திருட்டு விசிடி டிவிடி ரெய்டு இனிமேல்…..????

மூன்று சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கெமுகவின் சார்பு நிறுவனங்களாதலால் கேவல் துறை திருட்டு சிடி சட்டத்தை தூசி தட்டி ஜரூராகக் கைதுகளை நடத்த ஆரம்பித்து விடும்

தமிழகத்தில் இனிமேல் சினிமா தயாரிப்பாளர்கள் நிம்மதியாய் தொழில் செய்யலாம். திருட்டு விசிடி பற்றிய பயமே வேண்டாம். ஒரு திரைப்படம் வெளி வந்து இருபது நாட்களுக்கு திருட்டு விசிடி விற்க முடியாமல் தடுத்து நிறுத்தி விட்டால் போட்ட காசு கைக்கு வந்து விடும். பயிருக்குப் பாயும் தண்ணீர் அங்கே புல்லுக்கும் பாயும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல மேற்படி பட நிறுவனங்களின் சினிமா ஓட வேண்டுமென்பதால் காவல்துறையினர் பட்டையக் கிளப்புவர். சிறியத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அதி முக்கியம்.

அதாவது மேற்படி நிறுவனங்கள் தங்களது சினிமாவை வெளியிடும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குப் பின்பாகவோ தங்களது திரைப்படத்தை வெளியிட்டு திருட்டு சிடிப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.

மேற்படி நிறுவனங்களின் உதவியால் தமிழ் சினிமாவுலகம் திருட்டு சிடி பிரச்சினையிலிருந்து சற்றே தப்பித்து அதிக சினிமாக்களை தயாரிக்க நேரிடும்.

ஆகையால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்  என்பதில் மறுப்பேதும் இருக்க முடியாது.

2 Responses to திருட்டு விசிடி டிவிடி ரெய்டு இனிமேல்…..????

 1. Jawahar சொல்கிறார்:

  இல்லை. திருட்டு விசிடி என்பது தடுக்க முடியாத ஒரு விஞ்ஞான அவலம். அதைத் தடுக்க ஒரே வழி, தியேட்டரில் பார்த்தால் மட்டுமே நன்றாகப் பார்க்கக் கூடிய/கேட்கக் கூடிய வகையில் படங்களை எடுப்பது. ஒரு உடனடி யுக்தி எல்லாமே 70 mm ஆக எடுப்பது. அதைக் காமிரா பிரிண்ட் செய்வது ரொம்பக் கடினம். இன்னொன்று தயாரிப்பாளரே திருட்டு விசிடியும் செய்து மிகக் குறைந்த விலைக்கு விற்பது. (அப்படி தயாரித்த விசிடிக்களில் நிறைய்ய ஆடியோ,வீடியோ தொந்தரவுகளை வைப்பது…

  http://kgjawarlal.wordpress.com

  • அனாதி சொல்கிறார்:

   ஜவஹர் திருட்டு விசிடியை தடுக்க முடியாது என்று யார் உங்களிடம் சொன்னது ? விஞ்ஞான அவலமும் இல்லை ஒன்றும் இல்லை. டெக்னாலஜி வளர்ந்து வந்திருக்கும் இந்தக் காலத்தில் முடியாது என்ற ஒன்றும் இருக்கிறதா என்ன ?

   அதிகாரவர்க்கத்திற்கு நன்மை கிடைப்பதால் திருட்டு விசிடியை தடுக்காமல் விட்டு வைத்திருக்கின்றனர் என்பதே உண்மை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: