விமான அழகியும் விஜயவாடா தொழிலதிபரும்

அனுமதியின்றித் திறக்கப்பட்ட அந்தரங்கக் கதவுகள் தொடர் –

விமான அழகியும் விஜயவாடா தொழிலதிபரும்

விஜயவாடாவில் மிகப் பெரிய ஏற்றுமதியாளர் ராகவ். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். ஏழையாக இருந்து பணக்காரனானவர். ஏற்றுமதியில் மாதந்தோறும் 50 கோடிக்கும் மேல் டர்னோவர் செய்கிறார். அனாதிக்கும் இவருக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது இன்றும். இருவரும் விஜயவாடாவில் இருக்கும் மிக உயர்ந்த தரத்தோடு விளங்கும் கிளப்பில் மெம்பர்ஸ். மாதத்திற்கு ஒரு முறையாவது இருவரும் கிளப்பில் சந்திப்பர். ராகவ்விற்கு அழகான பெண்களின் மீதுள்ள காதலையும், அதன் விளைவாக அவர் மேற்கொள்ளும் ரகசிய நடவடிக்கைகளையும் அனாதி நன்கு அறிவான். ராகவிற்குப் பிடித்து விட்டால் அது யாராக இருந்தாலும் சரி கட்டிலில் சந்தித்தே ஆக வேண்டுமென்று நினைப்பார். அதற்கு எந்த வழி முறைகளையும் கையாள்வார். ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்ளப் போகின்றீர் என்று அடிக்கடி அனாதி எச்சரிப்பான். ரொம்பவும் எக்சைட்மெண்டா இருக்கும் அனாதி என்று சொல்லி சில சம்பவங்களைச் சொல்லி சிலிர்ப்பார். கேட்கும் அனாதிக்கு அந்த முகம் தெரியாத பெண்ணின் மீது கழிவிரக்கம் ஏற்படும். ராகவ் சற்றே பணக்காரத் திமிர் கொண்டவர். பணத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணமும் கொண்டவர். அவரைச் சுற்றி இருக்கும் நண்பர்களில் பலபேர் அவரை உசுப்பேற்றியே சில காரியங்களைச் சாதித்துக் கொள்வர்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த போது வெளி நாட்டில் நடக்கும் ஃபேரில் கலந்து கொள்வதற்காக ராகவ் செல்ல இருப்பதாகவும் ஆகையால் அடுத்த மாதம் சந்திக்கலாமென்றும் போனில் சொன்னார். சரி என்று அனாதியும் வேறு வேலைகளில் மூழ்கி விட்டான்.

ராகவின் ஆஃபீஸ் மேனேஜரிடமிருந்து வெகு ஆச்சர்யமான அழைப்பு. விபரம் இதுதான். அவர் வெளி நாட்டுக்குச் சென்ற ஃப்ளைட்டில் இருந்த ஏர் ஹோஸ்டஸ் வெகு அழகாய் இருந்திருக்கிறாள். பிசினஸ் கிளாசில் அவருடன் சென்ற அவரது நண்பர்கள் அவரை உசுப்பி விட, போதையின் மயக்கத்திலிருந்த ராகவ் அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்து கிஸ் அடித்திருக்கிறார். தொடர்ந்து அப்பெண்ணின் மீது அத்துமீற ஆரம்பிக்க, அந்தப் பெண்ணோ அதனையும் பொருத்துக் கொண்டு வேண்டாமென்று தடுத்தும், அறிவுரையும் சொல்லி இருக்கிறார். காமத்தின் வசப்பட்டும், போதையின் பிடியினில் சிக்கியும் இருந்த ராகவ் பணத்திமிரினால் எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்லுமாறும் மேலும் இன்னபிற பேச்சுக்களையும் பேச அப்பெண் அவரைப் பிடித்து தள்ளி விட்டு பைலட் கேபினுக்குள் அடைக்கலாமாகி விட, ராகவ் போதையினாலும் காமத்தினாலும் மயங்கி, சீட்டிலேயே படுத்து விட்டார்.

மலேசியாவில் இறங்கி வேறு ஃப்ளைட் பிடிக்க வேண்டும். போதையிலிருந்து தெளிந்த ராகவ் ஏரோபிளேனில் இருந்து இறங்கி வெளியே வர, மலேஷியன் போலீஸ் அவரைக் கைது செய்தது. கோர்ட்டில் ஆஜர் படுத்தி நான்கு கசையடிகளையும், இரண்டு வருட சிறைத்தண்டனையையும் வழங்கியது.

மலேஷியா என்ன இந்தியாவா? காசைக் கொட்டினால் சல்யூட் அடிக்கும் காவல்துறைக் கருப்புகள் இருக்கும் இந்தியாவைப் போல மலேஷியாவும் இருக்குமா என்ன? ராகவ் எவ்வளவோ முயன்றிருக்கிறார். அந்தப் பெண் கேஷை வாபஸ் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டாராம். எந்தப் பேரத்திற்கும் அப்பெண் ஒத்துப் போகவில்லை. விளைவு கசையடியுடன் இரண்டு வருட சிறைத் தண்டனை. ராகவ்வின் நண்பர்களெல்லாம் என்னென்னவோ முயற்சி செய்தனராம். ஒன்று நடக்கவில்லை.  இதற்கிடையில் நடந்த இன்னொரு கூத்தையும் ராகவின் மேனேஜர் விவரித்தார்.

ராகவ்விற்கு வழங்கப்பட்ட தண்டனை ஒரு வருடமும், இரண்டு கசையடிகளும் தானாம். நீதிபதிக்கே ஆள் விட்டுப் பார்க்க, கொதித்துப் போன அந்த நீதிபதி மேலும் ஒருவருடமும், இரண்டு கசையடிகளையும் சேர்த்து வழங்கி விட்டாராம்.

தொடர்ந்து ராகவ்வின் மேனேஜர் வைத்த வேண்டுகோள் எப்படியாவது அவரை மீட்டுத் தாருங்கள் என்பது. அதைத் தொடர்ந்து அனாதி தனது மலேசிய நண்பர்களைத் தொடர்பு கொண்டான். மலேஷியாவில் மிகப் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரின் உரிமையாளரும், மலேஷிய அரசாங்கத்தில் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டவருமான அனாதியின் நண்பர் ஒருவாரம் டயம் கேட்டார்.

ஒரு வாரம் சென்ற பிறகு அனாதியின் மலேஷிய நண்பர் சொன்னது. ராகவ் நீதித் துறையினரையும், காவல்துறையினரையும் பணத்தால் விலைக்கு வாங்க முயன்றிருப்பதாகவும் அதை அறிந்த மேலிடம் அவரின் மீது கடுங்கோபத்தில் இருப்பதாகவும் எக்காரணம் கொண்டும் ராகவ்விற்குச் சாதகமாய் எதுவும் செய்ய இயலாதென்றும் சொல்லிவிட்டார்கள் என்றும் சொன்னார்.

இவ்விடத்தில் ஒன்றினை நினைவில் கொள்க : இந்தியாவின் நீதித்துறை மற்றும் காவல்துறையோடு மலேஷிய நீதித் துறை மற்றும் காவல் துறைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

சிறையில் ராகவ்வைச் சந்தித்த போது ராகவ் சொன்னது “ இதே இந்தியாவாக இருந்திருந்தால்…… ?“.

நீங்கள் ஆடிய ஆட்டத்திற்கு இறைவன் உங்களை எங்கு போய் சிக்க வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்து சேர்ந்தான் அனாதி.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் : ராகவ்விற்கு என்ன வயது தெரியுமா ? அறுபது வயது. நான்குப் பேரக்குழந்தைகள் இருக்கின்றன.

3 Responses to விமான அழகியும் விஜயவாடா தொழிலதிபரும்

  1. Joe சொல்கிறார்:

    அறுபதிலும் ஆசை விடவில்லை?

    இந்தியாவில் சாமானியர்களுக்கு தான் தண்டனை. அரசியல்வாதிகள், பணக்காரர்களுக்கு என்றைக்கு தண்டனை கிடைத்திருக்கிறது?

  2. Lol@lol.com சொல்கிறார்:

    Murugeshaa, idhellam thevayaa?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: