கமல்ஹாசனை வீழ்த்தத் துடிக்கும் தமிழ் சமூகம் !

மைக் டிவி என்னும் விஜய் டிவியில் கமலைப் பற்றிய ”கமலும் தமிழும்” என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளாராக வரக்கூடிய அறிவுத் திறன் கொண்ட கோபினாத் தனது அறிவுத் திறனையும், பேச்சாற்றலையும் ஜால்ரா தட்ட உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து சில எழுத்தாளர்களும், சில இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு கமலை வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். இவர்களின் கமல் பற்றிய பேச்சு அந்தக் கலைஞனை முற்றிலுமாக அழித்து ஒழித்து விடுமென்பது தெரியாமல் போய்விட்டதா இல்லை லட்சக்கணக்கான ரூபாய்க் கட்டுக்களுக்காக தனக்குத் தெரிந்த வித்தை மூலம் வார்த்தை ஜாலங்களை அவிழ்த்து விட்டார்களா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

கமல் சமூகக் கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து தனக்கென்று ஒரு வழியை உருவாக்கி அதனோடு வாழ்வை நடத்துபவர். எவருக்கும், எந்தக் கோட்பாட்டுக்கும் கட்டுப்படாதவர். சினிமா உலகில் மனிதத் தன்மையோடு இருக்கும், வாழ்க்கையில் நடிக்காமல் உண்மையாக வாழ்ந்து வரும் நடிகன் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்.

ஏன் இப்படிச் சொல்கிறேன் ? கமல்ஹாசனின் சலங்கை ஒலி பார்த்திருக்கின்றீர்களா ? அப்படத்தில் கமலுக்கான எந்தவித காட்சியமைப்பும் இருக்காது. நடனக் கலைஞனின் வாழ்க்கை மட்டுமே பதியப்பட்டிருக்கும். படத்தோடு மனது ஒன்றி கலைஞனின் வாழ்க்கையோடு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனின் மனதும் பயணப்படும். கமல் அப்படத்தில் மறைந்து இருப்பார். சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் ரசிகனின் உள்ளதோடும், உணர்வோடும் உறவாடிய காரணத்தால் மாபெரும் வெற்றியடைந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதைப் போன்று ரசிகனின் மனதோடு இசைந்த, இணைந்த, உறவாடிய கமலின் படத்தை மறுமுறை பார்த்திருக்கின்றீர்களா? கண்டிப்பாக இருக்கவே இருக்காது.

கமலைப் புகழ்ந்து பேசியே அவரின் நடிப்புத் திறனை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். ஹீரோயிசப் படங்களை மட்டுமே அவர் தந்து கொண்டிருக்கிறார். அதுவே உண்மையென்றும் புரிந்து கொண்டிருப்பது போல அவரின் சமீபத்திய படங்களும் இருக்கின்றன. ஹீரோயிசப் படங்களில் நடிப்புக்கு எங்கே வேலை இருக்கிறது ? கமல் புகழ்ச்சி என்ற புனையப்பட்ட மாய வலைகளிலிருந்து தப்பிக்க வேண்டும். இனிமேலாவது அவர் நடிக்க வேண்டுமென்பதே எனது ஆவல்.

புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் நடித்த நடிகனை தனது வருமானத்திற்காக கார்ப்பொரேட் பத்திரிக்கைகளும், மீடியாக்களும் சூப்பர் ஸ்டார் என்ற மாய அந்தஸ்தைக் உருவாக்கி ரஜினி என்ற கலைஞன் இருந்த இடம் தெரியாமல், அவரை உருத்தெரியாமல் அழித்து விட்டன.

கமல் தப்பிப்பாரா ?

6 Responses to கமல்ஹாசனை வீழ்த்தத் துடிக்கும் தமிழ் சமூகம் !

 1. thamilannan சொல்கிறார்:

  வ்ணக்கம் அண்ணே
  நீங்கள் சொல்வது ரொம்ப சரி
  ந்டிகர்களின் பருப்பு வேகாது

 2. padmahari சொல்கிறார்:

  நல்ல பதிவு.மனிதர்கள் யாவரும் சூழ் நிலைக்கைதிகளே! உங்களைபோலத்தான் நானும்.கமலுக்குள் இருக்கும் நடிகனை இப்போது தேடி தேடிப் பார்த்தாலும் கிடைப்பதில்லை! இது கண்டிப்பாக கமலுக்கும் தெரியும்.பார்க்கலாம் தப்பிக்கிறாரா என்று.நன்றி.வாழ்த்துக்கள்!

 3. நடிகர்களை நம்பாதீர்கள். அவர்களுக்கென்று ஒரு நிரந்தர கொள்கை கிடையாது.

  புவனா ஒரு கேள்விக்குறியில் நடிததவரை கார்பொரோட் கொண்டுபோனது என்று சொல்லி, அந்நடிகனுக்கு அதில் எந்த விருப்பமில்லயென ஜோடிக்காதீர்கள்.

  உஙகள் விருப்பமில்லாமல் மற்றவர் உங்களை எதுவும் செய்யவைக்க முடியாது. நடிகனும் அப்படியே.

  //கமல் சமூகக் கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து தனக்கென்று ஒரு வழியை உருவாக்கி அதனோடு வாழ்வை நடத்துபவர். எவருக்கும், எந்தக் கோட்பாட்டுக்கும் கட்டுப்படாதவர். சினிமா உலகில் மனிதத் தன்மையோடு இருக்கும், வாழ்க்கையில் நடிக்காமல் உண்மையாக வாழ்ந்து வரும் நடிகன் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்.//

  இது வெளித்தோற்றம். அவர் ஆழ்மனத்தில் என்ன உண்டு என்பதை யாரறிவார்?

  Once an actor always an actor என்ற ஆங்கிலப்பழமொழி 100/100 உண்மையாகும்.

  நடிகன் எவனையும் நம்பாதீர் – தன் புகழுக்காகவும் பணத்திற்காகவும் நடிகன் எதையும் செய்வான்.

  • அனாதி சொல்கிறார்:

   மனிதர்கள் சூழ் நிலைக் கைதிகள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா ? நிச்சயமாய் முடியாது. புகழேணியில் ஏற்றி விட்டால் வேறு வழியின்றி அதைத் தக்க வைக்க வேண்டும். விட்டு இறங்க முடியாது. ரஜினியும் அவ்வாறே.

   விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ சிலரால் ஆட்டிவைக்கப்படுபவர்கள் தான் மனிதர்கள் என்பதையும் உங்களால் மறுக்கவும் முடியுமா ?

   குழந்தைகளை முன் வைத்து தான் ரஜினியின் காய் நகர்த்தல்கள் இருந்தன. அதே போன்று விஜய்யும் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்.

   நடிகர்களை நம்பியது மக்களின் அறிவிலித் தன்மை. தற்போது அப்பருப்பெல்லாம் வேகாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: