இலங்கைத்தமிழர் – அறிஞர் அண்ணாவின் கட்டுரை(பதிவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை)

வரலாறினைப் பற்றிய எனது பதிவொன்றினை பதிவர்கள் முன்பே படித்திருக்கலாம். வரலாற்றில் பதிந்து கிடந்த ஒரு மாமனிதரின் எழுத்தினை இங்கு சம்பந்தப்பட்டோர் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு வெளியிடுகிறேன்.

1964இல், காஞ்சி என்ற இதழில் பேரறிஞர் அண்ணாவினால் எழுதப்பட்ட இனி உன் கதி இதுவோ என்ற கட்டுரை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. நானெல்லாம் பிறக்குமுன்னே எழுதப்பட்ட அக்கட்டுரை ஒரு இனத்தின் ஐம்பது ஆண்டுகால பிரச்சினையை இந்தியா எப்படி எதிர் கொண்டுள்ளது என்பதினை தெளிவாகக் காட்டுகிறது.

இலங்கைத் தமிழர்கள் தமிழர்களாலும், உலக மக்களாலும் கைவிடப்பட்ட கொடுமையான வரலாற்று நிகழ்வுகள் ரத்தத்தின் வீச்சத்தோடு வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன.

எத்தனை எத்தனையோ தமிழ் மக்களின் வாழ்க்கை அடக்கு முறையாளர்களால், பாசிச வெறி பிடித்த தலைவர்களால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்று சொல்லி ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் தலைவர்கள் செய்யும் மக்கள் விரோத, அக்கிரமச் செயல்களை வரலாறு தன்னுள் பதிந்து கொண்டே வருகிறது. அவ்வாறு வரலாற்றில் பதிக்கப்பட்ட ஒரு பதிவு தான் இது.

மக்கள் சேவை என்ற சொல் தீவிரவாத, கொலைகார, பாசிச போக்கினை வெளிப்படுத்தும் சொல் என்பது தான் உண்மை.

சேவை என்றால் அநீதி என்றே அர்த்தம் கொள்ளலாம் என்ற அளவுக்கு மக்கள் சேவையில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களால் எண்ணற்ற மக்கள் சாவுக்குழிக்குள் தள்ளப்பட்டிக்கின்றார்கள் என்பது வரலாற்றில் காணக்கிடைக்கிறது.

அப்படி ஒரு சம்பவத்தைத் தான் அறிஞர் அண்ணா வெளிப்படுத்தியிருக்கிறார்.

கட்டுரையின் முதல் மூன்று பக்கங்களைப் படிக்க,
anna – sri lanka

கட்டுரையின் கடைசிப் பக்கத்தைப் படிக்க,
anna – Sri lanka2

நன்றி : மாற்று இணையதளம் மற்றும் காஞ்சி இதழ்,ஆசிரியர் மற்றும் உரிமையாளர்.

2 Responses to இலங்கைத்தமிழர் – அறிஞர் அண்ணாவின் கட்டுரை(பதிவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை)

 1. rajesh சொல்கிறார்:

  anrilirrunthu inru varai congress thamilanai irantaam thara kutimaganay mattume natathi kontirukkirathu. naamum poonaikku yaar mani kattuvarkal enru katthukontirukkirom.congress poonaikku eliya mani kattum? viraivil taminattil puli veeram paynthu varum…………tamilanin orrumai matumthan atharkku vazhi vakkukkum

  • அனாதி சொல்கிறார்:

   ராஜேஷ், கருத்திட்டமைக்கு நன்றி. யாரையும் குற்றம் சொல்ல முடியாது இவ்விஷயத்தில். விதியின் விளையாட்டில் மக்கள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். ஒரு உதாரணம் : அன்றைய யூதர்களின் நிலை, இன்றைய நிலை – இவற்றையெல்லாம் பார்த்தால் ஏதோ ஒரு சக்தி மக்களின் மனதுக்குள் புகுந்து கொண்டு ஆட்டுவிப்பதை கண்கூடாகக் காணலாம்.

   இப்பிரச்சினைக்கு இவர் காரணம், அவர் காரணமென்று சொல்வதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமென்றால் சுவாரசியமாய் இருக்கலாம். ஆனால் நடைமுறை உண்மை என்பது வேறாக இருக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

   காங்கிரஸ் கட்சியோ, திமுகவோ, அதிமுகவோ மற்ற எந்த கட்சிகளோ மக்களின்றி இயங்க முடியாது அல்லவா. மக்கள் எவ்வழியோ மன்னவனும் அவ்வழியே என்று சொல்லுவார்கள். ஆகையால் திருந்த வேண்டியது மக்கள். கட்சிகள் அல்ல என்பது என் கருத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: