மனைவி சினிமாவில் கணவனோ கண்ணீரில் !

நண்பர் அபிஷேக் பெரிய பிசினஸ் மேன். சென்னையில் கடற்கரையோரம் மிகப் பெரிய பங்களாவாசி. பங்களாவின் மதிப்பு மட்டும் பல கோடிகள் இருக்கும். மனைவிக்கு கடைக்குச் சென்று வர ஹோண்டா சிட்டி. ஒரே ஒரு பெண் குழந்தை, கொடைக்கானலில் படிக்கிறது. அபிஷேக் தான் ஒரு முற்போக்குவாதி என்று பிறரிடம் காட்டிக் கொள்வதில் ஆர்வமுடையவர். முற்போக்குச் சிந்தனைகள் தான் மனித வாழ்க்கைக்கு வசந்தத்தைத் தருமென்று சொல்லுவார். பேச மட்டும் செய்யாமல் தன் வீட்டிலேயும் அதன்படி நடக்க ஆரம்பித்தார். நான் பலதடவை அவரிடம் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் அவர் என் பேச்சைக் கண்டுகொள்வதே இல்லை.

பேச்சுக்கு வேண்டுமானால் முற்போக்குவாதம் ஒத்து வரும். குடும்ப வாழ்வில் இருப்போருக்கு அதுவும் குழப்பமான கலாச்சாரச் சூழல் இருக்கும் தமிழகத்தில் ஒத்து வராது என்பதுதான் உண்மை. முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்கள் வீட்டில் பிற்போக்குவாதிகளாய் இருப்பார்கள். வயிற்றுப் பிழைப்புக்கும், மற்றவர் கவனத்தை தன்மீது ஈர்க்கவும் தான் மேற்படி வாதங்கள் ஒத்துவரும். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நாத்திகம் பேசிய கட்சிகளின் இன்றைய முகம் ஆத்திகம். கடவுள் மறுப்புக் கொள்கை மற்றும் இதரக் கொள்கைகளை அக்கட்சிகள் மறந்து விட்டதா என்று யோசித்தால் இல்லையென்றே சொல்ல வேண்டும். அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்று.

கட்சிக்கு கொள்கை வேண்டும். கொள்கை மக்களின் பிரச்சினையை அவர்கள் முன் வைக்க வேண்டும். அப்பிரச்சினையைப் பற்றிப் பேசினால்தான் தொண்டன் கட்சியில் சேருவான். கட்சி வளர அப்பேச்சுகளும், கொள்கைகளும் தேவைப்படும். கட்சி வளர்ந்து விட்டால் இனிமேல் கொள்கைக்கு என்ன தேவை இருக்கிறது?

மக்களின் கவனத்தை ஈர்க்க மட்டுமே கொள்கைகள் தேவைப்படும். ஆனால் அவை மக்களின் பிரச்சினையை தீர்க்காது. கட்சிகளின் தேவை தமிழகத்தை ஆள்வது. அது நிறைவேறி விட்டது. இனிமேல் கொள்கையும் தேவையில்லை. தொண்டனும் தேவையில்லை. தொண்டனுக்குத்தான் கட்சி தேவை. ஆரம்பத்தில் கட்சியும், கொள்கையும் தொண்டனைத் தேடியது. இன்றோ தொண்டன் கட்சியைத் தேடுகிறான். கட்சிகள் எல்லாம் லிமிட்டட் கம்பெனிகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு என்று தொண்டர்கள், ஓட்டுக்கள் என்று படு பக்காவாய் செட்டிலாகிவிட்டார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள ஏதேனும் சில காசு வாங்கும் கட்சிகளின் ஓட்டுக்கள். அதைத் தான் மற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டணி தர்மத்தின் படி கட்சி மாறி மாறிச் செய்து வருகின்றன. காசு வாங்கும் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியும்? எங்கு சென்றால் காசு பார்க்கலாம் என்று. கட்சியாவது, தொண்டனாவது, கொள்கையாவது, கோட்பாடாவது ? அதெல்லாம் மைக்கின் முன்னால் நிற்கும் போது தான் கட்சியின் தலைவருக்கு நினைவுக்கு வரும்.

காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்ட கட்சிகள் இன்றைக்கு பத்திரிக்கை மீடியா, சினிமா, டிவி, என்று என்னென்னவோ துறைகளில் எல்லாம் கொடிகட்டிப் பறக்கின்றனர். ஆசியாவிலேயே பெரிய பணக்காரர் என்ற பெருமையும் சில கட்சியினர் பெற்று இருக்கிறார்கள். வயித்தெரிச்சல் பார்ட்டிகள் கட்சிகள் கொள்ளை அடிக்கிறது என்று கூப்பாடு போடுவார்கள். நான் அவ்வாறு பார்க்கவில்லை. ஒரு கட்சியை லிமிட்டட் கம்பெனியாக மாற்றத் திறமை வேண்டும். அந்தத் திறமையைக் கொண்டவர்கள் கட்சியின் தலைவர்கள் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா ?

கொள்கை என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு. அதி புத்திசாலி கொள்கையை, வாதத்தை தன்னை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்வான். உதாரணம் இன்றைய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும். முட்டாள் தன் வாழ்விலே அவற்றைப் பயன்படுத்தி வீணாய்ப் போவான். அப்படி மாட்டிக் கொண்டவர் தான் அபிஷேக்.

அபிஷேக்கின் சமாச்சாரத்திற்கு வருகிறேன்.

”அனாதி வீட்டில யாரும் இல்லை, தயவு செய்து இன்றைக்கு இரவு என்னுடன் டின்னர் சாப்பிட வந்து விடு, மனசு விட்டுப் பேசனும்” என்று அழாத குறையாக அபிஷேக்கிடமருந்து போன் வந்தது.

நீச்சல் குளத்தின் அருகில் இருவரும் அமர்ந்திருந்தோம். அழுதார். அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

“அன்றைக்கே சொன்னாய் அனாதி. நான் தான் முட்டாள்தனம் செய்து விட்டேன்” என்று புலம்பினார்.

விஷயத்தைச் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன்.

அவரது மனைவி இன்றைக்கு சினிமா, டிவியில் நடிக்கிறார். வீட்டில் தனியாக இருக்க வேண்டாமென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் இன்றைக்கு அதிலேயே மூழ்கி விட்டாராம். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் சென்று விடுகிறாராம். போகும் போது இங்கே போகிறேன் என்று மட்டும் தான் சொல்லுவாராம். குழந்தையைப் பார்ப்பதும் கிடையாதாம். வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வந்தால் அடித்த நொடியே அலறியடித்துக் கொண்டு ஓடி விடுவார்களாம். மனைவி தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறாள் என்று அழ ஆரம்பித்தார்.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் இன்று தண்ணீரில் மிதக்கிறார் அபிஷேக். மனைவியோ யாரோ ஒரு நடிகனுக்கு மனைவியாய், யாரோ ஒரு குழந்தைக்கு தாயாய் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது கணவனையும் விட்டு விட்டார். குழந்தையையும் விட்டு விட்டார்.

இதற்குக் காரணமென்னவென்று நினைக்கின்றீர்கள் ? நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள் .

11 Responses to மனைவி சினிமாவில் கணவனோ கண்ணீரில் !

 1. alagan.rajkumar சொல்கிறார்:

  jodi no.one programmil kuda aattam pottal aval.

 2. kishan சொல்கிறார்:

  THANGSSSSSSSSSSSSSS

 3. kuttysamy சொல்கிறார்:

  சில தவறான பெண்கள் சினிமாவின் பெயரை கெடுக்கிறார்கள் என்று சொல்வதும் மிக பொருத்தமாக இருக்கும் ….

 4. vinu சொல்கிறார்:

  சினிமா பெண்களின் வாழ்கையை சிரழிக்கும் என்பதிற்கான அடுத்த சாட்சி.
  சினிமாவிற்கு அளிக்கப்படும் , அனைத்து சலுகைகளையும் நிறுத்த வேண்டும்.மக்கள் வரிபணம் வீணாக அழிக்கபடுவதை நிறுத்தவேண்டும்.
  முக்கியமாக சினிமாவை அரசின் கட்டுபாட்டில் எடுத்துவர வேண்டும்.
  உங்கள் நண்பரை கவலை பட வேண்டம் , என்று சொல்லுங்கள் . எனென்றால் , சினிமால் சென்று , சீரழிந்த பெண்ணை மீட்பது மிக கடினம். அவரை , வேறொரு நல்ல துணையை தேடிக்கொள்ள சொல்லுங்கள்.

  • அனாதி சொல்கிறார்:

   வினு அவரின் பிரச்சினையை சரி செய்தாகி விட்டது. தற்போது அபிஷேக்கும், அவரின் மனைவியும் வெகு அன்பாய் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அபிஷேக்கின் முற்போக்கு எண்ணம் தான் என்பது தான் இங்கு இடிக்கிறது. அபிஷேக்கிற்குப் பிரச்சினை வரக்காரணமாய் இருந்த அவரின் கொள்கையே தற்போது அவரின் வாழ்க்கை சீர்படவும் காரணமாய் இருந்து விட்டது.

   நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு நிச்சயமாய் புரிந்து இருக்குமென்றே நம்புகிறேன். கமெண்ட் எழுதியமைக்கு மிக்க நன்றி வினு… ( உங்கள் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று )

 5. vinu சொல்கிறார்:

  சினிமா பெண்களின் வாழ்கையை சிரழிக்கும் என்பதிற்கான அடுத்த சாட்சி.
  சினிமாவிற்கு அளிக்கப்படும் , அனைத்து சலுகைகளையும் நிறுத்த வேண்டும்.மக்கள் வரிபணம் வீணாக அழிக்கபடுவதை நிறுத்தவேண்டும்.
  முக்கியமாக சினிமாவை அரசின் கட்டுபாட்டில் எடுத்துவர வேண்டும்.

 6. tamilian சொல்கிறார்:

  Dear Anadhi,
  First excuse my English, I am not able to type in Tamil.
  I discovered your blog last month and I should say, I’m hooked instantly. It was refreshing to find a similar view point like mine in your blog. I can feel a familiarity and closeness in most of your posts. I almost agree with every viewpoint you bring out in your posts. I don’t know how many people can really see and think about the world like you describe and analyze each and every issue that is happening in Tamilnadu. In cinema, politics or any other matter the style you discuss is completely different and genuinely true. Many times I felt happy after seeing your writeup because your words gave me assurance that there is someone also like me to see and feel about tamilnadu and tamils. I read all your posts but never left comment but this time I could not avoid. And about comments, please don’t feel bad for anyone not writing comments. I know you are doing a good job and I wish you to continue this. I want to thank you from my heart and wish you all the best in life. Thanks again for a great blog. You are doing a wonderful job.
  Tamilian.

  • அனாதி சொல்கிறார்:

   தமிழன் உங்களின் பாராட்டுக்கு நன்றி ! இப்படி ஒரு பாராட்டை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் படிக்க குஜாலாய் இருக்கிறது. மீண்டும் மிக்க நன்றியினை தெரிவிக்கிறேன்.

 7. சரவணன் சொல்கிறார்:

  அனாதி அவர்களே,

  உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: