அடகு வைக்கலாமா ?

செப்ரெம்பர் 26, 2009

24.09.2009 ஹிந்துவில் நிருபமா சுப்ரமணியனின் ” Planned Farmland sale to Saudis gives Pakistan jitters ” என்ற கட்டுரை வாசிக்க கிடைத்தது. சவுதி அரேபியாவிற்கு 5 லட்சம் ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்காக பாகிஸ்தான் அரசு லீசு அல்லது விற்பனையோ செய்யவிருப்பதாகவும் அதை ஒட்டிய நிலச்சுவான்தாரர்களின் கருத்தும், கட்டுரையாளரின் கருத்தும் முன்வைக்கப்பட்டு இருந்தன. சவுதி அரேபியாவில் விவசாயம் செய்ய ஏற்ற நிலவமைப்பு இல்லாத காரணத்தால் உணவுப் பொருட்களை அந்த நாடு இறக்குமதி செய்து வருகிறது. இறக்குமதியை தவிர்க்கும் பொருட்டு விவசாய நிலத்தை வேறு நாடுகளில் இருந்து லீசுக்கோ அல்லது விலைக்கு வாங்கியோ விவசாயம் செய்து உணவுப் பொருள் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது. அந்த நாட்டைப் பொறுத்த வரை மேற்கண்ட முடிவு மிக நல்ல விஷயம்.

பாகிஸ்தான் அரசு மேற்படி கொள்கை முடிவிற்கு என்ன காரணத்தைச் சொல்கிறது என்று பார்த்தால், வெளி நாட்டு மூலதனம், மற்றும் பாலைவனத்தை விவசாயபூமியாக்கும் டெக்னாலஜி போன்றவையும், எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்கிறது. வேலைவாய்ப்பு கிடைத்தால் மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். பாலைவனத்தை விவசாய பூமியாக்கும் டெக்னாலஜியை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தலாம் மற்றும் இன்னபிற சலுகைகளும் கிடைக்கும். நாட்டிற்கு வருமானமும் கிடைக்கும். மேலும் சவுதி அரேபியாவும் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாகவும் இருக்கும் என்றும் சொல்கிறார் அந்த நாட்டின் மந்திரி ஒருவர்.

சவுதி அரேபியாவிற்கு நிலத்தை விற்கவோ அல்லது குத்தைக்கு விடவோ செய்வது என்பது மேலோட்டமான விஷயம். அதையொட்டிய இன்ன பிற விஷயங்களுக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விற்பனை வரி, ஏற்றுமதி வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அந்தப் பகுதியை முழு வரி விலக்கு பெற்ற பகுதியாய் அறிவிக்க வேண்டும். இலவச மின்சாரம் மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்க வேண்டும். அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலையாட்களை அமர்த்தி விவசாய வேலைகளைச் செய்து பொருட்களை உற்பத்தி செய்து எந்தவித வரியும் இன்றி மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை தனது நாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். குறைந்த மூலதனம். அதிக வருமானம் என்பதற்குத்தான் மற்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் வேற்று நாடுகளில் தொழில் செய்ய வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உன்மை.

சவுதி அரேபியாவிற்கு தேவையான விவசாயப் பொருட்களை தங்களது விவசாயிகளின் மூலம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தாலென்ன என்று கேட்டால் அதற்கு அந்த நாட்டின் மந்திரி என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை.

இவ்விடத்தில் உள்ளூரில் தொழில் ஆரம்பிக்க அரசு வைத்திருக்கும் சில நடைமுறைகளை உங்களுக்கு நினைவுக்கு கொண்டு வருகிறேன். பாகிஸ்தானில் இருக்கும் ஒருவர் புதிய தொழிலை தொடங்கும் பொருட்டு இயந்திரம் இறக்குமதி செய்ய வேண்டுமென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அவர் கட்டாயமாக இறக்குமதி வரி கட்டிதான் ஆகவேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசுக்கு வரியையும் செலுத்தியே ஆக வேண்டும். தன் நாட்டின் பிரஜைக்கு வழங்காத சலுகையை ஏன் வெளி நாட்டு முதலீட்டாளருக்கு வழங்க வேண்டுமென்று கேட்டால் வெளி நாடுகளில் இருந்து மூலதனம் தன் நாட்டிற்கு வருகிறதாம். அதனால் அன்னியச் செலவாணி லாபம் கூடுதலாகும் என்று சொல்லுவார்கள். அதற்குப் பதிலாக உள்ளூர் தொழிலுற்பத்தியை ஊக்குவித்தால் என்னவென்று கேட்டால் அரசிடம் பதிலிருக்காது என்றே தோன்றுகிறது.

மேற்படி பாகிஸ்தானின் கொள்கைக்கு எதிர்கருத்துகளும் இல்லாமல் இல்லை. மற்ற நாட்டினருக்கு நிலத்தை விற்பது என்பது அந்த நாட்டிற்கு தங்களது நாட்டை அடகு வைப்பது போன்றதாகும் என்று சிலர் சொல்கிறார்கள். மேலும் தண்ணீர்ப்பற்றாக்குறை இருக்கும் போது மற்ற நாட்டினரை விவசாயம் செய்ய அனுமதிப்பது ஏற்கனவே இங்கிருக்கும் விவசாயத்தை அழித்துவிடும் என்றும், அரசு உள்ளூர் விவசாய உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகளை செய்யலாம் அல்லவா என்கிறார்கள். மேலும் இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அமுல் போன்ற கோவாப்பரேட்டிவ் முறையில் விவசாயத்தை ஊக்குவித்து உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவும் அடையலாமென்றும் சொல்கிறார்கள்.

மேற்படி விஷயத்தை படித்தீர்கள் அல்லவா. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவிற்கு வருவோம்.

இந்தியாவில் ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் என்ற பகுதிகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கு செயல்படும் வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கு இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, சலுகை விலையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் இன்னபிற சலுகைகளையும் வழங்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அரசே பொதுமக்களின் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அன்னிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரமாகும். தமிழ் நாட்டில் பெருந்துறை சிப்காட் விரிவாக்கத்திட்டத்திற்கு 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வானம் பார்த்த பூமி, விவசாய பூமியாக இருக்க முடியாது என்பதால் சிப்காட்டிற்காக பொது மக்களின் நிலத்தை கையகப் படுத்துகிறோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த ஊர் மக்களோ எங்கள் பூமியை குழைந்தையை வளர்ப்பது போல வளர்த்து வருகிறோம் என்றும் தமிழக அரசு எங்களிடமிருந்து பூமியைப் பிடுங்கப் பார்க்கிறது என்றும், ஆயிரம் குடும்பங்களுக்கும் மேலாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றும் சொல்லிப் போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் எங்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி மற்ற கம்பெனிகளுக்கு அதிக விலையில் விற்க முயலுகிறார்கள். ரியல் எஸ்டேட் வேலையை அரசே செய்வது அக்கிரமம் என்றும் சொல்கிறார்கள். ( செய்தி ஆதாரம் : ஒரு வாரப்பத்திரிக்கை)

உள்ளூர் உற்பத்ததியை உயர்த்த தொழிலுக்கு குறைந்த வட்டியில் கடன், தொழில் நடைபெற நல்ல சந்தைகள், வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல் போன்ற தொழிலூக்கிகளைச் செயல்படுத்தினால் வேற்று நாட்டினரின் மூலதனம் தேவைப்படுமா ? நிச்சயம் தேவை இருக்காது என்றே நம்புகிறேன்.

பாகிஸ்தான் அரசு நிலத்தை மற்ற நாட்டினருக்கு வழங்குவதை நேரடி குத்தகை அல்லது விற்பனை என்று சொல்கிறது. இந்திய அரசு ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் என்று சொல்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

இவ்விடத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பழங்கால இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயேக் கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் இந்திய நிலத்தை விற்கப்பட்டது என்கிறது வரலாறு. அதைத் தொடர்ந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இன்றைய சுதந்திர இந்தியா உருவாக கோடிக்கணக்கானவர்கள் தங்களின் உயிரை இழந்து பெற்றிருக்கிறார்கள் என்பதும் வரலாறு. அதைப் போன்றதொரு சூழ் நிலை வந்து விடுமோ என்ற பயம் ஏற்படுவது வியப்பில்லை. ஆட்சியாளர்கள் ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் பற்றிய முழு விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். வெளி நாட்டுக் கம்பெனிகளிடம் வேலை கிடைக்கிறது என்பதற்காக நாட்டை அடகு வைக்கலாமா ?

நீண்ட நாட்களுக்குப் பிறகு
அனாதி


இந்து என்ற மதமே இல்லை!

செப்ரெம்பர் 25, 2009

திரு பழ கருப்பையா எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர். அவரின் நேர்காணல் ஒன்றினைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினை பற்றிய நேர்காணல் அது. தீட்சிதர்களுக்கு ஆதரவாய் பேச வந்த வக்கீலுடன் மிக உக்கிரமான வாதத்தை முன் வைத்தார். பழ.கவின் கேள்விகளுக்கு வக்கீல் மென்று முழுங்கிக் கொண்டிருந்தார்.

நான் இந்து மதத்தைச் சார்ந்தவன் அல்ல என்று சத்தமிட்டுக் கூறினார் பழ கருப்பையா.

மிகுந்த ஆச்சர்யம் தந்தது எனக்கு. சில அப்ளிகேஷன்களில் உங்கள் மதம் என்னவென்று கேட்கப்பட்டிருந்த பகுதிகளில் இந்து என்றே எழுதி வந்திருக்கிறேன்.

நான் தமிழன், என் மதம் சைவம் அல்லது வைணவம் என்றார் தொடர்ந்து.

விவேகானந்தர் வேறுபட்டுக்கிடந்த இந்தியர்களை ஒன்று சேர்ப்பதற்காக இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும் சொன்னார்.

திரு கண்ணதாசன் அவர்களாலும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புகழ் பெற்ற நூலும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நூலில் திருவள்ளுவரும் ஒரு இந்து என்று எழுதியிருக்கிறார். விவேகானந்தருக்கும், கண்ணதாசனுக்கு நோக்கம் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமென்று கருத இடமிருக்கிறது. திரு சோ அவர்களும் ஹிந்து ஹிந்து என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்.

வேறுபட்ட சம்பிரதாயங்கள் கொண்ட இந்தியர்களை ஒன்று சேர்க்கும் பொருட்டு இந்து மதம் என்று அடையாளப்படுத்துவது நல்ல நோக்கம்தான் என்றாலும், இந்து மதத்தை முன்னிறுத்தி வரும் சில அமைப்புகளுக்கு தலைவர்களாக இருப்போரின் ஜாதியைப் பார்க்கும் போது புலப்படாத சில சந்தேகங்களை உருவாக்குகிறது.

அதற்கு உதாரணமாய் கீழ்க்கண்ட சம்பவத்தை படியுங்கள்.

தமிழகத்தில் இந்துக்கள் அமைப்பினைச் சார்ந்த ஒரு தலைவரைச் சந்தித்தபோது அவர் தன்னைக் கட்டித் தழுவியதாகவும், அப்போது தன் முதுகில் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததாகவும் சொன்ன என் நண்பர் அடுத்து சொன்ன வார்த்தை “ அவர் என் முதுகில் வேறு ஏதாவது அடையாளச் சின்னத்தை அணிந்திருக்கிறேனா என்று பார்ப்பதற்காக என் முதுகை தடவினார்” என்றும் சொன்னார்.

மேலும் ஒரு கேள்வியை கேட்டார் பழ.க.

இந்தியாவெங்கும் புகழ் பெற்ற காசி விஸ்வ நாதர் கோவிலில் சாமி சிலையைத் தொட்டு வணங்கலாம். ஆனால் அதே சாமியை சிதம்பரத்தில் தொட்டு வணங்கக்கூடாது என்று சொல்கிறீர்களே அது ஏன் என்று கேட்டார். வக்கீல் சார் ஏதேதோ சொன்னார்.

உண்மையும், பொய்யும் சந்திக்கும் போது உண்மையின் வெளிப்பாடு ஆக்ரோஷமாய் இருக்கும் என்று சொல்லுவார்கள். அதை அந்த நேர்காணலில் பார்க்க நேர்ந்தது.


சின்ன வீடு – சிலிர்ப்பூட்டும் படம் !

செப்ரெம்பர் 22, 2009

குதிரையும் பெண்ணும் என்ற பதிவில் காட்டப்பட்ட பாடல் அவ்வளவு தெளிவாத் தெரியவில்லை என்ற அனாதியின் வருத்தத்தை நீண்ட நேரம் இணையத்தில் துளாவி நீக்கி விட்டேன். ரசிகப் பெருமக்களும் கண்டு களிக்கவும்.

என்ன ஒரு நடனம் ? இடுப்பு சும்மா துடி துடின்னு துடிக்குது… ( அந்தப் பெண்களுக்குப்பா!). பாடல் வரிகளும் எஸ்பி சைலஜா, ஜானகி, எஸ்பிபியின் குரல், நடன அசைவு எல்லாம் பின்னிப் பெடலெடுக்கிறது. நாலு பொண்ணுங்க, ஒரு ஆண்.. க்ரூப் செக்ஸ் கலவி போல என்னா ஒரு ரசனை பாக்கியராஜுக்கு…..

அந்தப் பொண்ணுங்களும் என்னாமா இடுப்பை ஆட்டுது, வளையுது, நெளியுது அட அடா… இப்பவும் தான் படமெடுக்கிறானுவ கழிச்சல்ல போறவனுங்க….

வசனத்தை பாருங்க !

மதன கோபால், புதுசா கல்யாண முடிச்ச உன் பொண்டாட்டிய தொட்டுக்கூட பார்க்காம தள்ளி வச்சுட்டு ராத்திரி நேரததை இப்படி அனாவசியமா இப்படி வேஸ்ட் பன்னுறியே இது உனக்குத் தேவையா ? மன்மதனின் பேச்சு.

அத்தினி, சித்தினி, பத்மினி , சங்கிமி பெண்களை கண் குளிரப் பார்த்து குஞ்சாமணியின் தோழன் மணி குளிர் ஜூரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான். குளிர் ஜூரம் தீர தண்ணீரில்லா குளத்தில் குளிக்க வேண்டுமென்று அடம்பிடிக்கிறான் மணி.. என்ன செய்யலாம் ?

குஞ்சாமணி குலசேகரன்…


கமல்ஹாசனை வீழ்த்தத் துடிக்கும் தமிழ் சமூகம் !

செப்ரெம்பர் 22, 2009

மைக் டிவி என்னும் விஜய் டிவியில் கமலைப் பற்றிய ”கமலும் தமிழும்” என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளாராக வரக்கூடிய அறிவுத் திறன் கொண்ட கோபினாத் தனது அறிவுத் திறனையும், பேச்சாற்றலையும் ஜால்ரா தட்ட உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து சில எழுத்தாளர்களும், சில இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு கமலை வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். இவர்களின் கமல் பற்றிய பேச்சு அந்தக் கலைஞனை முற்றிலுமாக அழித்து ஒழித்து விடுமென்பது தெரியாமல் போய்விட்டதா இல்லை லட்சக்கணக்கான ரூபாய்க் கட்டுக்களுக்காக தனக்குத் தெரிந்த வித்தை மூலம் வார்த்தை ஜாலங்களை அவிழ்த்து விட்டார்களா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

கமல் சமூகக் கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து தனக்கென்று ஒரு வழியை உருவாக்கி அதனோடு வாழ்வை நடத்துபவர். எவருக்கும், எந்தக் கோட்பாட்டுக்கும் கட்டுப்படாதவர். சினிமா உலகில் மனிதத் தன்மையோடு இருக்கும், வாழ்க்கையில் நடிக்காமல் உண்மையாக வாழ்ந்து வரும் நடிகன் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்.

ஏன் இப்படிச் சொல்கிறேன் ? கமல்ஹாசனின் சலங்கை ஒலி பார்த்திருக்கின்றீர்களா ? அப்படத்தில் கமலுக்கான எந்தவித காட்சியமைப்பும் இருக்காது. நடனக் கலைஞனின் வாழ்க்கை மட்டுமே பதியப்பட்டிருக்கும். படத்தோடு மனது ஒன்றி கலைஞனின் வாழ்க்கையோடு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனின் மனதும் பயணப்படும். கமல் அப்படத்தில் மறைந்து இருப்பார். சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் ரசிகனின் உள்ளதோடும், உணர்வோடும் உறவாடிய காரணத்தால் மாபெரும் வெற்றியடைந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதைப் போன்று ரசிகனின் மனதோடு இசைந்த, இணைந்த, உறவாடிய கமலின் படத்தை மறுமுறை பார்த்திருக்கின்றீர்களா? கண்டிப்பாக இருக்கவே இருக்காது.

கமலைப் புகழ்ந்து பேசியே அவரின் நடிப்புத் திறனை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். ஹீரோயிசப் படங்களை மட்டுமே அவர் தந்து கொண்டிருக்கிறார். அதுவே உண்மையென்றும் புரிந்து கொண்டிருப்பது போல அவரின் சமீபத்திய படங்களும் இருக்கின்றன. ஹீரோயிசப் படங்களில் நடிப்புக்கு எங்கே வேலை இருக்கிறது ? கமல் புகழ்ச்சி என்ற புனையப்பட்ட மாய வலைகளிலிருந்து தப்பிக்க வேண்டும். இனிமேலாவது அவர் நடிக்க வேண்டுமென்பதே எனது ஆவல்.

புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் நடித்த நடிகனை தனது வருமானத்திற்காக கார்ப்பொரேட் பத்திரிக்கைகளும், மீடியாக்களும் சூப்பர் ஸ்டார் என்ற மாய அந்தஸ்தைக் உருவாக்கி ரஜினி என்ற கலைஞன் இருந்த இடம் தெரியாமல், அவரை உருத்தெரியாமல் அழித்து விட்டன.

கமல் தப்பிப்பாரா ?


குதிரையும் பெண்ணும் !

செப்ரெம்பர் 19, 2009

சின்ன வீடு படத்தில் வரும் பாடலொன்றில் அத்தினி, சித்தினி என்று பெண்களை வகைப்படுத்தி இருப்பார்கள். அது கர்ண பரம்பரைக் கதை. அது இப்படி இருந்தால் இது என்றும், இது அப்படி இருந்தால் அதுவென்றும் ஏதேதோ புரியாத மொழிகளில் பெண்களை வகைப்படுத்தி இருப்பார்கள். அதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு தான் இந்தச் செய்தி.

கீழே படிக்கும் முன்பு இந்தப் பாடலை உச்சய்தாயில் வைத்துக் கேட்டு விட்டு தொடருங்கள். அப்போது தான் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

பெண்களை குதிரை மாதிரி இருக்கிறாள் என்று சொல்லுவார்கள்.

உடனே நெதர்லாந்தில் எடுக்கும் அந்த மாதிரிப் படங்களை பற்றியெல்லாம் நினைக்கக் கூடாது. இது ரசனை சம்பந்தப்பட்ட பதிவு. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

எப்படி குதிரையையும் பெண்ணையும் ஒப்பிடுகிறார்கள் என்று சிலருக்கு குழப்பமாய் இருக்கும். அது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குதிரை நடந்து போகும் போது பார்த்திருக்கின்றீர்களா ? பார்க்கவில்லை என்றால் இனிமேல் பாருங்கள். அதன் பின்னர் ஹி..ஹி… பாருங்கள்… சும்மா உதறும்…

நாங்க எங்கே போயி அந்த மாதிரிக் குதிரைகளைப் பாக்கிறதுன்னு நினைக்கிறீங்களா ? அதுக்கும் ஒரு வழி இருக்கு.

சமீபத்தில் பாரசூட் ஜாஸ்மின் தேங்காய் எண்ணெய் விளம்பரத்தை டிவியில் பார்த்திருப்பீர்கள். அந்த விளம்பரத்தில் வரும் பெண் தான் குதிரை மாதிரி இருக்கும் பெண். பார்க்க வில்லை என்றால் பார்த்து விட்டு பெருமூச்சு மூச்சாய் விட்டுத் தள்ளுங்கள்.

குதிரைக்கும் பெண்ணுக்கும் முடிச்சு போட்டு யோசித்த மஹாத்மாவின் ரசனை இருக்கிறதே அட அட… என்ன ஒரு ரசனை…

இனிமேல் சும்மா பார்த்தோம் வந்தோம்னு இருக்காம அது குதிரை மாதிரி இருக்கா, உயர்ந்த ஜாதியா, இல்லை மட்டக்குதிரையா, சாதா குதிரையான்னு பார்த்து வையுங்க.

பீச்சுப் பக்கமா போயி உக்காந்தீங்கன்னா ஏகப்பட்ட குதிரைகளை பார்க்கலாம். ரசிக்கலாம். கிட்டே போனாத்தானே உதைக்கும். அதனால டிஸ்டன்சு கீப்பப் (ஹீ..ஹீ…) பன்னுங்க

வயிதெரிச்சல் சம்பவம் : மேற்படி விஷயத்தை அனாதியிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். பாவிப்பயல் செய்த காரியம் வயிற்றில் எரிமலையையே உருவாக்கி விட்டது. அது என்னவென்று இனிமேல் வரும் பதிவுகளில் ரகசியக் குறிப்பாய் எழுதி விடுவேன்.

குஞ்சாமணி


ஹிந்து மஹா சமுத்திரமும் கேஸ் பிரச்சினையும்

செப்ரெம்பர் 18, 2009

சில சுவையான சம்பவங்களை குஞ்சாமணியாகிய நான் இங்கு உங்களிடத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். சுவாரசியமாய் இருக்குமென்றே நினைக்கிறேன்.

துக்ளக் படித்துக் கொண்டிருந்த போது சோ எழுதும் ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6 விரைவில் துக்ளக்கில் வெளிவரும் என்ற அறிவிப்பை படித்தேன். அது,

இத்தொடரைப் படிப்பவர்களுக்கு,சகல செளபாக்கியங்களையும் பெற்று, அவர்கள் நினைத்த காரியம் கை கூடும்; பகைவர்கள் பயந்து ஓடுவார்கள்; வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்; வாழ்க்கையில் மேன்மை, செல்வம், புகழ், ஆரோக்கியம் எல்லாம் கூடும்…

என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும்

இந்தத் தொடரைப் படித்தால், ஹிந்து மதம் தொடர்பான பல விஷயங்களை, எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்று சொல்வதற்கு, வாய்ப்புக் கிட்டலாம் என்று நம்புவதற்கு, இடம் இருக்கலாம் என்று, யாருக்காவது தோன்றினால் – அது போதும்.

மேற்படி சகல சம்பத்துகளும் தொடரை எழுதும் எழுத்தாளர் வீட்டில் தான் நடக்குமென்பதும், படிப்பவர் தலையில் ஒரு முடி கூடி மிஞ்சாது என்பதும் உங்களுக்கு நான் சொல்லியா தெரியப்போகிறது.

”அருள் வாக்கினால் அழிகிறவர்கள்” – என்ற துர்வாசரின் கட்டுரையில் கடவுளுக்குப் புரோக்கராய் மாறி குறி சொல்லும் குறி சொல்லிகளின் வியாபார தந்திரத்தையும் அவர்களின் குரூர செயல்களையும் விவரிக்கப்படுகிறது. அதுவரையிலும் துக்ளக் படிக்கும் போது ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் பாருங்கள் அடுத்த பக்கத்தில் திருமண பரிகார ஸ்தலம் என்ற கோவிலுக்கு திருப்பணி வேண்டுகோள் குறித்த விளம்பரமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்தக் கோவிலில் இருக்கும் பரிகார ஸ்தலத்தை சுற்றினால் கண்டிப்பாக கல்யாணம் சீக்கிரம் நடக்குமென்று அறிவித்திருந்தார்கள்.

குறி சொல்லிகள் சொல்வது பொய் என்றால் மரத்தைச் சுற்றினால் கல்யாணம் நடக்குமென்பதும் பொய்யாகத்தானே இருக்க வேண்டும். கோவிலில் சாமி கும்பிட்டால் துன்பமெல்லாம் விலகி ஓடுமென்று சொல்லி புரியாத மொழியில் அர்ச்சிப்பது கூட மக்களை ஏமாற்றும் குரூரமான செயல்தானே. துர்வாசர் அப்படி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பெரிய பெரிய (ஆ) சாமிகளைப் பற்றியும் எழுதுவாரா ?

முன்பக்கத்தில் குறி சொல்லிகளை குறை சொல்லும் ஒரு கட்டுரை. அடுத்த பக்கத்தில் மேற்படி திருப்பணி விளம்பரம் என்று ஏட்டிக்குப் போட்டியாய் இருக்கிறது.

இந்தியாவில் கேஸ் பிரச்சினை பெரும் போராட்டமாய் வெடித்திருக்கிறது. அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே போரே நடந்து கொண்டிருக்கிறது. இடையினில் நடக்கும் அரசியலைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இருவரும் சண்டை போட்டுக்கொள்வது பல குடும்பங்களின் ஜீவாதாரத்துக்கு வேட்டு வைத்துவிடும். அந்த கேஸ் பிரச்சினையை எளிதில் தீர்த்து வைக்கும் முறையை கீழே இருக்கும் படம் விளக்குகிறது.

GasGrill


சாமியார்களின் பார்வையில் தெரிவது காதலா ? காமமா ?

செப்ரெம்பர் 11, 2009

பொதுவாக சாமியார்கள் என்றாலே நமக்கு அவர்களின் கிளுகிளுப்பான சமாச்சாரம் தான் பளிச்சிடும். அதற்கு ஆதாரமாய் இந்தப் படத்தை சற்றே உற்றுப் பார்த்தால் தெரியும். மேற்படி சாமியார்கள் பார்ப்பது அந்தப் பெண்ணின் அழகிய கூந்தலையா ? இல்லை அழகிய அவளது முகத்தை அல்லது … ஹி… ஹி……

DistractedMonks


%d bloggers like this: