விலையேற்றத்தின் மர்மம் என்ன ?

பண வீக்க விகிதம் குறைந்திருக்கும் இத்தருணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு வருவது மிகப் பெரிய மர்மமாக இருக்கிறது.

பணவீக்க விகிதம் மொத்தமான பொருட்களின் விலைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. பூஜ்ஜியத்திற்கும் கீழே இருக்கும் பண வீக்க விகிதம் உண்மையானது என்றால் பொருட்களின் விலை நிச்சயமாய் குறைந்திருக்கும். ஆனால் குறையவில்லை மாறாக விலையேறுகிறது. காரணம் என்ன ?

எளிதாகப் புரிந்து கொள்ள,

கடந்த வருடம் 5 புள்ளிகளாக பணவீக்க விகிதம் இருந்த போது பருப்பின் விலை 30 ரூபாய் இருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் பூஜ்ஜியமாக இருக்கும் பண வீக்க விகிதம் பருப்பின் விலையை ஐந்து ரூபாய் குறைத்து அல்லவா இருக்க வேண்டும். மாறாக பருப்பின் விலை 50 ரூபாய் ஆகியிருக்கிறதே ? எப்படி ? மொத்த விலைகளில் பட்டியலில் இருந்து திரட்டப்படும் பண வீக்க விகிதமும், பொருட்களின் விலைகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறதே அது ஏன் ?

இடையில் என்ன நடக்கிறது ? பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வது அரசுக்குத் தெரியாதா ?

மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இருக்கும் மலையளவு மாறுபாடுகளை அரசு கண்டுகொள்ளாதது போல் நடிப்பது ஏன் ?

இந்த வேறுபாட்டுக்கு காரணம் என்ன ? யாரால் விலையேற்றம் உருவாக்கப்படுகிறது என்று பார்த்தால், மொத்த வியாபாரிகளும், சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தான் என்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

கள்ளச்சந்தையை உருவாக்கி பொருட்களின் விலையினை அதிகப்படுத்தி விற்கும் தரகு வியாபாரிகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையில் கால் பதித்திருக்கும் உள் நாட்டு வெளி நாட்டு பகாசுரக் கம்பெனிகளின் லாபத்திற்காக அரசு ஒன்றும் தெரியாதது போல நடந்து கொள்கிறதா ?

கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாய் சில்லறை விலைக்கும் மொத்த விலைக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசத்தை வரப்போகும் நன்கொடையினை உத்தேசித்து அரசால் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறதா ?

நூறு ரூபாய் கூலி வாங்கும் அன்றாடத் தொழிலாளர்கள் விலையேற்றத்தின் காரணமாக உணவு கூட கிடைக்காமல் சாக வேண்டுமா? 4000 ரூபாய் சம்பளம் வாங்கும் குடும்பத்தலைவன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா ? இவர்களால் எப்படி விலையேற்றத்தைச் சமாளிக்க முடியும்? வயிறு நிரம்பச் சாப்பிடுவதற்கு என்ன செய்வார்கள் ? ஏழை மக்களுக்குப் பசியையும், பட்டினையும் தரவா அரசு விரும்புகிறது.

இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா இல்லை கார்பொரேட் கம்பெனிகளின் ஆட்சியா ?

குறிப்பு : இது அரசுக்கு எதிரான பதிவாக கருதினால், சம்பந்தப்பட்டவர்கள் எழுதினால் கட்டுரை நீக்கப்படும்…

One Response to விலையேற்றத்தின் மர்மம் என்ன ?

  1. seidhi valaiyam சொல்கிறார்:

    Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: