பழுக்க காய்ச்சிய கம்பியும் பெண்ணின் வாழ்வும் ….

பட்டுக்கோட்டை மேலப்பாளையத்திலிருந்து யாரோ ஒரு பெண் எழுதிய கடிதமொன்றை ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு : வழிதவறியவரின் கண்ணீர் கடிதம்.

சுருக்கமான விஷயம் இதுதான். திருமணம் முடித்ததும் கணவன் வெளி நாட்டிற்கு சம்பாதிக்கச் சென்று விட்டார். உடல் தேவையை சமாளிக்க இப்பெண் வெளியே சந்தோசத்தை நாடியிருக்கிறார். ஒன்று இரண்டாகி அப்படியே விரிவடைந்தும் இருக்கிறது. கிட்டத்தட்ட கால் கேர்ளாக மாறி விட்டிருக்கிறார். இச்சமயத்தில் ஒரு குரூப் (கலாச்சார பாதுகாவலர்கள்) அந்தப் பெண்ணைக் கடத்தி, அவளது உறுப்பில் பழுக்க காய்ச்சிய கம்பியை நுழைத்து விட்டிருக்கிறது. இதுபோல நடந்து கொண்டிருக்கும் மற்ற பெண்களிடமும் காட்டச் சொல்லி போன் மேல் போன் போட்டுக் கொண்டிருக்கின்றார்களாம்.

கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே டைப் செய்து தருகிறேன்.

‘என் கதறலயும் துடிப்பையும் சட்டை பண்ணிக்காமல், ‘புருஷனைவிட்டு வெளியே போய் சாதிவித்தியாசம் பார்க்காம(?) அலையிற மத்தநாய்கள்கிட்டேயும் போய் சொல்லுடி… அவள்களும் திருந்தணும்…. அப்படியும் திருந்தாட்டி, அடுத்தது கொலைதான்”னு சொல்லிக்கொண்டே என்னை தலை குப்புற ரோட்டோரம் தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். இன்னும் அந்த வலி என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறது. நான் பண்ணிய பாவத்துக்கு கிடைத்த தண்டனையாக நினைத்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் ட்ரீட்மென்ட்டுக்கு கூட வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். நான் இனிமேல் எந்த தப்பும் பண்ண மாட்டேன். என் கணவரும் என் குழந்தைகளும்தான் இனி எனக்கு உலகம். அவர்கள் மேல சத்தியமா நான் திருந்திட்டேன். என் கணவர் வந்ததும், அவர் காலை என் கண்ணீரால் கழுவி மன்னிப்புக் கேட்க முடிவெடுத்துவிட்டேன். ஆனால், இதன் பிறகும்… எங்கள் ஊர்க்காரர்கள் என்னை நிம்மதியா வாழ விடவில்லை. தினமும் எனக்கு போன் பண்ணி, ”அவளுகள்ட்டயும் போய் உன் காயத்தைக் காட்டுடி. அதைப் பார்த்தாதான் அவளுக திருந்துவாளுங்க” என மிரட்டுகிறார்கள். எனக்கு வாழ்வதா… சாவதா என தெரியவில்லை. நீங்கள்தான் எங்க ஊரில் நடக்கிற இந்த கொடுமையை போலீஸ் கவனத்துக்கு கொண்டு போய், ஏதாவது நடவடிக்கை எடுக்க வழிபண்ணணும்…’

மேற்கண்டது அப்பெண் எழுதிய கடிதத்தின் கடைசி பாரா.

அப்பெண் எனது இந்த தளத்தை படிக்க நேர்ந்தால், அவர்களுக்காக ஒரு செய்தி.

உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன் பெண்ணே, நீ எந்தத் தவறும் செய்யவில்லை. உடல் தேவை என்பது சாதரணமானது. திருந்தி விட்டேன், தப்பு பண்ண மாட்டேன் என்று ஏன் தாங்கள் எழுதுகின்றீர்கள். அப்படியே தாங்கள் செய்தது தவறு என்று எண்ணினால் அதற்கு காரணம் தாங்கள் இல்லை. அதனால் கவலைப்படவும் தேவையில்லை. இச்சமூகம் ஆணாதிக்க கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் காடு. மிருகங்களைக் கண்டு தாங்கள் கவலைப்படவும் தேவையில்லை. துணிந்து எதிர்த்து நில்லுங்கள் தோழி. நாய்கள் வாலைச் சுருட்டி கவட்டிக்குள் வைத்தவாறு தெறித்து ஓடிவிடும். தாங்கள் செய்த ஒரே தவறு என்னவென்றால் தாங்கள் செலக்ட் செய்த முதல் ஆண். அவ்விடத்தில் தான் தவறு செய்திருக்கின்றீர்கள். அதனால் என்ன குடிமுழுகிப் போய் விட்டது ? ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தை இனிமேல் பாருங்கள். அவ்வளவு தான். குற்றவுணர்ச்சியில் குறுகிப் போய் விடாதீர்கள்.

மனித சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறேன் :

அவளை மட்டும் சூடு வைத்தீர்களே, அந்தப் பெண்ணிடம் உறவு வைத்த கொழுப்பெடுத்த ஆண்களை என்ன செய்யப்போகின்றீர்கள்? பெண்ணுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதியா ? உணர்ச்சி இருக்கும் அந்தப் பெண் தன் உடல் தேவையை நிறைவேற்ற ஏன் வேறு வழியைத் தேர்ந்தெடுத்தாள் என்று யோசித்துப் பார்த்தீர்களா ? அவளை அந்த நிலைக்கு ஆட்படுத்தி விட்டுச் சென்ற அவளது கணவனை என்ன செய்யப்போகின்றீகள் ? சமுதாயத்தின் பேரில் பெண்களை உயிரோடு கொன்று கொண்டிருக்கும் மதமும், ஜாதியும் தேவைதானா? அப்பட்டமான மனித உரிமை மீறல்களை செய்து வரும் அயோக்கியர்களை யார் என்ன செய்ய முடியும்.

சிட்னியில் ஒன்பது பெங்குவின்கள் இறந்து போனதைக் கூட போலீஸில் கேஸ் பைல் செய்து விசாரித்து வருகிறார்கள். பெங்குவின்களை விடவா பெண்கள் கீழானவர்கள் ?

முடிவாய் ஒன்று : அரசியல்வாதிகளாலும், கோடீஸ்வரர்களாலும், மதத்தின் பெயராலும் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நடக்கின்றது. இந்தியாவில் மனிதர்கள் வாழ்கின்றார்களா இல்லை மிருகங்கள் வாழ்கின்றார்களா என்பது சந்தேகத்துக்கு உரிய விடயமாய் தெரிகிறது.

நன்றி : ஜுனியர் விகடன்

4 Responses to பழுக்க காய்ச்சிய கம்பியும் பெண்ணின் வாழ்வும் ….

 1. johan சொல்கிறார்:

  அந்தக் கடிதம் படித்தேன்.
  இக்கயவர் முகத்தில் காறித் துப்பவேண்டும் போல் இருந்தது.
  தவறு எல்லோர்மேலும் உண்டு. தண்டனை இவரொருவருக்கே!
  அதுவும் தவறு செய்ய ஒரு வகையில் நிர்ப்பந்திக்கப்பட்டவர்.
  இந்த ஆண்களைத் தேடி இவர்களுக்கு அங்கே “மிளகாய்த் தூள்” தூவினால் என்ன??
  மிக அநீதி.
  பே ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்…..மனைவியும்;துணைவியும் வைத்திருக்கும்
  அதிகாரங்களுக்கும் , மடங்களுக்கும் இவர்கள் தண்டனை கொடுப்பார்களா???

 2. zakir சொல்கிறார்:

  arumaiyana pathivu,valthukkal anathi.

 3. tamilarnet சொல்கிறார்:

  good

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: