ற உண்மை என் நெஞ்சில் எப்போதும் இருக்கும்.

   சவுதி அரேபியாவிலிருக்கின்றீர்கள். தாங்கள் நிச்சயம் தமிழ் நாட்டிலிருந்து அங்கு சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களைப் போன்றவர்களால் தான் அன்பு நிலைத்திருக்கின்றது. குடும்பத்தாருக்காக தன் சந்தோஷத்தைத் தியாகம் செய்வது என்பது ஒன்றும் லேசான காரியம் இல்லை. அன்பே சிவமென்பார்கள். அதுவே தாங்களும்.

 4. இரவுப் பறவை சொல்கிறார்:

  Wish you a happy diwali anathi

 5. Muthu சொல்கிறார்:

  Too good blog…Nalla kelvigal aana ithellam avanga (actors) enga yethuka poranga?

 6. zakir சொல்கிறார்:

  udunga sir ithellam sahajam,wish you happy diwali mr.anathi.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: