தமிழனின் தஞ்சை பெரிய கோவில் மராட்டியர் வசம் !

ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலின் பரம்பரை அறங்காவலராக மராட்டிய இனத்தைச் சார்ந்த திரு பாபாசி போன்ஸ்லே என்பவர் இருந்து வருகிறார். அத்துடன் சுமார் 80 கோவிலுக்கும் இவரே பரம்பரை அறங்காவலராகவும் இருக்கின்றாராம். இவர் எப்படி தமிழர்களின் சொத்துக்கு அறங்காவலராக இருக்கலாம் என்று தஞ்சையில் போராட்டக்குழு ஒன்று கேள்வி கேட்கிறது.

சன் டிவி நியூஸ் சானலில் ஒளிபரப்பான நிஜம் நிகழ்ச்சியில் மேற்படி சமாச்சாரத்தை கிளப்பினார்கள்.

தமிழனின் சொத்தான தஞ்சை பெரிய கோவிலை உடனடியாக ஆக்கிரமிப்பாள மராட்டிய இனத்திடமிருந்து மீட்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதற்கான விடையாக கீழ்க்கண்ட கட்டுரையினை படிக்கலாம்.

கட்டுரையைப் படித்து முடித்ததும்,  நாம் இனிமேல் என்ன செய்ய வேண்டுமென்பதையும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கட்டுரையின் தலைப்பு : தஞ்சைக்கு யார் மன்னன்? (களஞ்சியம்)

உதவி : http://sempulam.com/index.php/tanjore-temple-prince-not-bhonsle

இராசராசசோழன் என்ற தமிழ் பேரரசன் ஆணையின்படி தமிழ் மக்கள் எழுப்பிய தஞ்சை பெரிய கோவிலுக்கும் மற்றும்  பல்வேறு காலங்களில் கட்டப்பட்ட சைவ,வைணவக் கோவில்களுக்கும், மராட்டிய ஆக்கிரமிப்பாளர் பரம்பரையைச் சேர்ந்த பாபாசி பான்சுலே பரம்பரை அறங்காவலராக உள்ளார்.

அவரது பரம்பரை அறங்காவலர் நியமனம் சட்டத்திற்கு எதிரானது எனப் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார் பெ.மணியரசன்.

தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராக உள்ள அவரை,அவரது போராட்டம் தொடர்பாகச் சந்தித்தோம்.

தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழுத் தொடங்கியதன் நோக்கம் என்ன?

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாமன்னர் இராசராசசோழன் பிறந்த நாளான சதய திருவிழாவின் போது எங்கள் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி சார்பில் மாமன்னன் இராசராசசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலுக்கும் மராட்டிய பான்சுலே பரம்பரை அறங்காவலரா? என்ற தலைப்பில் துண்டறிக்கைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதன் தொடர்ச்சியாக 2005 டிசம்பர் 16ஆம் தேதி தமிழ் உணர்வாளர் ஆன்மிகப் பெரியவர்களை ஒன்றுதிரட்டித் தஞ்சைப் பெரியகோவில் பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலுருந்து பாபாசி ராஜா பான்சுலேயை நீக்குவது குறித்து தஞ்சையின் மூத்த இளவரசர் என்று அழைப்பதைத் தவிர்ப்பது குறித்தும் இயக்கங்கள் நடத்த தீர்மானித்து. 12.3.2006 தஞ்சை பெரியகோவில் உரிமை மீட்புக்குழுவை அமைத்தோம்.அதன் ஒருங்கிணைப்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.

இத்தனை ஆண்டுகளாக மூத்த இளவரசர் என்றும் பரம்பரை அறங்காவலர் என்றும் பொறுப்பு ஏற்று மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள பான்சுலேயே திடீர் என்று நீக்க வேண்டும் நீங்கள் வலுயுறுத்த காரணம் என்ன?

பான்சுலே மீது எங்கள் யாருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் கிடையாது. இராசராசசோழன் என்ற தமிழ் பேரரசன் ஆணயின்படி தமிழ் மக்கள் எழுப்பிய தஞ்சை பெரியகோவிலுக்கும் மற்றும் பல்வேறு காலங்களில் கட்டப்பட்ட சைவ,வைணவ கோவில்கலுக்கும் மராட்டிய ஆக்கிரமிப்பாளர் பரம்பரையைச் சேர்ந்த பாபாசி பான்சுலே என்பவர் பரம்பரை அறங்காவலராக இருப்பது தமிழ் இனத்திற்கு இழிவாகும். இது பரம்பரை அறங்காவலர் நியமனச் சட்டத்திற்கு எதிரானது.இன்றைக்கும் தஞ்சையில் மன்னராட்சி நடப்பது போல் மூத்த இளவரசர் என்று மாவட்ட நிருவாகமும் அங்கீகரிப்பது,சட்ட விரோதமானச் செயலாகும்.

பாபாசி பான்சுலே இளவரசர் இல்லை என்று நீங்கள் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

“வரலாற்றுச் சான்றுகள் நிறைய உள்ளன.முதலில் மூத்த இளவரசர் என்று சொல்லப்படும்.இவர் சொந்த அரண்மனையிலோ,அல்லது சொந்த விட்டிலோ குடியிருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.தஞ்சை அரண்மனை வளாகம் முழுவதும் பொதுபணித்துறைக்குச் சொந்தமானதாகும்.அதில் ஒரு சிறுப் பகுதில் வாடகைக்குதான் குடியிருந்து வருகிறார்.இரண்டாவதாக இவரின் இவரது முன்னோரோ மன்னர் மானியம் பெறும் தகுதி கொண்டவர்கள் இல்லை.இவர் தாத்தா ராஜாராம் தமது குடும்ப வறுமை நிலையை எடுத்துக் கூறி அரசிடமிருந்து குறிப்பிட்ட தொகையைத் கருணைத் தொகையாக அரசியல் ஒய்வூதியம் பெற்றார். அவர் பெற்றது மன்னர் மானியம் அல்ல. அந்தக் கருணைத்தொகை இவர் தாத்தா இறந்ததும் நிறுத்தப்பட்டது.பாபாசி பான்சுலே தம் வறுமை நிலையைத் எடுத்துக் கூறித் தாத்தா பெற்றக் கருணைத் தொகையைப் பின்னர் பெற்றார்.பான்சுலெயின் நன்னடத்தையைப் பொறுத்துதான். இந்தக் கருணைத் தொகை தொடர்ந்து அவருக்கும் கொடுக்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி இவருக்கு 2500 ரூபாய் ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது சரபோசி மன்னர்  தஞ்சை அரசை வெள்ளைக்கார கிழக்கிந்தியக் கம்பெனிக்கு 1799 ஆம் ஆண்டு விற்று விட்டார். அதற்காக ஆண்டுதோறும் ஒர் இலட்சம் பக்கோடா(தங்க காசு) கம்பெனியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.சரபோசியின் மகன் இரண்டாம் சிவாசிக்கு ஆண் வாரிசு இல்லை. இரண்டாம் சிவாசி 1855இல் இறந்தபிறகு சம்பிரதாயத்திற்கும்கூட மராட்டிய பரம்பரையினர் தஞ்சை அரண்மனைக்கு வாரிசு அடிப்படையில் முடிசூட்டிக் கொள்ளும் உரிமையை வெள்ளையர் அரசு தடை செய்தது.வரலாறு இவ்வாறிருக்க பாபாசி பான்சுலே எப்படி மூத்த இளவரசர் ஆவார்.

பரம்பரை அறங்காவலர் பொறுப்பு ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து பாபாசி பரம்பரைக்குத் தொடர்வதாகக் கூறுகிறார்களே அதை எப்படி நீக்க முடியும்?

இந்தியாவை ஆண்ட வெள்ளையர் கிறித்தவர் என்பதால் இந்து மத விவகாரங்களில் அரசு தலையிட வேண்டாம். என்ற கொள்கையைப் பேரரசி விக்டோரியா அறிவித்தார்.

அந்த வகையில் பரிசு சீட்டு விழுந்தது போல் அரசை விற்று விட்ட மரத்திய பரம்பரைக்குக் கோவில் நிருவாகம் வந்தது.1947 ஆகஸ்ட் 15 விடுதலைக்குப் பிறகு தமிழ் நாட்டில் கோயில் நிர்வாகங்களைக் கவனிக்கப் பல்வேறு ஆணைகள் சட்டங்கள் வந்தன.அவற்றுள் 1956-இல் வந்த இந்து அறநிலைய ஆட்சித்துறைச் சட்ட விதிகள் முதன்மையானவை.அச்சட்டவிதி63(ஆ)-வின் படி பரம்பரை அறங்காவலருக்குப் பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்

1.இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

2.குறிப்பிட்ட கோயிலில் பரம்பரை அறங்காவலராக வரவேண்டுமெனில் அக்குறிப்பிட்ட கோவிலையோ அல்லது அக்கோயிலின் ஒரு பகுதியையோ அவர் முன்னோர் கட்டியிருக்க வேண்டும்.

3.திருக்கோவில் நிருவாகம் அவர்களுடைய சொந்த செலவில் நடைபெற வேண்டும் அதாவது அன்றாட வழிபாடுகள் பணியாளர் ஊதியம் உள்ளிட்டவை அவை சொந்த செலவில் நடைபெற வேண்டும்.

4.திருக்கோயில் பெயரில் நன்கொடையாகத் தங்களது ஏதாவது ஒர் சொத்தை எழுதி வைத்திருக்க வேண்டும்.

5.மேற்கண்ட நான்கு விதிகளில் பான்சுலே இந்து மதத்தைச் சேர்ந்தவர்.என்பதைத் தவிர வேறு எந்த விதியும் அவருக்கு பொருந்தாது முன்னோர் தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட அரண்மனை தேவஸ்தானக் கோயில் களைக் கட்டவில்லை அவர் தான் கோயில் பணத்திலிருந்து ஊதியம் பெறுகிறார் அவர் கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் தரவில்லை இவர் இராசராசச் சோழன் பரம்பரையும் இல்லை எனவே அவரை உடனடியாக்ப் பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.என்று தமிழக அரசிடம் கோருகிறார்.

நீங்கள் மேலே கூறிய சட்டப்படியான சேதிகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து மற்றங்களைச் செய்யலாமே?

கடந்த ஆண்டு தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்பு மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்து அறநிலையத்துறை இணை ஆணையரை சென்னையில் நேரில் சந்தித்து மனுக் கொடுத்தோம்.ஒவ்வொரு சதய திருவிழாவின் போதும் சனநாயக வழியில் பான்சுலேக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தி கைதாகி அரசுக்குத் தெரிவித்து வருகிறோம்.வேறு நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

தஞ்சை மாவட்ட ஆட்சியரை அணுகினீர்களா?

“அணுகினோம்.இப்பொழுதுள்ள மாவட்ட ஆட்சியர் விஜயராஜ்குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்து விளக்கினோம்.

அதன் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அவருக்குக் மடல் அனுப்பி எந்த ஆதாரத்தின் கீழ் பான்சுலேயைத் தஞ்சை மூத்த இளவரசர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டோம் அதற்கு அவர் 23012008 என்று அனுப்பிய மடலில் பாபாஜி பான்ஸ்லேயை மூத்த இளவரசர் என்று அழைப்பதற்கு எந்த ஆவணச் சான்றும் இல்லை.நடைமுறையில் அப்படி அழைக்கப்படுகிறது.இனி அவ்வாறு அழைப்பது தவிர்க்கப்படும் எனக் குறிப்பிடுகிறார்.

அறநிலையத்துறை சார்பாக அச்சிடும் அறிவிப்புகளில் இப்பொழுதும் அவரை மூத்த இளவரசர் என்று போடுகிறார்களே?

“ஆம் குறிப்பாகத் தஞ்சை அரண்மனைத்தேவசுதான உதவி ஆணையர் திரு.வே.கோவிந்தராம் பிடிவாதமாக பான்சுலேயை மூத்த இளவரசரென்று அவர் துறை  சார்ந்த விளம்பரங்களிலும் அறிவிக்கைகளிலும் குறிப்பிடுகிறார் ஆனால் சென்னையில் நாங்கள் சந்தித்து மனுக்கொடுத்த இணை ஆணையர் தங்கள் துறை அறிவிக்கைகளில் பான்சுலேயை மூத்த இளவரசர் என்று குறிப்பிடுவதில்லை என்றார். இங்கு கோவிந்தராம் நேர் எதிராக நடந்து கொள்கிறார்.உரிமைமீட்புக் குழு சார்பில் அவரை சந்தித்து விளக்கம் கேட்டபோது முரட்டுத் தனமாக விடை அளித்தார்

அரசின் அறநிலைத் துறையை விட பான்சுலே பெரியகோவிலை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்.என்று சொல்கிறார்களே?

“தவறு மாரியம்மன் கோவில் கோடியம்மன்கோவில் போன்ற அதிக வருமானம் வரக்கூடிய கோயில்கள் அவர் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன. அந்நிதியிலிருந்து அப்பகுதி மக்கள் முன்னேற எந்தச் செலவும் செய்வதில்லை ஊழியர்கள் பணியாளர்கள் அரசு விதிப்படி நிரந்தரப் படுத்த படவில்லை அரண்மனையில் வடநாட்டுக் கலாச்சாரங்களைத் திணித்து வருகிறார்கள்.

உரிமை மீட்புப் குழு மூலம் என்ன சாதித்துள்ளீர்கள்?

“பான்சுலே சோழப்பரம்பரையோ,தமிழ் பரம்பரையோ அல்ல தஞ்சையை ஆக்கிரமித்த மராட்டியப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற செய்தியை சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளோம்.தஞ்சை மாவட்ட ஆட்சியரே பான்சுலேயை முத்த இளவரசர் என்று அழைக்கமாட்டோம் என்று கூறும் நிலை எங்கள் போராட்டத்தால் தான் வந்தது.தமிழ் இன உணர்ச்சி எங்கள் போராட்டத்தால் வளர்ந்துள்ளது என்றார்”.  –தஞ்சை இராசா

நன்றி: தமிழோசை (களஞ்சியம்)

நன்றி : செம்புலம் இணைய தளம் மற்றும் நிர்வாகி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: