உணவுப் பஞ்சம் வருமா ?

இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா என்றால் ஏற்படும் சூழ் நிலை வரக்கூடும் என்று கருதலாம். காரணம் கடுமையான உணவுப் பொருட்கள் விலையேற்றம்,  விவசாயப் பொருட்களின் உற்பத்தி குறைவு, கள்ளச் சந்தை.

அரசாங்கம் குறிப்பிடும் மொத்த விலைப் பட்டியலுக்கும் வியாபாரிகளின் விற்பனை விலைகளுக்குமிடையேயான மலையளவு ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஏனிந்த ஏற்றம் என்றால் – இடைத் தரகர்கள் நிர்ணயிக்கும் விலைதான் காரணமென்று தெரிய வருகிறது.

கள்ளச்சந்தை வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல், குடும்ப உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைய நீக்குதல், வங்கிக் கணக்குகளை முடக்குதல், 10 வருட கடுங்காவல் தண்டனை என்றெல்லாம் சட்டங்களை இயற்றி கள்ளச்சந்தையை ஒழித்தால் தான் விலை உயர்வினைக் கட்டுப் படுத்த முடியும்.

இந்திய அரசு விலைக் கட்டுப்பாட்டு மற்றும் இறக்குமதி தளர்வுக் கொள்கைகளை அறிவித்து உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரமான நிலை வந்தே விட்டது.

சமையல் எண்ணெய், பருப்பின் விலை உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சியும் ஏட்டிக் போட்டியாக இருப்பதான் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாய நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதைப் பற்றி பல பொருளாதார வல்லுனர்கள் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

விலை உயர்வால் ஏழை மக்கள் தங்களது உணவில் மேற்பொடி பொருட்களை பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் உடல் நலனில் சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயமும் அதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உருவாகும் நிலை ஏற்பட்டு விடும்.

மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியும் உயர்ந்து ஆக வேண்டுமென்பது கட்டாயம். அதற்கு விவசாயிகளுக்கு அரசின் சார்பாக உதவிகளையும்,  வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அதை விடுத்து தொழிலதிபர்களுக்கு சகாயம் செய்து வந்தால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளுக்கு அந்தந்த அரசாங்கமே பொறுப் பேற்க வேண்டும்.

அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது : உணவுப் பொருட்களின் மொத்த விலைக்கும் விற்பனை  விலைக்கும் இடையேயான வேறுபாட்டை களைய வேண்டும். அதாவது ஐந்து ரூபாய்க்கு உழவரால் விற்கப்படும் தக்காளி சந்தையில் 20 ரூபாய்க்கு விற்காமல் அதற்கு 7 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இல்லையென்றால் தொடர் விலையேற்றத்தில் மக்கள் சிக்கிக் கொள்ள நேரிடும். கள்ளச் சந்தை வியாபாரிகள் கொழுத்த லாபம் அடைந்து விடுவர். அரசுக்கு இவர்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும்.

உடனடி நடவடிக்கைகள் உணவுப் பஞ்சத்தில் இந்தியா மாட்டிக் கொண்டுவிடும். எலிக்கறியும்,  விவசாயப் பட்டினிகளும் ஏற்பட்டு விடக்கூடிய சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: