கிஸ்வி சேகரின் கருப்பு முகம் !

முன்பே அவரைப் பற்றிய ஒரு பதிவைப் போட்டு வைத்தேன். மீண்டும் அவருக்கு எதிராக ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே விட்டது.

ஜேனியர் விகடனில் கிம்மம்மா என்ற கட்டுரையில் ஒரு பத்தி வருகிறது. அது,

அந்த வருஷம் தீபாவளிக்கு முதல் நாள் பெரிய வாளை(வாள்!!!!) கைது செஞ்சுட்டதா, எனக்கு ஒருத்தர் முதல் தகவல் கொடுத்தார். அப்பவும் அந்தம்மா கூட பேச முடியலை. மடத்துலயிருந்து போன் வந்தது. ‘நீ அந்தக் கட்சியிலயிருந்து ராஜினாமா பண்ணிடு. அவங்க சரியில்லை. இதை பால பெரியவரே உங்கிட்ட சொல்லச் சொன்னார். முடிஞ்சா மடத்துக்கு வந்துட்டுப் போ!’ என்று மடத்தோட மூத்த நிர்வாகி சொன்னார்.

‘நான் ராஜினாமா செஞ்சா, பெரியவா வெளியில வந்துடுவாரா? அது நடக்கும்னு சொல்லுங்க… இப்பவே ராஜினாமா செஞ்சுடறேன். ஆனா, நான் இங்க இருந்தாத்தான் அந்தம்மாகிட்ட என்ன ஏதுன்னு கேட்கவாவது முடியும்…’னு சொல்லிட்டேன். எனக்குத் தெரிஞ்சு, மடத்துக்கு சம்பந்தமான ஒரு காலேஜ் – கம் – ஆஸ்பத்திரி மேட்டர்லதான் அந்தம்மாவுக்கும், மடத்துக்கும் மோதல் வந்திருக்கணும்..!

அப்போ, சங்கரராமனை அரிவாளால் வெட்டியது யார் உங்க கடவுளா? குஜாலா இருக்கவே விடமாட்டேங்குறானேன்னு செத்துப் போடான்னு சொல்லி, கடவுளே ஐந்தாறு பேராக வந்து கொலை செய்துட்டுப் போயிடுச்சா ?

பாருங்கள் நண்பர்களே, இவர் சமூகத்துக்கு நல்லன செய்யப்போகிறாராம். மடத்து தலைமையைக் கைது பண்ணியவுடன் உடனே ராஜினாமா செய்து விட்டு வந்து விடனும் என்று சொன்னார்கள் என்று எழுதியிருக்கிறார். எஸ்விசேகரின் இக்கூற்றிலிருந்து அந்த மடத்தின் செயல்பாடுகளை சற்றே எண்ணிப் பாருங்கள்.

மடத்துக்குச் சம்பந்தமான ஆஸ்பத்திரியாம், காலேஜாம் அதற்காகத்தான் மோதலாம். கைதாம் என்று வாய்ப்புக் கிடைத்தால் என்ன ஒரு சப்பைக் கட்டு கட்டுகிறார் பாருங்கள். ஏழைப் பிராமணன் பாவம் சும்மா விடாதய்யா. சும்மா விடாது.

அடுத்து, தானாடாவிட்டாலும் தன் புத்தி ஆடும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அவரே சொல்லியிருப்பதை கீழே படித்துப் பாருங்கள்.

பெரியவாதான், ‘நீ நேரா அவரைப் போய்ப் பார். நம்ம மடம் சம்பந்தமான மேட்டரையும் பேசு’னு (அப்போதைய தமிழ்நாடு ஆஸ்பத்திரி பற்றிய ஒரு விஷயம் பேச்சுவார்த்தையில் இருந்தது) சொன்னார். அவரோட அட்வைஸ்படிதான் நான் அவரைக் கோட்டையில பார்த்தது. 2004- நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு தயாரான சமயம் அது.

‘நான் அரசியல்ல என்ன பண்ணணும்னு நீங்களே சொல்லுங்கம்மா’ன்னு பேச்சை ஆரம்பிச்சேன். ‘உங்களை என் கட்சிக்கு வரச்சொல்ல மாட்டேன். நீங்களா வந்தா, தாராளமா சேர்த்துப்பேன்’னு அவங்க சொல்லவும்… ‘எனக்கு ராஜ்யசபா பதவி கொடுத்தா நல்லாயிருக்கும். டெல்லி பாலிடிக்ஸ் மூலமா நிறைய சாதிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு சொன்னேன். ‘எம்.எல்.ஏ-ன்னா நூத்துக்கும் மேல இருப்பாங்க. மந்திரிங்கன்னா முப்பதுக்கும் மேல இருப்பாங்க. ஆனா, ராஜ்யசபா உறுப்பினர் ஒண்ணு ரெண்டுதான் காலியாகும். அதைக் கொடுக்க நான் உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது’ன்னு சொன்னவங்க, ‘கட்சிக்காக உழைச்சவங்க, பாரம்பரியம் மிக்க தலைவர்கள்னுதான் ராஜ்யசபா எம்.பி. பதவியை நான் கொடுக்குறது வழக்கம்’ அப்படின்னாங்க. நானோ, ‘ஆமாம்மா… எஸ்.கிஸ்.சந்திரன் அளவுக்கு எனக்கு பாரம்பரியம் இல்ல. அவர் அளவுக்கு உங்க கட்சியில வேறு பெரிய தலைவரும் இல்லை’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன். பதிலுக்கு லேசா சிரிச்சவங்க, ‘சில சமயங்கள்ல அப்படி நடந்துடுது, சேகர்’னாங்க.

அடுத்தவனுக்கு குழி தோண்டியே ஆக வேண்டுமா? ஏன் சந்திரன் ராஜ்ய சபா எம்பி ஆகக் கூடாதா ? குறுக்கில் நூலைப் போட்டால் போதுமா ? ஏன் சார்  சந்திரன் அவர்களின் வாயில் மண்ணை அள்ளிப் போட முயன்றீர்கள் ? அந்த அளவுக்கு அவரின் மேல் வெறுப்பா ?

கடவுள் என்று ஒன்று இருக்குமென்றால், சங்கரராமனின் ஆத்மா என்று ஒன்று இருக்குமென்றால்…..

5 Responses to கிஸ்வி சேகரின் கருப்பு முகம் !

 1. vimarisanam சொல்கிறார்:

  சேகரைப் பற்றிய என் கட்டுரை (29.07.2009 )யில் அவரது வடிகட்டிய சுயநலத்தைப் பற்றியும் காஞ்சி மடம் பற்றியும் ஏற்கெனவே எழுதி இருப்பதை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

  இப்போதெல்லாம் சேகர் சிரித்துக்கொண்டே போஸ் கொடுப்பதை பார்த்தால் எனக்கு வேறு மாதிரி இருக்கிறது.

  நாலு மாதம் கழித்து – ராஜ்ய சபா நியமனங்கள் முடிந்த பிறகு – கலைஞர் கொடுக்கும் ‘ அல்வா ‘வை சாப்பிட்ட பிறகு மீண்டும் சேகர் முகத்தில் இதே சிரிப்பு எப்படி இருக்கிறது பார்க்க வேண்டும் !

  காவிரிமைந்தன் -http://vimarisanam.wordpress.com

 2. Jawahar சொல்கிறார்:

  சேகர்-அ தி மு க விவகாரத்தில் நான் அ தி மு க வை குறை சொல்ல மாட்டேன். சரியோ தவறோ ஒருத்தரை தலைவர் என்று ஏற்றுக் கொண்டு விட்டால் அவருக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும். அது இல்லாவிட்டால் எந்தத் தலைமையிலும் இயங்க முடியாது.

  http://kgjawarlal.wordpress.com

  • அனாதி சொல்கிறார்:

   தலைமைக்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் ஜவஹர். இவ்விடத்தில் தான் தமிழன் தன்னை மொத்தமாக அழித்துக் கொள்கிறான். கட்சி என்பது பலரால் ஒருங்கினைக்கப்பட்டு, கொள்கைகள் வகுக்கப்பட்டு, சில நியதிகளோடு ஆரம்பிக்கப்படும். தலைவர் மட்டுமே கட்சி இல்லை.

   ஹீரோயிசத்துக்குக் காரணமே நாம் தான்.

 3. yarl சொல்கிறார்:

  தகவளுக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: