மாயாலோகம் – வில்லங்கமான கதை

அனாதியின் அமெரிக்க நண்பனொருவன் சொன்ன  ஒரு கதை.

நான்கு அண்ணன் தம்பிகள். கடைக்குட்டி அம்மாச் செல்லம். கேட்டதெல்லாம் கிடைக்கும். மற்ற மூவரும் அப்பாவுடன் சிறிய வயதிலேயே வெளி நாட்டுக்கு வேலைக்குச் சென்று விட்டார்கள்.  அதன் காரணமாய் பொருளாதார வசதி உயர்ந்து ஊரிலே பெரிய பணக்காரனாய் வலம் வந்தான் கடைக்குட்டி.

செல்வம் கொட்டிக் கிடந்தது. ஆனால் கல்விச் செல்வத்தைக் கோட்டை விட்டான் கடைக்குட்டி. இவனது அப்பாவுக்கும், அண்ணன்மார்களுக்கும் இவன் நல்லமுறையில் படித்துக் பெரிய பதவிக்கு வர வேண்டுமென்ற ஆசை.

படிப்பு ஏறவே இல்லை. கடைக்குட்டிக்கு புதிதாய் நண்பனொருவன் கிடைத்தான். அவனுடன் சேர்ந்ததில் ஓரளவு நன்றாகப் படித்தான். ஆதலால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அதன் காரணமாய் இருவரும் அவரவர் வீடுகளுக்குள் சுதந்திரமாய் சென்று வரும் அளவிற்கு நட்புக் கொண்டனர்.

அரசுப் பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த சமயம். நண்பன் கடைகுட்டியைத் தேடி வீட்டுக்குச் சென்றான். அவனைக் காணவில்லை. ஆதலால் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து நண்பனின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்த வீடு பெரிய வீடு. அறைகள் பல இருந்தன.

அங்கிருந்த ஒரு ஹாலில் ஒதுக்குப் புறமாய்க் கிடந்த ஷோபாவில் தான் நண்பன் அமர்ந்திருந்தான். கடைக்குட்டி இவன் இருந்ததைக்  கவனிக்க வில்லை. வியர்த்து விறுவிறுத்துப் போய் அங்குமிங்கும் பார்த்தபடி திருட்டு முழி முழித்தபடி வந்தவனைப் பார்த்த நண்பனுக்கு ஏதோ விவகாரம் இருக்கிறது என்று அறிந்து ஷோபாவுக்குள் பதுங்கிக் கொண்டான்.

கடைக்குட்டியைத் தொடர்ந்து ஒரு பெண் வந்தாள். அவளைப் பார்த்த நண்பன் அதிர்ந்தான்.  ஏன் என்பதற்கு விளக்கம் இக்கதையின் கடைசியில் இருக்கிறது.

எதையுமே காசாக்கத் துடிக்கும் நண்பன் இதுதான் சமயமென்று உங்கள் இருவரையும் பார்த்து விட்டேன் என்று அவர்களுக்குத் தெரிவிப்பதற்காக அவர்கள் இருவரும் இவனைக் கடந்து செல்லுகையில் படக்கென்று ஷோபாவில் இருந்து எழுந்தான்.

இருவரும் இவனைப் பார்க்க, அவனோ இவர்களை குழப்பமாய் பார்க்க, கடைக்குட்டியின் நண்பன் நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

இருவருக்கும் பயம், பதைப்பு, குழப்பம், கோபம். கையும் களவுமாய் மாட்டிக் கொண்டார்கள்.  அவன் என்ன செய்வானோ என்று புரியாமல் நெருப்பில் சிக்கிக் கொண்ட புழுவைப் போன துடித்தான் கடைக்குட்டி. அவனை எப்படியாவது சமாளித்து இவ்விஷயத்தை மறைத்து விட வேண்டுமென்று எண்ணி இரண்டு மணி நேரம் கழித்து கடைக்குட்டி நண்பனைத் தேடி அவன் வீட்டுக்குச் செல்ல, அங்கு அவனுக்குக் கிடைத்த தகவல் ‘அவன் கடைக்குட்டியின் மாமாவைப் பார்க்கச் செல்வதாகக் கூறி சென்றிருக்கிறான் என்றும், அவன் வந்ததும் வீட்டுக்கு வரச் சொல்கிறோம் என்பது தான்’.

பயத்தில் நடு நடுங்கி விட்டான் கடைக்குட்டி. இவனெதுக்கு என் மாமாவைப் பார்க்கச் சென்றான். விஷயத்தை எல்லோரிடமும் சொல்லப் போகிறான் போலும் என்று பயத்தில் நடுங்கி வீட்டுக்குச் சென்று விட்டான்.

ஆனால் கடைக்குட்டியின் நண்பனோ மாமாவைப் பார்க்கச் செல்லவில்லை. அவன் வந்தால் அப்படிச் சொல்லுமாறுச் சொல்லி விட்டு, மேலும் சிக்கலை எப்படி பெரிதாக்கலாம் அதன் மூலம் எப்படி வருமானம் பார்க்கலாம் என்று யோசிக்கக் குளத்தாங்கரைக்குச் சென்று விட்டான். அவனுக்குள் திட்டங்கள் தயாராகின.

திட்டங்களைச் ஒவ்வொன்றாய்ச் செயல்படுத்தினான். கடைக்குட்டியைச் சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தான். கடைக்குட்டியின் உறவினர்களோடு பேசியவாறு  அடிக்கடி கடைக்குட்டியின் கண்களில் பட்டான். இப்படியே படு பயங்கரமான மனத் தொல்லைகளைத் தர ஆரம்பித்தான். கடைக்குட்டி குழம்பி வெறுத்துப் போய் இருந்தான். இரண்டு நாட்கள் சென்ற பிறகு, ஒரு நாள் கடைக்குட்டியைத் தேடிப் போன நண்பன், அவனிடம் நோட்ஸைக் கொடுத்தான். நோட்டு வாங்கனும்டா, அம்மா வீட்டுக்கு வரச்சொன்னாங்க என்று ஒரு கொக்கியை வீசினான். சரியாக மாட்டினான் கடைக்குட்டி. நோட்டு நானே வாங்கிக் தருகிறேனே என்றான். காரியம் பலிதமாக ஆரம்பித்து விட்டதை எண்ணி உள்ளுக்குள் சிரித்தான் நண்பன். நண்பனுக்குத் தேவையான பணம் அவ்வப்போது முகம் சுளிக்காமல் கொடுத்து வந்தான் கடைக்குட்டி. இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்.

ஒரு கட்டத்தில் மேற்படிப்புக்காக வேறு ஊர் சென்ற நண்பன் அத்துடன் கடைக்குட்டியை மறந்து விட்டான். அமெரிக்காவில் லட்சங்களில் சம்பளம் பெற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறான்.

அப்படி என்ன செய்து விட்டான் அந்தக் கடைக்குட்டி என்று யோசிக்கின்றீர்களா ? இவனது நல்வாழ்வுக்காக தங்களின் ஆசாபாசாங்களை மறந்து உழைத்த அண்ணனின் மனைவியோடு உல்லாசமாய் இருந்தான் கடைக்குட்டி. அந்த இளம் பெண்ணுக்கு கணவனிடமிருந்து கிடைக்கக் கூடிய இல்லற சுகமும் கிடைக்க வில்லை. ஆகையால் அவள் இவனுடன் சேர்ந்திருக்கிறாள். அவளுக்கு இதுவரையிலும் குழந்தையும் இல்லை. தவற்றிற்குக் காரணமான கடைக்குட்டி அவனது முப்பதாவது வயதிலேயே கேன்ஸர் நோயினால் இறந்து போய் விட்டான். அவன் ஏன் இறந்தான் ? எதற்காக இறந்தான்? அவன் செய்த காரியமா?  இல்லை விதியா ? யார் அறிவார் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: