தொழில் ரகசியம் இரண்டாம் பாகம் (18+ மட்டும்)

ஜான்சன் கொடிகட்டிப் பறக்கும் உலகப் புகழ் பெற்ற கோடீஸ்வரன். அவர் நினைத்தால் பேரழகிகளை தன் அந்தப்புரத்தில் கொண்டு வந்து அனுபவிக்கலாம். ஆனால் அப்படிப் பட்டவர் இல்லை. பெண்களின் மீது மோகம் கொண்டலையும் எத்தனையோ பெரிய மனிதர்களிடையே ஜான்சன் மட்டும் விதிவிலக்காய் இருந்தார். விந்தியாவைத் தவிர அவர் வேறெந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.

காரணம் என்ன ? விந்தியாவிடம் அவர் கொண்டது என்ன ? காதலா ? காமமா ? இல்லை வேறேதாவது ஒன்றா? விந்தியாவிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு மயக்கம் ? அவளைத் தனது கம்பெனிகளில் பார்ட்னராக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு ஏன் இவள் மேல் மோகம் ?

என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்த அனாதிக்கு மேற்படி விஷயம் கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தான். அது என்ன ?

இவ்விஷயத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் அதிக நேரமும், செலவும் செய்ய வேண்டுமென்பதை உணர்ந்தான் அனாதி. அவனுக்கு அந்த மிகப் பெரிய பிசினஸ்மேனுக்குள் உறங்கிக் கிடக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிப்பது என்பது மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்தது. திட்டங்களை வகுத்துக் கொண்டான்.

அனாதியின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ஐரோப்பாவில் மிகப் புகழ் பெற்ற பத்திரிக்கை குழுமம் ஒன்றினை நடத்தி வருகிறார். அனாதிக்கும் இவருக்கும் நட்பு மலர்ந்தது ஒரு தனிக்கதை. ஒரு நாள், டிராவல்ஸ் அண்ட் லிவிங் சேனலில் புரோகிராம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்த அனாதி அந்த புரோகிராமில் வந்த ஐரோப்பிய நண்பர் வின்செண்டை மெயிலில் தொடர்பு கொண்டான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து மெயில் வந்திருந்தது. அதன் பிறகு மெயில் தொடர்பு மற்றும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசுமளவிற்கு நெருங்கி விட்டார்கள். இன்னும் நேரடியாக இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இவரிடம் இருக்கும் ஒரு பண்பு அனாதிக்கு மிகவும் பிடித்தமானது. வின்செண்ட் வாரக் கடைசியில் பத்து அழகிகளை தனது சொகுசு போட்டில் ஏற்றிக் கொள்வார். அழகிகள் அனைவரும் ஜட்டி, பிராவுடன் போட்டின் முன் பகுதியில் போடப்பட்டிருக்கும் மெத்தை மற்றும் ஷோபாவில் விளையாண்டு கொண்டிருப்பார்கள். வின்செண்ட் அவ்வழகிகளுடன் நடுக்கடலுக்குள் சென்று விடுவார். அங்கு என்ன நடக்கும் என்பதெல்லாம் எழுதினால் நண்பரைப் பற்றிய தவறான கருத்து உருவாகி விடும் என்பதால் விட்டு விடலாம்.

இவ்விடத்தில் ஏன் வின்செண்ட் இடையில் வருகிறார் ? பெண்கள் அருகாமை தான் ஆணுக்கு வெற்றி தரும் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கும். மேலும் அழகுணர்ச்சி, பெண்களின் மீதான ஈடுபாடு என்பவைதான் ஆணுக்கு உழைப்பின் மீதான வெறியினைத் தரும். வெற்றிக்கு வித்தே பெண்கள் தான். பெண்கள் அருகாமையில் இருக்கும் போது பிரச்சினைகள் மறந்து போய் விடும். இன்பச் சூழ் நிலையில் வெற்றிக்கான சிந்தனைகள் துளிர்க்கும் என்று வின்செண்ட் அடிக்கடி சொல்லுவார். அவரைப் பொறுத்தவரை பெண்கள் என்பவர்கள் அவரை ஊக்குவிக்கும் செயலூக்கிகள்.

தொடரும் முன்பு இப்பாடலை கேட்டு விட்டு தொடருங்கள்


(சொருகல் மேட்டர் : மேற்படிப் பாடலைப் பார்த்தால் சில ஆண்களுக்கு எம்ஜியார் மீது கோபமாய் வரும். அவர் பெண்களைப் பிடிக்கும் பிடியில் நடிகைகள் திணறுகிறார்கள் என்பதாய் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. பெண்கள் ஆண்களின் கைகளில் கசங்குவதை மிகவும் விரும்புவார்கள். மென்மையான அணுகுமுறை என்பது சின்னப் பெண்களுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஓரளவிற்கு வயது வந்தப் பெண்கள் கசங்குவதை நிரம்ப ரசிப்பார்கள் என்பதை தனது அனுபவத்தில் கண்டு கொண்டேன் என்று அனாதி அடிக்கடி சொல்வான்)

மேற்படியைப் போன்ற ஏதாவது ஒரு காரணமாய் இருக்கலாமா என்று கூட யோசித்தான் அனாதி. ஆனால் ஜான்சனுக்கும் விந்தியாவிற்கும் இடையே உள்ள உறவு அதையும் தாண்டி வேறேதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்று அவதானித்தான்.

இங்கிலாந்தில் வசிக்கும், உளவாளி நிறுவனம் நடத்தி வரும் நண்பரைத் தொடர்பு கொண்டான். ஜேம்ஸ் இந்தியா வந்தார். அனாதி விஷயத்தை விளக்கி காரணத்தைக் கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டான். விந்தியாவின் பயணங்கள் ஒவ்வொன்றும் பின் தொடரப்பட்டன. ஜான்சனின் கம்பெனிகளில் ஜேம்ஸின் ஆட்கள் ஊடுறுவினார்கள். வீட்டிலும் ஊடுறுவினார்கள். விந்தியாவிற்கு ஜான்சன் கொடுத்து வந்த அபரிமிதமான அன்புக்கும், மரியாதைக்கும் என்ன காரணமென்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார் ஜேம்ஸ். ஜான்சனையும், விந்தியாவையும் தொடர்ந்த கண்காணிப்புக்குள் உட்படுத்தினார்கள். ஜேம்ஸ் திணறி விட்டார். ஜேம்ஸுக்கு இவ்விஷயம் மிகப்பெரிய சவாலாய் விளங்கியது. திட்டங்கள் ஒவ்வொன்றும் செயல்படுத்தப்பட்டன. என்ன முயன்றும் காரணத்தை ஜேம்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தத் திட்டமும் தோல்வி. தனது தோல்வியை இரண்டு மாதம் கழித்து ஒப்புக் கொண்டார் ஜேம்ஸ். அனாதிக்கு மேலும் ஆவல் கூட, எந்த நேரமும் ஜான்சனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான். அனாதி தன் மனைவியோடு மேற்படி விஷயத்தைச் சொல்லி என்னவாக இருக்கும் என்று கேட்டான். ஒரு நிமிடம் யோசித்த அனாதியின் மனைவி ஒரு வார்த்தை சொன்னார்.

””வினோத் “ என்றாள்.

அசந்து போய்விட்டான். ஏன் இத்தனை நாள் யோசிக்கவில்லை ? தனக்குள் சிரித்தான். வினோத்தை தனது உளவு வளையத்துக்குள் கொண்டு வந்தான்.

ஒரே வாரம் ! விடை கிடைத்து விட்டது.

ஆண்கள் எப்போதும் ஒரு விஷயத்தில் வீக். அது தனக்கு மட்டுமே, எனக்கு மட்டுமே என்ற விஷயம். இந்த உணர்வு மனைவி விஷயத்தில் ரொம்பவும் அதிகம். அதைத் தான் கற்பு என்று வலியுறுத்துகிறது தமிழ்ச் சமூகம்.

ஜான்சன் வினோத்திடம் கேட்டது இதுதான். விந்தியா இனிமேல் அவருக்குச் சொந்தம். அவளை எண்ணத்தால் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்பது தான் முதல் விதி. ஒத்துக் கொண்டார் வினோத். உலக அழகுகளை எல்லாம் தன்னகத்தே கொண்ட பேரழகி ஒருத்தி மனைவியாய் கிடைத்தும், அந்த அழகின் அற்புதம் தன் முன்னே நடமாடிக் கொண்டிப்பதையும், அதற்கு வினோத்தே உரிமையாளனாய் இருந்தும் அதை ஜான்சனுக்கு விட்டுக் கொடுத்த தியாகத்தின் விளைவு தான் : இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர் என்ற பட்டம். ஜான்சனும் சும்மா இருக்கவில்லையாம். விந்தியாவையும் வினோத்தையும் தனது உளவு வட்டத்தில் வைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் உளவு பார்த்திருக்கிறார். வினோத்திற்கும், விந்தியாவிற்கும் இடையே எந்த வித உறவும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டாராம்.

அதன் பிறகே வினோத்திற்கு தொடர்ந்து பிசினஸ்ஸும், விந்தியாவை தனது பிசினஸில் பார்ட்னராகவும் ஏற்றுக் கொண்டாராம். அன்றிலிருந்து விந்தியா இன்று வரை வினோத்திடம் உறவும் கொள்ளவில்லை. உறக்கமும் கொள்ளவில்லையாம். ஊருக்கு மட்டுமே கணவன் மனைவியாய் வலம் வருகின்றனர் இருவரும். மாதத்தில் 10 நாட்கள் இந்தியாவில் இருக்கும் கம்பெனி மீட்டிங்குகளை மட்டுமே அட்டெண்ட் செய்து வருகிறாள் விந்தியா. விந்தியாவின் இந்தத் தியாகத்தில் விழுந்த ஜான்சன் இன்றுவரை மீளவே இல்லை. விந்தியாவின் இந்தத் தியாகத்திற்கு ஈடாக அவனால் வேறொன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை. விந்தியாவின் இந்த அன்பு தன்மீது கட்டாயமாகக் கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்திருந்தாலும் அந்த அன்பின் மீதான் களங்கம் ஒன்றினையும் ஜான்சனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜான்சனைப் பொறுத்தவரை அன்பின் உருவம் “விந்தியா”. அதற்காக அவன் தன் உயிரையே தர தயாராய் இருந்தான்.

அன்பும் காசுக்குக் கட்டுப்பட்டது என்றான் அனாதி !

இந்தக் கதையில் வரும் முடிச்சு உணர்வு பூர்வமான ஒன்று. மேலோட்டமாக படித்தால் அபத்தமாய் தோன்றும். ஆனால் அது அபத்தம் அல்ல. உணர்வின் உச்சகட்டம். சில உணர்வுகளை அறிவுப்பூர்வமாய் அறிந்து கொள்ள முடியாது. வேண்டுமென்றால் ஒரு உதாரணம் இங்கு தரலாம். பார்த்தவுடன் உள்ளுக்குள் பொங்கி வரணும் என்று தமிழ் ஹீரோக்கள் அடிக்கடி சொல்லுவார்கள். அதைப் போன்றதொரு உணர்வுதான் ஜான்சனுக்கு விந்தியா மேல் ஏற்பட்டது.

விந்தியவின் மீது ஜான்சனுக்கு இருக்கும் உணர்வு, இந்தப் பாடலைக் கேட்கும் போது உண்டாகும் உணர்வு போன்றதாக இருக்கலாம்.

– இப்படிக்கு குஞ்சாமணி

10 Responses to தொழில் ரகசியம் இரண்டாம் பாகம் (18+ மட்டும்)

 1. arun சொல்கிறார்:

  பதிலுக்கு நன்றி ..மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கவும்..

  அருண்
  9382635000
  karmoulds@yahoo.com

 2. arun சொல்கிறார்:

  அநாதி ..உங்கள் நட்பு வட்டம் பெரியஇருக்கும் போல் தெரிகிறது.. எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. .என்னுடைய உறவினர் ( எனது மனைவியின் அத்தை) மதுரையில் இருந்து காணவில்லை. போலீஸ் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை ..ஏதேனும் முயற்சி செய்ய முடியுமா? மேலும் விவரங்கள் நேரில் அல்லது அலை பேசியில் அல்லது மின்னஞ்சல் மூலம் .. தொந்தரவிற்கு மன்னிக்கவும்..

  அருண்

  • அனாதி சொல்கிறார்:

   அருண், அவசியம் முயற்சி செய்கிறோம். அனாதியின் மின்னஞ்சலுக்கு விபரங்களை அனுப்பி வையுங்கள். அனாதியின் நண்பர் வட்டத்தின் மூலம் முயற்சி செய்கிறோம். மற்றவை இறைவன் கையில்…

 3. ரவுடி மாப்ள சொல்கிறார்:

  அப்போ அனாதிக்கு நான் நண்பன் ஆஹா அசை படுகிறேன். நடக்குமா ??

 4. ராஜூ.. சொல்கிறார்:

  மிஸ்டர்.குஞ்சாமணி, அனாதிக்கு நிறைய ஊத்திக் குடுத்து,
  ஏகப்பட்ட மேட்டர் கறக்கலாம் போல..!
  🙂

  • அனாதி சொல்கிறார்:

   ராஜூ- நன்றி.

   அவ்வளவு எளிதில் அணுக முடியாதவன் அனாதி. அவனின் நட்பு வட்டம் மிகவும் பெரியது. நட்புக்காக மட்டுமே அவனிடம் நட்புக் கொள்ளலாம். மற்றபடி சரக்கு ஊத்திக் கொடுத்து மேட்டர் கறப்பது எல்லாம் அவனிடம் முடியாது.

   மேலும், அனாதியிடம் வற்புறுத்தி அவனது சம்மதத்தோடு சில விஷயங்களை இங்கு பதிக்கிறோம். அனாதி ப்ளாக் மூன்று நண்பர்களால் எழுதப்படுகிறது.

  • அனாதி சொல்கிறார்:

   ராஜூ- நன்றி.

   அவ்வளவு எளிதில் அணுக முடியாதவன் அனாதி. அவனின் நட்பு வட்டம் மிகவும் பெரியது. நட்புக்காக மட்டுமே அவனிடம் நட்புக் கொள்ளலாம். மற்றபடி சரக்கு ஊத்திக் கொடுத்து மேட்டர் கறப்பது எல்லாம் அவனிடம் முடியாது.

   மேலும், அனாதியிடம் வற்புறுத்தி அவனது சம்மதத்தோடு சில விஷயங்களை இங்கு பதிக்கிறோம். அனாதி ப்ளாக் மூன்று நண்பர்களால் எழுதப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: