தொடையில் பச்சை

அவள் பெயர் வெண்ணிலா. பெயருக்கேற்ற அழகு. நல்ல உயரம். மஞ்சள் கலரில் விடிகாலையில் உணரக்கூடிய குளிர் காற்றாய் தோற்றம் கொண்டவள். எத்தனையோ வாலிபர்கள் வலை வீசினார்கள். எந்த வலையிலும் சிக்கவில்லை.

பலரும் மதிக்கக் கூடிய குடும்பம், பொருளாதார வசதி, மற்ற பெண்களால் விரும்படும் ஆணழகனை அவள் எதிர் பார்த்தாள்.

கிடைத்தான். ஊரிலே பெரிய ஹோட்டல் முதலாளியின் மகன். அழகன். வசதி மற்றும் இன்னபிற குவாலிபிகேஷனுடன் இருந்தான். அவனும் இவளைப் பார்த்தான். காதல் முளைவிட்டது.

அவன் மீது இவளுக்கு கொலை வெறிக் காதல். காதலில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே தொடையில் அவன் பெயரைப் பச்சைக் குத்திக் கொண்டாள். அந்த அளவுக்கு அவன் மேல் தீராத மோகமும், காதல் வெறியும் கொண்டிருந்தாள்.

இருவரின் காதல் பாண்டிச்சேரி ஹோட்டலில் அடிக்கடி முற்றுகையிட்டது. விடாமல் அவனும் அவளும் ஹோட்டல் அறையில் காதல் செய்து கொண்டிருந்தார்கள். பழகப் பழக பிராண்டு புளித்துப் போவது போல வெண்ணிலாவும் புளித்துப் போக, காதல் முடிவுக்கு வந்தது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் இழப்பு என்னவோ வெண்ணிலாவிற்குத்தான். அழுதாள். மன்றாடினாள். என்னென்னவோ செய்து பார்த்தால் அவனிடம் ஒன்றும் பலிக்கவில்லை. கைவிட்டு விட்டான்.

அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. தொடையில் பெயர் பச்சை குத்தப்பட்டிருக்கும் விபரம் தெரிந்து அவளின் அம்மா எரிமலையானாள். வேறு வழியின்றி அவள் அம்மாவின் ஆலோசனைப்படி தொடையில் பச்சை குத்தியிருந்த முன்னாள் காதலனின் பெயர் மீது மீன் படம் வரையப்பட்டது. வெண்ணிலாவிற்கும் திருமணம் நடந்தேறியது. முதலிரவில் அது என்ன என்று கேட்ட கணவனிடம் தீப்புண் பட்டு விட்டது அசிங்கமாய் இருந்ததால் பச்சை குத்தியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாள் வெண்ணிலா.

மனைவியின் கற்புமீதான சந்தேக விதை அன்று ஊன்றப்பட்டு விட்டது. ஒரு அழகிய ஆண் குழந்தை. கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்தே போகவில்லை. அம்மா வீட்டிற்கு வருகிறேன் பேர்வழி என்று அவள் வேலை தேடி அனாதியைச் சந்தித்து இருக்கிறாள். அவன் வேறொரு கம்பெனிக்கு ரெகமென்ட் செய்து விட்டான். எப்போதாவது அவளைச் சந்திப்பான். அப்படி ஒரு நாள் அவளைச் சந்திக்கும் போது மங்கள கரமாக அழகாய் மல்லிகைப் பூடி சூடி, வெகு நாசூக்காய் புடவை உடுத்தி இருந்தாள்.

அவளைப் பார்த்த சந்தோசத்தில் அனாதி அவள் கணவர் எப்ப்டி இருக்கிறார் என்றும் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று விசாரித்தான்.

கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவள் சொன்னது ”கணவன் தற்கொலை செய்து கொண்டார்”.

அதிர்ந்தான் அனாதி.

அவளின் தோற்றத்தை நோக்கினான். பரவாயில்லை சமூத்தின் பேரில் வெண்ணிலாவிற்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்று தெரிந்து கொண்டான். அவனுக்குள் உள்ளூர சந்தோஷம் ஏற்பட்ட்து.

அவனது நண்பர்கள் வெண்ணிலாவின் நடவடிக்கைகளைப் பற்றி விமரிசித்துக் கொண்டிருந்தார்கள். யாருடனோ தொடர்பு வைத்திருக்கிறாள் என்றும் பழைய காதலனை அடிக்கடிச் சந்திக்கிறாள் என்றும் கேள்விப்பட்டான். ஆனால் வெண்ணிலாவின் மீது கோபமே வரவில்லை என்று சொன்னான் அனாதி.

காதலிக்கும் போது அக்காதல் கைகூடுமா என்று முதலில் பார்க்க வேண்டுமென்றும் இல்லையென்றால் அது நல்ல காதலாகவே இருக்க முடியாது என்பார் கவிஞர் கண்ணதாசன். ஆகவே காதலிக்கும் பெண்களே, ஆண்களே காதலின் வேகத்தில் பச்சை குத்துவது, நிறைவேறாத காதல் செய்வதை விட்டு விடுங்கள். உங்களுக்கு காதலிக்க லைசென்சோடு உங்கள் மாமா மகளோ அல்லது அத்தை மகளோ இருக்கையில் ஏன் தெருவில் இறங்கி வீணாய்ப் போக வேண்டும். முதலில் அவளையோ அவனையோ காதலித்துப் பாருங்கள். வசதிப்பட்டால் கல்யாணம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் மறுபடியும் காதல் செய்யலாம். அனுபவம் கற்றுக் கொடுக்கும் அல்லவா.

சீவக சிந்தாமணியில் உயர்ந்த பெண்களின் குணமாக எழுதப்பட்ட பாடல்,

சாமெனில் சாதல் நோதல்
தன்னவன் தண்ந்த காலை
பூமனும் புனைதல் இன்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை என்றும் சொல்லார்
கனவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்
சேர்ந்தவன் செல்ல்ல், தீர்ப்பார்

அதே சீவக சிந்தாமணியில் தாழ்ந்த பெண்களின் குணமாக எழுதப்பட்ட பாடல்,

பெண்ணெனப் படுவ கேண்மோ
பீடில பிறப்பு நோக்கா
உள்நிறை உடைய வல்ல
ஓராயிரம் மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கை யிட்டால்
இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெக்குள் றெரியும் றாற்போல்
மெலிந்துபின் நிற்கு மன்றே !

தற்போதைய உலக நடப்பில் புராணங்களும், இதிகாசங்களும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் ஒத்து வருமா என்று யோசித்தால் விடை என்னவோ குழப்பமானதாய் தெரிகிறது.

குறிப்பு: அதெப்படி வேலை கேட்டு வந்த உடனேயே ரெகமெண்ட் செய்து விடுவார்களா? அனாதி எப்படி வெண்ணிலாவிற்கு ரெகமெண்ட் செய்தான் என்று புரியவில்லை. அதுபற்றி கேட்டபோது நமட்டுச் சிரிப்பு சிரித்தான் அனாதி.

7 Responses to தொடையில் பச்சை

 1. MS சொல்கிறார்:

  kathaiyalla nijama? illa nijamalla kathaiya?

 2. Vels சொல்கிறார்:

  பின்னூட்டம் இல்லன்னு கவலைப்படாதீங்க அனாதி. உங்க பேஜ் – க்கு நிறைய ஹிட்ஸ் இருக்கு. நான் ரெகுலரா உங்க பேஜ் பார்ப்பேன்.

 3. arun சொல்கிறார்:

  அனாதி …சீவக சிந்தாமணி மேற்கோளை விளக்கத்தோடு போட்டிருந்தால் நல்லாயிருக்கும்

  அருண்

  • அனாதி சொல்கிறார்:

   அருண், விரைவில் இரு பாடல்களின் விளக்கத்தை எழுதுகிறேன். மேலும் ஆண்களுக்கு உபயோகப்படட்டும் என்ற நோக்கில் பெண்களைப் பார்த்த உடனே இது வண்டியில் இணைந்து இழுக்குமா இழுக்காதா (அதாவது வாழ்க்கை என்னும் வண்டியில்) என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் எழுத விருக்கிறேன். எண்ணற்ற புத்தகங்களை படித்து வருகிறேன். ஜூஸ் விரைவில் …. பொதுவாக இந்த பிளாக்கை வாசிப்பவர்கள் பின்னூட்டம் ஒன்றும் எழுதுவதில்லை. தொடர்ந்து சிலரின் பின்னூட்டம் எனக்கு சற்றே ஆறுதலைத் தருகிறது. நம்மைப் போலவே இருக்கும் சிலரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் உண்டாகிறது.

   ஓவரா கிறுக்கி விட்டேன். சற்றே யாராவது பின்னூட்டம் போட்டால் மண்டையில் ஏறிக் கொள்கிறது. அரசியல்வியாதியை நினைத்துப் பாருங்கள். அவனுக்கு எந்தளவுக்கு ஏறியிருக்கும்…ஹி..ஹி… மண்டைக் கனம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: