இந்து என்ற மதமே இல்லை!

திரு பழ கருப்பையா எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர். அவரின் நேர்காணல் ஒன்றினைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினை பற்றிய நேர்காணல் அது. தீட்சிதர்களுக்கு ஆதரவாய் பேச வந்த வக்கீலுடன் மிக உக்கிரமான வாதத்தை முன் வைத்தார். பழ.கவின் கேள்விகளுக்கு வக்கீல் மென்று முழுங்கிக் கொண்டிருந்தார்.

நான் இந்து மதத்தைச் சார்ந்தவன் அல்ல என்று சத்தமிட்டுக் கூறினார் பழ கருப்பையா.

மிகுந்த ஆச்சர்யம் தந்தது எனக்கு. சில அப்ளிகேஷன்களில் உங்கள் மதம் என்னவென்று கேட்கப்பட்டிருந்த பகுதிகளில் இந்து என்றே எழுதி வந்திருக்கிறேன்.

நான் தமிழன், என் மதம் சைவம் அல்லது வைணவம் என்றார் தொடர்ந்து.

விவேகானந்தர் வேறுபட்டுக்கிடந்த இந்தியர்களை ஒன்று சேர்ப்பதற்காக இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும் சொன்னார்.

திரு கண்ணதாசன் அவர்களாலும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புகழ் பெற்ற நூலும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நூலில் திருவள்ளுவரும் ஒரு இந்து என்று எழுதியிருக்கிறார். விவேகானந்தருக்கும், கண்ணதாசனுக்கு நோக்கம் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமென்று கருத இடமிருக்கிறது. திரு சோ அவர்களும் ஹிந்து ஹிந்து என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்.

வேறுபட்ட சம்பிரதாயங்கள் கொண்ட இந்தியர்களை ஒன்று சேர்க்கும் பொருட்டு இந்து மதம் என்று அடையாளப்படுத்துவது நல்ல நோக்கம்தான் என்றாலும், இந்து மதத்தை முன்னிறுத்தி வரும் சில அமைப்புகளுக்கு தலைவர்களாக இருப்போரின் ஜாதியைப் பார்க்கும் போது புலப்படாத சில சந்தேகங்களை உருவாக்குகிறது.

அதற்கு உதாரணமாய் கீழ்க்கண்ட சம்பவத்தை படியுங்கள்.

தமிழகத்தில் இந்துக்கள் அமைப்பினைச் சார்ந்த ஒரு தலைவரைச் சந்தித்தபோது அவர் தன்னைக் கட்டித் தழுவியதாகவும், அப்போது தன் முதுகில் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததாகவும் சொன்ன என் நண்பர் அடுத்து சொன்ன வார்த்தை “ அவர் என் முதுகில் வேறு ஏதாவது அடையாளச் சின்னத்தை அணிந்திருக்கிறேனா என்று பார்ப்பதற்காக என் முதுகை தடவினார்” என்றும் சொன்னார்.

மேலும் ஒரு கேள்வியை கேட்டார் பழ.க.

இந்தியாவெங்கும் புகழ் பெற்ற காசி விஸ்வ நாதர் கோவிலில் சாமி சிலையைத் தொட்டு வணங்கலாம். ஆனால் அதே சாமியை சிதம்பரத்தில் தொட்டு வணங்கக்கூடாது என்று சொல்கிறீர்களே அது ஏன் என்று கேட்டார். வக்கீல் சார் ஏதேதோ சொன்னார்.

உண்மையும், பொய்யும் சந்திக்கும் போது உண்மையின் வெளிப்பாடு ஆக்ரோஷமாய் இருக்கும் என்று சொல்லுவார்கள். அதை அந்த நேர்காணலில் பார்க்க நேர்ந்தது.

9 Responses to இந்து என்ற மதமே இல்லை!

 1. CM001 சொல்கிறார்:

  But now the dravidian parties do not believe the dravidian’s original culture, Dravidians are the believers of the god! – Siva

  Dravidian movement didn’t start with MGR and I doubt whether it includes Jaya. Unfortunately Dravidian movement and Karunanidhi politics are confused for each other. For all its fault, I strongly oppose them, Dravidian movement actually was very progressive. In US we have to have term limits to kick the politicians out, something that India very badly needs. But Anna said “Brother come forward to take leadership”. Alas, the fate of India and TN that we lost a great leader for cancer. Even at this age, MK is playing word games with his retirement. We had CM’s like Kamaraj and Anna, politicians left nothing really for charity because they never saved anything for themselves, to MK who can happily leave 100 crores to charity caz it is not even 1% of his assets.

  you also have to understand sanadhana dharma to realize it doesn’t really speak about religion but bhakthi and way of life (i.e., living a life of bhakthi)

 2. siva சொல்கிறார்:

  Civilization started from mecepatomia and Indus valley I believe. The saintly person whom delighted the people teaching adwaitha

  India is characteristic of a mystic appeal and is ever ready to embrace into her fold, all those who are eager to partake of her spiritual bounty. It is the birth place of many a spiritual giants (Gurus or Masters), from different walks of life who appeared to root out the weeds of ignorance that seem to cover the vast expanse of the pure mind. They diligently lead the seekers to an inward journey to explore the true purpose of one’s existence and discover their true being; an attempt to lose all miseries that crop up mysteriously in life and to bask in everlasting bliss.

  In the word ‘Guru’, ‘Gu’ meaning ‘darkness or ignorance’ and ‘Ru’ meaning ‘the remover of that ignorance’ clearly states the role of a Guru. Of the spiritual masters of India, Adi Sankara Bhagavadpada was the advocator of the Advaita Philosophy (Non-Dualiam) that propounded the law about the unity of the soul and the Brahman (Divine) and that the Brahman by nature had no attributes. Lets take a peep into the life of this great saint.

  In a place called Kaladi in the state of Kerala, Adi Sankara was born as a result of the piety of his parents, Sivaguru and Aryambal. Adi Sankara’s parents sought the feet of Lord Vadakunnathan ( Lord Shiva) in Trissur in want of a son. The lord greatly pleased with the couple’s devotion appeared in their dream and asked them to choose between having an extraordinary and an exemplary son who will live only for a short span of a time or an ordinary son who will live long. It is not difficult to guess that the couple chose the extraordinary one who was none other than Adi Sankara. He was born under the star of Thiruvaitthirai and was named Sankara by his parents. He was believed to have been the incarnation of Lord Dakshinamurthy, the primal Guru.

  Adi Sankara. Even as a child Sankara attracted people with his intelligence and kindness. He lost his father in the early age of four. He was soon initiated into Bramacharyam and sent to the Gurukul to learn the scriptures.

  But now the dravidian parties do not believe the dravidian’s original culture, Dravidians are the believers of the god! Proven track!
  MGR was a dravidian > Jayalalitha is an dravidian> Dravidiayan thoughts are not the copy rights of Karuna nidhi. Makkazh nalam makkazh nalam endre solluvar “tham makkazh nalam ondre thaan manadhil Kolluvaar”

  Regards
  Siva

  • அனாதி சொல்கிறார்:

   மிஸ்டர் சிவா, உங்கள் பின்னூட்டத்தை தற்போது தான் படித்தேன். எனக்கு மதத்தின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. அதுவுமின்றி அன்பைத் தவிர உயர்ந்த மதம், தத்துவம், கோட்பாடுகள் இல்லை என்பதே என் எண்ணம். அன்பே கடவுள் என்று சொல்லுபவன். வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வேன். ஆனால் வரலாற்றைப் பின்பற்ற மாட்டேன். அன்பைத் தவிர மற்றதெல்லாம் சும்மா. நான் சொல்வது சரிதானே????????

 3. ranga சொல்கிறார்:

  சிந்து நதியின் கரையில் வாழ்ந்தவர்கள் ‘சிந்துக்கள்’ என்று முஸ்லிம்களால் வழங்கப்பட்டனர். சிந்துக்களே நாளடைவில் ‘இந்துக்களாக’ மருவியது.

  தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ள இமய மலைத் தொடருக்கு ‘இந்து குஷ்’ என்று பெயர். இந்துக்கள் வாழும் சிந்து நதிக்கரையை அடைந்து, அவர்களைக் கொல்ல இந்த மலையைக் கடக்க வேண்டுமென்பதால் இப்பெயர் வந்தது. குஷ் என்றால் கொலை செய்தல்
  என்று அர் த்தமாம்.

  எனவே, இந்து க்கள் வாழ்க்கை முறையே இந்து மதம் ஆனது எனக் கொள்ளலாம். ஆனால் இந்துக்கள் த ங்களை அவ்வாறு அழைத்துக் கொண்டதில்லை.

  அவர்கள் பின்பற்றியதெல்லாம் ‘தர்மம்’ எனப்படும் வாழ்க்கை முறை ஒன்றே.

  சமஸ்கிருததில் ‘மதம்’ என்ற சொல்லே இல்லை என்பது என் கருத்து.

  மதம் என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்களிலும் கிடையாது (திருக்குறள், தொல் காப்பியம், நாலடியார் போன்றவை)

  சில நூல்களில் சைவ, வைணவ, ஜைன சம்யங்கள் எனக் குறிக்கப் பட்டுள்ள து. அவை யாவும் பழைய வைதிக சமயடததின் கிளைகளே.

  எனவே மதம் என்பது பிற்காலததில உருவா கிய சொல் என்பது திண்ணம்.்்

  • அனாதி சொல்கிறார்:

   ரங்கா, அருமையாகச் சொன்னீர்கள் போங்கள். மக்களை ஏமாற்றும் பேர்வழிகள் தான் மதமென்ற சொல்லை உருவாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இருப்பினும் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். கொடுமை தானே !

 4. கனககோபி சொல்கிறார்:

  இந்துமதம் மற்றுமல்ல… எந்த மதங்களும் தேவையில்லை என்கிறேன் நான்…

 5. யாத்ரீகன் சொல்கிறார்:

  Nerkaanal inayaththil kidaikkumaa ? yendha tholaikkaachchi ?

  • அனாதி சொல்கிறார்:

   வசந்த் டிவி நேர்காணலில் பார்த்தேன் யாத்ரீகன். சில எழுத்தாள நண்பர்களிடம் பேசிய போது இந்து என்ற பெயர் இந்தியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்டது என்றும் அது பின்னாலே இந்து என்ற மதமாய் மாறிவிட்டது என்றும் சொன்னார்கள். மேலும் இந்த வார்த்தையை வைத்து சிவன், பெருமாளை வணங்கும் மக்களுக்கு தலைவர்களாய், இந்து மத காப்பாளர்களாய் ஆகவும் சிலர் காய் நகர்த்தி, அதை செயல்படுத்தியும் வருகிறார்கள் என்றும் சொன்னார்கள். உண்மையாக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்று கருத வேண்டியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: